டென்மார்க்கில் வாழும் திரு திருமதி ஜெயாஞ்சலி (சுபத்திரா) இரவிசங்கர் தம்பதியினரின் மகன் B.டேரியஸ் அவர்கள் சொல்லிசைப் (RAP) பாடகராக பரிணாமம் பெற்று பிரகாசித்து வருகின்றார். இவரது சகோதரிதான் "உயிர்வரை இனித்தாய்" திரைப் படத்தின் கதாநாயகி, மற்றும் அண்மையில் சிறந்த இயக்குனருக்கான "ஒளிக்கீற்று" விருதையும் பெற்றவர் என்பதை ஏற்கனவே அறிந்திருப்பீர்கள். இளையோரினை ஈர்க்கும் ராப் பாடல்கள் பலவற்றை வெளியிட்டுள்ளார். டேரியஸ் அவர்களின் கலைப்பயணம் தொடர்ந்து சிறக்கவும், மேலும் பல புதிய எல்லைகளைத் தாண்டித் தொடரவும் மயிலிட்டி மக்கள் சார்பில் எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். அண்மையில் ஜேர்மனியில் இயங்கும் "Tamil Artist Area" எனும் இணையத்திற்கு அவர் அளித்த நேர்காணல் மற்றும் பாடல்களையும் காணலாம். "உயிர்வரை இனித்தாய்" 22 மார்ச் அன்று டென்மார்க் திரையரங்கில் பிரமாண்ட வெளியீட்டு திருவிழா..!2/3/2014 |
முகவுரைமயிலிட்டியின் சாதனையாளர்கள் பதிவுகள்
October 2017
முழுப்பதிவுகள் |