தொடர் 26
மயிலைக்கவி சண்முகநாதன் கஜேந்திரன்
|
காத்தவராயன் வசனம்:
|
வேடுவரே மிக்கநன்றி. சென்று வாரும். தம்பி சின்னான்...
|
|
சின்னான் வசனம்:
|
அண்ணா, வாருங்கள் மாளிகைக்குச் செல்வோம்.
|
|
காத்தவராயன் வசனம்:
|
அண்ணா, வாருங்கள் மாளிகைக்குச் செல்வோம்.
|
|
சின்னான் வசனம்:
|
ஆகையால்,
|
|
காத்தவராயன் பாடல்:
|
தம்பி நான் வரமாட்டேன் வரமாட்டேன்
|
|
சின்னான் பாடல்:
|
அண்ணை நான் விடமாட்டேன் விடமாட்டேன்
|
|
காத்தவராயன் பாடல்:
|
வரமாட்டேன்! தம்பி நான் வரமாட்டேன் வரமாட்டேன்
|
|
சின்னான் பாடல்:
|
விடமாட்டேன்! நான் விடமாட்டேன் விடமாட்டேன்
|
|
காத்தவராயன் பாடல்:
|
நீ தான் என்னை வெறுத்திட்டாலும் தாயார் என்னைக் கோபித்தாலும் - அந்தத் தையலாள் மாலையை மாமணம் செய்யாமல் வரமாட்டேன் தம்பி நான் வரமாட்டேன் வரமாட்டேன்
|
|
சின்னான் பாடல்:
|
தாங்கள் என்னை விரட்டினாலும் தையலில் நீர் மயங்கினாலும் - அன்னை மாரியின் அனுமதி இன்றியே மணஞ்செய்ய விடமாட்டேன் நான் விடமாட்டேன் விட மாட்டேன்
|
|
காத்தவராயன் பாடல்:
|
தம்பி நான் வரமாட்டேன் வரமாட்டேன்
|
|
சின்னான் பாடல்:
|
அண்ணை நான் விடமாட்டேன் விடமாட்டேன்
|
|
சின்னான் வசனம்:
|
அண்ணா, "தாயிற் சிறந்த கோவிலுமில்லை தந்தை சொல்மிக்க மந்திரமில்லை” எனும் வாக்கிற்கிணங்க நீங்கள் தாயாரிடம் சென்று அனுமதியும் ஆசியும் பெற்ற பின்பு தான் அந்த மாலையை மணம் செய்வது நல்லது.
|
|
காத்தவராயன் வசனம்:
|
தம்பி தக்கநேரத்தில் எனக்குப் புத்திபுகட்டினாய். எனது அன்னையை நினைவுபடுத்தி விட்டாய். நான் எனது அம்மாவிடம் சென்று அனுமதி பெற்றுவருகிறேன். அது வரை நீ உனது மாளிகைக்குச் செல்வாயாக நான் எந்த வேளை அழைத்தாலும் அந்த நேரம் வந்து எனக்கு உதவி செய்வாயாக.
|
|
சின்னான் வசனம்:
|
அப்படியே செய்கிறேன் அண்ணா
|
|
சின்னான் பாடல்:
|
தன்னுடைய மாளிகைக்கோ தொட்டியத்து ராஜன் - இப்போ தானோடிப் போகலுற்றேன் பாளையத்து ராஜன்
|
|
காத்தவராயன் வசனம்:
|
படிப்பதற்காய் பாடசாலை சென்ற தன் பிள்ளை, இன்னமும் படிப்பு முடிந்து திரும்பி வரவில்லையே என்ற ஏக்கத்தவிப்புடன் காத்திருக்கும் எனது அன்னைக்கு, நந்தவனம் சென்று புஸ்பங்களைக் கொய்து, பொய்கையில் நீரெடுத்து, பாதங்கழுவி வழி பாடியற்ற வேண்டும். இதோ நந்தவனம் செல்கின்றேன்.
