ஏளனச் சிரிப்பு
அமைதியை கிழித்தெறிந்து
பாய்ந்து வருமொரு
துர்வார்த்தை
தாழ்ந்திருப்பவர்களிடம்
காட்டப்படும்
சிறு வேற்றுமை
அன்பானவர்களால்
தெளித்து விடப்படுமொரு
அமிலப்பார்வை
மனித மனங்களை
உடைப்பதற்கு
பெரிதாக ஏதும் முயற்சிக்க
வேண்டியதில்லை
இவைகளே
போதுமாயிருக்கின்றது.