அத்துமீறி இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழைந்த குற்றச்சாட்டில் அரசுடமையாக்கப்பட்டு மயிலிட்டித் துறைமுகத்தில் தரித்து நிற்கும் 62 இந்தியப்படகுகள் நாளை (29/08) ஏற்றிச்செல்லப்பட்டு அச்சுவேலி கைத்தொழிற்பேட்டையில் கொட்டப்படவுள்ளன.
மயிலிட்டியில் தரித்து நிற்கும் 123 இந்தியப் படகுகளில் 48 படகுகளின் வழக்குகள் நிலுவையில் உள்ளன. 13 படகுகள் நீதிமன்றங்களினால் விடுவிக்கப்பட்டன. இதில் 7 படகுகள் இந்திய மீனவர்களால் எடுத்துச் செல்லப்படவுள்ளன. இதேபோன்று அரச உடமையாக்கப்பட்ட 64 படகுகளும் தரித்து நிற்கின்றன.
அரச உடமையாக்கப்பட்ட 64 படகுகளில் முன்னாள் அமைச்சரின் பணிப்பில் மீனவ சங்கங்களிற்கு வழங்கப்பட்ட 2 படகுகள் தவிர்ந்த 62 படகுகளே இன்று முதல் மயிலிட்டித் துறைமுகத்திலிருந்து அகற்றப்படவுள்ளன.
இவ்வாறு மயிலிட்டித் துறைமுகத்தில் உள்ள 62 படகுகளும் ஜே.சி.பி இயந்திரங்கள் மூலம் இன்று வெளியே இழுத்து எடுக்கப்படவுள்ளது. அவ்வாறு எடுக்கப்படும் படகுகள் பாரம் தூக்கிகள் மூலம் தட்டு பார ஊர்திகளில் ஏற்றப்பட்டு அச்சுவேலி கைத்தொழிற்பேட்டைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளன.
செய்தி: காலை முரசு பத்திரிகை