|
|
காத்தவராயன் பாடல்:
|
பூங்காவைத் தேடியெல்லோ காத்தலிங்கன் நானும் - இப்போ போதரவாய்ப் போகலுற்றேன் மாரி பிள்ளை நானும்
தோட்டம் திறந்தல்லவோ காத்தலிங்கன்- நானும் தொன்னை தைத்துப் பூவெடுத்தேன். கையாலே பூ வெடுத்தால் காத்தலிங்க சாமி காம்பழுகிப் போகுமென்று மதியாலே பூவெடுத்தால் காத்தலிங்கன் நானும் மலர் வாடிப் போகுமென்று வெள்ளியினால் ஒரு கொக்கை கட்டி காத்தலிங்க சாமி விதம் விதமாய்ப் பூவெடுத்தேன் தங்கத்தினால் நல்ல கொக்கை செய்து காத்தலிங்கன் நானும் தகுந்த மலர் தானெடுத்தேன் அத்தலரி வண்ணக் கொத்தலரி காத்தலிங்க சாமி அடுக்கலரிப் பூவெடுத்தேன் சீர் குரும்பை செவ்வந்திப் பூ செண்பகப் பூ-நானும் செவ்வரத்தைப் பூவெடுத்தேன் |
|
காத்தவராயன் வசனம்:
|
புஸ்பங்கள் எடுத்துவிட்டேன் இனி நீர் எடுக்கவேண்டும்.
|
|
காத்தவராயன் பாடல்:
|
ஒடுகிற கெங்கையிலே காத்தலிங்கன் நானும் ஒரு செம்பு நீரெடுத்தேன்
பாய்ந்து வரும் கெங்கையிலே காத்தலிங்கன் – நானும் பக்குவமாய் நீரெடுத்தேன் |
|
காத்தவராயன் வசனம்:
|
நல்லது பூஜைக்கு வேண்டிய புஸ்பங்களும், நீரும் எடுத்து விட்டேன் இனி, தாயாரிடம் செல்ல வேண்டும்.
|
|
காத்தவராயன் பாடல்:
|
அம்மாவைத் தேடியெல்லோ காத்தலிங்கன் நானும்-இப்போ அன்புடனே போகலுற்றேன் மாரிபிள்ளை நானும்
தாயாரைத் தேடியெல்லோ காத்தலிங்கன் நானும்-இப்போ தயவுடனே தான் நடந்தேன் மாரிபிள்ளை நானும்' மாதாவின் மாளிகையில் காத்தலிங்கன் நானும்-மன மகிழ்வுடனே வந்தும் நின்றேன் மாரிமகன் நானும் |
|
|
திரை மாளிகை
பின் முத்துமாரி அம்மன் வரவு |
|
காத்தவராயன் வசனம்:
|
பாடசாலைக்குப் படிக்கச் சென்ற மகன் நீண்ட காலம் தன்னைப் பார்க்க வரவில்லை என்ற சீற்றத்துடன் தாயார் வீற்றிருக்கின்றார் போலும். முதலில் சாந்தப்படுத்த வேண்டும்.
|
|
காத்தவராயன் பாடல்:
|
பாதங் கழுவியெல்லோ காத்தலிங்கன் நானும் பட்டுக் கொண்டு ஈரம் தான் துடைத்தேன்
கொண்டு வந்த பூமலரை காத்தலிங்க சாமி குபு குபென நான் சொரிந்தேன் எடுத்து வந்த பூமலரை காத்தலிங்க சாமி இன்பமுடன் நான் சொரிந்தேன் பறித்து வந்த பூமலரை காத்தலிங்க சாமி பத்தினிக்கே நான் சொரிந்தேன் ஆய்ந்து வந்த பூமலரை காத்தலிங்கன் - எந்தன் அம்மாவுக்கே நான் சொரிந்தேன் வாரிவந்த பூமலரை காத்தலிங்க சாமி வகை வகையாய் நான் சொரிந்தேன் |
|
காத்தவராயன் வசனம்:
|
சரி, இனித் தாயாரை நமஸ்கரிக்க வேண்டும்.
|
|
காத்தவராயன் பாடல்:
|
முக்கால் வலமாய் வந்தோ காத்தலிங்கன் நானும் - அம்மாவை முடி வணங்கித் தெண்டனிட்டேன் மாரிபிள்ளை நானும்
நாற்கால் வலமாய் வந்தோ காத்தலிங்கன் நானும் - அம்மாவை நமஸ்கரித்தோ தெண்டனிட்டேன் மாரிமகன் நானும் ஐக்கால் வலமாய் வந்தோ காத்தலிங்கன் நானும் - அம்மாவை அடி வணங்கித் தெண்டனிட்டேன் மாரி பிள்ளை நானும் பாதம் சரணம் என்றோ காத்தலிங்கன் நானும் - அம்மாவின் பொற்பாதம் சரணமிட்டேன்மாரி பிள்ளை நானும் சரணம் சரணமென்றோ காத்தலிங்கன் நானும் - தாயாரின் திருவடியைச் சரணமிட்டேன் மாரி பிள்ளை நானும் |
|
முத்துமாரி அம்மன் வசனம்:
|
மகனே காத்தவராயா எழுந்திரு.
