
![]()
மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்தின் 3ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றிய சனசமூக நிலைய கட்டடத்திறப்பு விழா கடந்த 31.10.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணியளவில் மிகவும் கோலகலமாக நடைபெற்றது.
0 Comments
![]()
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கிராமப்புற 5000 பாலங்கள் நிர்மாணித்தல் உள்கட்டமைப்பு வசதிகளை கட்டியெழுப்பும் செயற்திட்டத்தில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் (பா.உ) கோரிக்கைக்கு அமைய தெல்லிப்பளை பிரதேச செயலகத்துக்குட்பட்ட கட்டுவன் - மயிலிட்டி வீதியையும் புளியடி கோவில் வீதியையும் இணைக்கும் புளியடி பாலத்தினை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 16/03/2021 செவ்வாய்க்கிழமை மாலை 3 மணியளவில் இடம்பெற்றது.
மயிலிட்டித்துறை வடக்கு மாதர் கிராம அபிவிருத்தி தலைவி திருமதி கமலினி அண்ணாத்துரை - ஸ்ரீ லங்கா9/3/2021 வலிவடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் மயிலிட்டி எதிர்நோக்கிவரும் அதி முக்கிய வ31/1/2021 ![]()
வலிவடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் மயிலிட்டி எதிர்நோக்கிவரும் அதி முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடல்!
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர் கௌரவ அங்கஜன் இராமநாதன் (பா.உ) அவர்களின் தலைமையில் தெல்லிப்பளை பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நேற்று முந்தினம் (29.01.2021) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. ![]()
மயிலிட்டி கலைமகள் மகாவித்தியாலய அதிபர் பாடசாலையினை துப்பரவு செய்து தருமாறு திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்திடம் முன்வைத்த வேண்டுகோளின் அடிப்படையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (2021.01.10) அவ் சிரமதானப்பணி மேற்கொள்ளப்பட்டது. இவ் சிரமதானப்பணியில் இளைஞர் ஒன்றிய உறுப்பினர்கள் ஊர்மக்கள் மற்றும் இளைஞர்கள் என அனைவரும் இணைந்து பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.
![]()
அண்மை நாட்களில் பெய்துவரும் கனத்த மழை காரணமாகவும் அசாதாரண புயல் காரணமாகவும் மயிலிட்டி கடற்கரை பகுதி பாரிய கடலரிப்புக்குட்பட்டு காணப்படுகிறது.1990ம் ஆண்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து பின்னர் 2017ம் ஆண்டு மீள்குடியேற்றத்தின் பின்பு மயிலிட்டி கடற்கரையோரத்தை அண்டி பலர் வீடுகளை நிரமாணித்து தமது பாரம்பரிய தொழிலான மீன்பிடித்தொழிலை செய்துவரும் நிலையில் கடந்த நாட்களாக வீசி வரும் புயல் மற்றும் பலத்த மழை காரணமாக கடல் அலையின் வீச்சு அதிகரித்த தன்மையினால் மயிலிட்டி கிராமத்தின் கடற்கரை ஓரப் பகுதி முழுவதுமாக கடல் அரிப்புக்கு உட்பட்டு காணப்படுகின்றது.
மயிலிட்டி திருப்பூர் ஒன்றியத்தைச் சேர்ந்த சாந்தகுமார் மதுஷாந்த் புலமைப்பரிசில் பரீட்சையில18/11/2020 அபிவிருத்தியின் பெயரால் தமிழர்கள் ஏமாற்றப்படுவதன் வேதனைமிகு சாட்சியே மயிலிட்டித்துறைமுக அ16/11/2020 ![]()
அபிவிருத்தியின் பெயரால் தமிழர்கள் ஏமாற்றப்படுவதன் வேதனைமிகு சாட்சியே மயிலிட்டித்துறைமுக அவலம்!
மயிலிட்டித்துறைமுகம் புனரமைப்பு செய்யப்பட்டது... மயிலிட்டி மக்களிடமே கையளிப்பதாக நாட்டின் முன்னாள் பிரதமர் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள் ஊடகங்கள் சாட்சியாக கூப்பாடுபோட்டுவிட்டு போனார்கள்.... மயிலிட்டியைச் சேர்ந்தவர்களுக்கு சொந்தமான இரண்டு 28 அடி நீள 2 சிலிண்டர் ஜம்மார் எஞ்சின் பொருத்தப்பட்ட றோலர் படகுகளும் சாதாரண மீன்பிடிப் படகுகளும் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தன. ![]()
சீரற்ற கால நிலையின் காரணமாக வீசிய சூறைக்காற்றில் சிக்கி மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தில் கட்டியிருந்த றோலர் படகு உடைந்து பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது.
நேற்று இரவு 11.00 மணியள்வில் வீசிய சூறைக்காற்றினால் ஏற்பட்ட கடல் கொந்தளிபில் சிக்கி மயிலிட்டியைச் சேர்ந்த சுப்பிரமணியம் றசியசிங்கம் என்பவருக்கு சொந்தமான 28 அடி நீளமுடைய றோலர் படகே இவ்வாற. பலத்த சேதத்திற்குள்ளாகியது. சிறப்புடன் நடைபெற்ற மயிலிட்டித்துறை க.தொ.கூ.சங்க இலவச முன்பள்ளியின் 20 ஆவது பிரிவுபசார விழா!30/11/2019 ![]()
இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இருந்து விடுவிக்கப்பட்ட மயிலிட்டி மீன்பிடி துறைமுகம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் திகதி புனரமைப்பு பணிகளுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு இன்று (15) வியாழக்கிழமை முதல் கட்ட பணிகள் முடிந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் காலை 10 மணியளவில் மயிலிட்டி துறைமுகத்தில் ஆரம்பமானது.
![]()
19-06-2019 புதன்கிழமை பி.ப 2-30 மணியளவில் UNDP க்கான இலங்கைக்கான பணிப்பாளர் ஜோன் செரோன்சன் அவர்கள் மயிலிட்டி துறைமுக வேலைகள் மற்றும் மயிலிட்டித்துறை வடக்கு கிராமச்செயலகமாக இயங்கும் பலநோக்கு மண்டம் என்பவற்றினை பார்வையிட்டதுடன், இவ் பலநோக்கு மண்டபத்தின் பாவனைகள் மற்றும் நன்மைகள் தொடர்பில் மக்களுடன் கலந்துரையாடினார்.
மயிலிட்டி துறைமுக பகுதியில் வெளி நபரால் அமைக்கப்பட இருந்த குளிரூட்டி அறை அமைக்கும் பணி தடுத்12/6/2019 ![]()
மயிலிட்டி துறைமுகத்தின் 3 கட்டங்களாக இடம்பெறும் புனரமைப்பு பணிகளில் முதல் கட்ட புனரமைப்பு பணிகள் நிறைவுக்கட்டத்தை எட்டிவருகிறது. புனரமைப்பு பணிகளில் தற்போது 80 மீற்றர் நீளமாக துறைமுக மேடையை அமைக்கும் பணிகள் நிறைவுக்கட்டத்தை எட்டிவருகிறது . அத்துடன் ஆழமாக்கும் பணிகளும் முடிவடைந்துள்ளன. விரைவில் மீனவர்களின் பயன்பாட்டுக்கு கையளிக்கப்படவுள்ளது
மயிலிட்டி தெற்கு கட்டுவன் பாலர் ஞானோதயா வித்தியாலய புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றது.12/5/2019 |
நமது மயிலிட்டிநேரடி மற்றும் ஊடகங்களில் வெளிவரும் மயிலிட்டி செய்திகள் அனைத்துப் பதிவுகள்
All
Archives
November 2021
|