
![]()
மயிலிட்டியூர் சிற்பாசாரியார் அமரர் கனகசபை அவர்களின் புதல்வனும், ஸ்தபதி அமரர் நவரத்தினம் அவர்களின் மாணவனுமாகிய சிற்பாசாரியார் திரு.இராஜலிங்கம் (மருந்து அண்ணர்) அவர்கள் கலாபூசணம் விருதினை 23 டிசம்பர் 2016ல் இலங்கைத் தலைநகர் கொழும்பில் பெற்றுக்கொண்டார். விருதினைப் பெற்று கலைத்துறைக்கும், எமது மயிலிட்டிக்கும் பெருமை சேர்த்த் திரு.இராஜலிங்கம் (மருந்து அண்ணர்) அவர்களிற்கு மயிலிட்டி மக்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
![]()
சுவிற்சர்லாந்து நாட்டில் இயங்கும் (S R M) திரு. இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம் தமிழ்க் கல்விச்சேவையில் நடாத்தப்பட்ட "அயலகத் தமிழாசிரியர்" பட்டயப் படிப்பில் சித்தியடைந்து முதல் பட்டயமளிப்பு விழாவில் பட்டயம் பெற்ற எமது மயிலை மகள் செல்வி. தங்கவடிவேல் ஆராதனா அவர்களுக்கு நமது மயிலிட்டி மக்கள் சார்பாக வாழ்த்துக்களைக் கூறி பெருமையடைகின்றோம். வாழ்த்துக்கள்.
![]()
உயிர்வரை இனித்தாய் திரைப்படத்தில் பிரதான பாத்திரம் ஏற்று நடித்த நர்வினி டேரி சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பெண்களை முதன்மைப் படுத்தி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தில் தனக்கு வழங்கப்பட்ட பாத்திரத்தை செவ்வனே நடித்துள்ளார் என்று திரையிடப்பட்ட இடமெல்லாம் நர்வினி ரசிகர்களால் பராட்டப்பட்டுள்ளார். ![]() மயிலிட்டி வீரமாணிக்கதேவன் துறையைச் சேர்ந்த லண்டன் ஈஸ்ற்காமில் (East Ham, London) வசித்து வரும் திரு.நாகேந்திரம் கருணாநிதிக்கும் அவரின் மனைவி சக்தியேஸ்வரி கருணாநிதிக்கும் லண்டன் சைவ முன்னேற்றச் சங்கத்தின் ஆதரவில் முதல் முறையாக ஆசியக் கண்டத்திற்கு வெளியில் தமிழ்நாடு திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் திருவாவடுதுறை ஆதீனத்தினால், மதிப்பிற்குரிய ஆசான் "செந்நெறிச் செம்மல் "திருவாளர் சூ.யோ.பற்றிமாகரன் [S.J.Fatimaharan BA, Special Diploma (Oxford), BSC, PG Diploma, MA (Politics of democracy), MA (Tamil) ] அவர்களால் லண்டனில் 2012 ஆம் ஆண்டு ஒரு வருடமாக நடத்தப்பட்ட சைவசித்தாந்த நேர்முகப் பயிற்சிநெறியை நிறைவு செய்து, ![]() வணக்கம் "உயிர் வரை இனித்தாய்" திரைப் படத்தின் ticket (நுழைவுச் சீட்டுகள் ) பெற்று கொள்ள ........0635307671 மற்றும் கலைஞர்கள் ஆதரவாளர்கள் அனைவரும் இவ் திரைப்படத்திற்க்கு ஆதரவு வழங்கி டென்மார்க்கில் இருந்து வருகை தரும் எமது ஈழத்து கலைஞர்களின் முயற்சிகளுக்கு கை கொடுப்போம் . "எமது படைப்புக்களை நாமே பலமாக்குவோம் ![]() 20/06/2014 அன்று தமிழிதழ் மற்றும் GTAA இணைந்து நடாத்திய “சாதனைத்தமிழா” கலைஞர்களுக்கான மணிமகுடம் நிகழ்வு மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது ஐரோப்பிய ரீதியில் வெவ்வேறு நாடுகளிலிருந்து கலைஞர்கள் மற்றும் இந்தியாவிலிருந்து நடுவர்களில் ஒருவரும் சிறப்பு விருந்தினரும் தென்னிந்திய நடிகர் ஈழத்து மைந்தன் ஜெய் ஆகாஷ் அவர்களும் கலந்து நிகழ்வினை சிறபித்தார்கள். |
முகவுரைமயிலிட்டியின் சாதனையாளர்கள் பதிவுகள்
October 2017
முழுப்பதிவுகள் |