|
|
முத்துமாரி அம்மன் பாடல்:
|
என்றுமில்லா மகனே பூஜையடா - நீயும் எனக்கறியக் காத்தவனே சொல்லேனடா
|
|
காத்தவராயன் பாடல்:
|
வரும் வழியில் நந்தவனம் கண்டேனம்மா - அங்கு நறுமலர்கள் கொய்து நான் சொரிந்தேன்
|
|
முத்துமாரி அம்மன் பாடல்:
|
பலநாளும் மகனே பார்த்தறியா - இந்தப் பாதபூஜை காத்தவனே ஏதுக்கடா
|
|
காத்தவராயன் வசனம்:
|
தாயாரே நீண்ட காலத்தின் பின் தங்களை சந்திக்கும் போது, தங்களின் ஆசியைப் பெறுவதற்காக இப் பூஜையைச் செய்தேன் அம்மா. இதில் ஏதாவது தவறு உள்ளதா தாயே?
|
|
முத்துமாரி அம்மன் வசனம்:
|
பூஜையில் தவறில்லை பூஜையின் நோக்கில் தான் தவறு. ஆனாலும் நீ விரைவாகப் படிப்பை முடித்துவிட்டு வந்து விட்டாய் போலும்?
|
|
காத்தவராயன் வசனம்:
|
அம்மா, பாலகப்பருவத்திலே படிப்பதற்காக மாமனார் பாடசாலை சென்ற உன் பாலகன் பன்னிரன்டு வருடங்கள் பள்ளியிலே படித்துவிட்டு இப்போது வாலிபனாக வந்திருக்கின்றேன், ஆகையால் .....
|
|
முத்துமாரி அம்மன் வசனம்:
|
ஆகையால்.....
|
|
காத்தவராயன் பாடல்:
|
என்னோட்டத் தாயாரே தோழரெல்லாம்– சின்ன இளந்தாரிமார் கல்யாணம் ஆனாரம்மா
பூக்கும் நல்ல தாயாரே பருவமணை - உன் மகன் பிஞ்சு விடும் தாயாரே வேளையணை காய்க்கும் நல்ல தாயாரே பருவமணை-மகன் கன்னி கட்டும் கனிந்த காலமணை |
|
முத்துமாரி அம்மன் வசனம்:
|
மகனே காத்தவராயா! நீ என்றைக்குமே எனக்குப் பாலகன் தான். ஆதலால்,
|
|
முத்துமாரி அம்மன் பாடல்:
|
நீ ஏந்தும் குழந்தையடா என் மகனே எட காத்தவனே நீயும் எடுக்கிடுவார் கைக்குழந்தை
|
|
காத்தவராயன் பாடல்:
|
ஏந்திக் கொண்டோ தாயாரே போகையிலே - என்னை இடறுப்பட்டோ கீழே போட்டிடுவாய்
|
|
முத்துமாரி அம்மன் பாடல்:
|
தாங்கும் குழந்தையடா என்மகனே எடகாத்தவனே - நீயும் தடுக்கிடுவார் கைக்குழந்தை
|
|
காத்தவராயன் பாடல்:
|
தாங்கிக் கொண்டோ தாயாரே போகையிலே - என்னை தடக்குப்பட்டோ கீழே போட்டிடுவாய்
|
|
முத்துமாரி அம்மன் பாடல்:
|
பார்த்தவர்க்கோ மகன் நீ பாலனடா - அதனால் பாரிபண்ணத் துரையே காலமில்லை
|
|
காத்தவராயன் பாடல்:
|
பார்ப்பவர்க்கோ மகனார் பராயமணை-உன் மகன் பாரி பண்ணும் தாயாரே வேளையணை
|
|
முத்துமாரி அம்மன் பாடல்:
|
வயதுமெல்லோ மகனே பன்னிரண்டு - நீயும் வதுவையிலே இணையும் காலமில்லை
|
|
காத்தவராயன் பாடல்:
|
வயதுமெல்லோ தாயாரே இருபத்திரெண்டு - வசந்த மணவாழ்வில் இணையும் நேரமிது
|
|
முத்துமாரி அம்மன் வசனம்:
|
மகனே காத்தவராயா! நீயோ வயதிற்சிறியவன். உனக்குச் சில விளையாட்டுப் பொருட்களை வாங்கித்தருகின்றேன் நீ அவற்றை வைத்து விளையாடுவாயாக.
|
|
காத்தவராயன் வசனம்:
|
சிரிப்பாக இருக்கிறது தாயே. சரி பரவாயில்லை சொல்லுங்கள் என்னவகையான விளையாட்டுப் பொருட்கள்?
|
|
|
தொடரும்.....
|
