"சிந்தனை உலகம்"
கொலம்பஸ் சுற்றாத உலகு வேண்டும்
நீல் ஆம்ஸ்ரோங் கால் வைக்காத நிலவு வேண்டும் காந்தி பேசாத அகிம்சை வேண்டும் சங்கிலியனிடம் இல்லாத வீரம் வேண்டும் உலக அழகிகளிடம் இல்லாத அழகு வேண்டும் மலர்களிடம் இல்லாத வாசனை வேண்டும் தேன்களில்லா இனிமை வேண்டும் சத்தமில்லா மெளனம் வேண்டும் தாய் தாரத்திடம் இல்லா அன்பு வேண்டும் தந்தையிடம் இல்லா அரவணைப்பு வேண்டும் மழலைகளிடம் இல்லா மழலை வேண்டும் மானிடம் இல்லா உலகு வேண்டும் நான் இனிமையாக அதில் வாழ்ந்திடல் வேண்டும் ஏழ்மையை மதிக்கும் மனம் வேண்டும் பணக்காரக் கர்வத்தினை ஒழித்திடல் வேண்டும் தர்மம்தனை இப் புதிய உலகில் நிலைநாட்டிட வேண்டும் நன்மைகள் செய்திடப் பழகிடல் வேண்டும் யுத்தமில்லா, இரத்தம் சிந்தா உலகு வேண்டும் உறவுகள் உறவுகளைத் தேடி உறவாடும் மனம் வேண்டும் பழமை தனை மதித்திடல் வேண்டும் புதுமை தனை ஏற்றிடல் வேண்டும் இப்புதிய சிந்தனை உலகில் எல்லோரும் இனிமையாக வாழ்ந்திடல் வேண்டும். ச. சாந்தன் பதிவு: 10/11/12 |
|