
![]()
மயிலிட்டி துறைமுக அபிவிருத்தி பணியில் நிறைவு பெற்ற ஒரு பகுதி வேலையினை கையளிக்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
0 Comments
![]()
யாழ் மயிலிட்டிதுறை வடக்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் 04.03.2019 மக்கள் முன்னேற்றக் கூட்டணியின் செயலாளர் நாயகம் திரு.கணேஸ்வரன் வேலாயுதம் அவர்களால் மயிலிட்டிதுறை பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றிருந்தது. அதன்போது மக்களின் பொருளாதாரத்தினை மேம்படுத்தி கொள்ளும் வண்ணம் பல்வேறு சுயதொழில் முயற்சிகளையும் ஊக்குவிக்க உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
![]()
மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்தினரால் மயிலிட்டியை நிரந்தர வசிப்பிடமாககொண்ட 37 பிள்ளைகளுக்கு ரூபா ஒரு இலட்சம் (ரூபா 100,000) பெறுமதியான கல்விசார் உபகரணங்கள் மயிலிட்டி பல நோக்கு மண்டபத்தில் மயிலிட்டி வடக்கு கிராம சேவகர், அபிவிருத்தி உத்தியோகத்தர், மயிலிட்டி திருப்பூரை சேர்ந்த ஊர் பெரியோர்கள், மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றிய நிர்வாக சபை உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் முன்நிலையில் 26/01/2019 வழங்கி வைக்கப்பட்டிருந்தன.
![]()
கடந்த 18-01-2019 வெள்ளிக்கிழமை அன்று மயிலிட்டித்துறை வடக்கு மீள்குடியேறிய மக்களுக்கு வழங்கப்பட்ட கடற்தொழில் வாழ்வாதாரங்கள் நாளை 21-01-2019 திங்கள் கிழமை தைப்பூச நன்னாளில் தொழிலில் ஈடுபடுத்துவதற்கு ஏற்ப இன்றைய 20-01-2019 பௌர்ணமி நன்னாளில் நண்பகல் 12.00 மணிக்கு கடலில் வெள்ளோட்டத்திற்காக இறக்கப்பட்ட நிகழ்வின் பதிவுகள்.
செய்தி, படங்கள்: க. வீரசிவகரன் UNDP நிறுவனத்தினால் மீளக்குடியமந்த மக்களுக்கான கடற்தொழில் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைக்கப18/1/2019 மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்தின் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.29/12/2018
மயிலிட்டி வடக்கு பலநோக்கு மண்டபமாக அமைக்கப்பட்டிருக்கும் கிராமியச் செயலக திறப்பு விழா 20/12/2018 வெள்ளிக்கிழமை அன்று இனிதே நடைபெற்றது.
இந் நிகழ்வில் ம்யிலிட்டியின் அமைப்புக்களும், பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு நா.வேதநாயகம் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக தெல்லிப்பளை பிரதேச செயலாளர் திரு ச.சிவசிறி, வலிகாமம் வடக்கு பிரதேசசபை தவிசாளர் திரு சோ.சுகிர்தன் மற்றும் ஊறணி பங்குத்தந்தை தேவராஜன் பாதர் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக யு.என்.டி.பி. நிறுவனத்தின் பிராந்திய திட்ட இணைப்பாளர் திரு த.தனக்குமார், யு.என்.டி.பி. நிறுவனத்தின் வெளிக்கள திட்ட நிபுனர் திரு இ.சர்வானந்தா மற்றும் கடற்றொழில் பரிசோதகர் திரு ஜெயசீலன் ஆகியோருடன் மயிலிட்டி வடக்கு கிராம சேவையாளர் பிரிவு J/251 கிராம அலுவலர் திரு க.துவாரகன், அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு க.வீரசிவகரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர். மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகள் துரித கதியில் இடம்பெற்று வருகின்றது.16/12/2018 ![]()
கல்வி செயற்பாட்டை மயிலிட்டி மண்ணில் முன்னெடுப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் 10/12/2018 அன்று நடைபெற்றது.
திருப்பூர் மயிலிட்டி இளைஞர் நற்பணி ஒன்றியத்தின் முன்னெடுப்பில் நமது புலம்பெயர் உறவுகள் மற்றும் உள்ளூர் உறவுகளின் நிதிப்பங்களிப்புடன் இக்கல்வி நிலைய கட்டுமானப் பணிகள் இனிதே இன்று ஆரம்பிக்கப்பட்டது. ![]()
நமது மயிலிட்டி மண்ணில் பாரம்பரிய கலையும் தற்போது அழிவடைந்து வருகின்ற கலையான சிலம்பாட்ட பயிற்சி நடைபெற்று வருகிறது. மயிலிட்டி மண் முன்னைய காலங்களில் சிலம்பாட்டத்திற்கு பெயர் போனதாக நமது முன்னோர்களிடமிருந்து அறியக்கூடியதாக காணப்படுகிறது. அதனை மீண்டும் நிலைநாட்டுவதற்காக நமது இளைஞர்கள் நமது மயிலிட்டி மண்ணில் களத்தில் இறங்கியுள்ளார்கள். உங்களுக்கு தெரிந்த உறவுகளுக்கு இதனை தெரியப்படுத்தி நமது இளைஞர்களை இவ் சிலம்பாட்ட பயிற்சியில் கலந்து கொள்வதற்கு ஊக்கப்படுத்துங்கள். நன்றி.
![]()
மயிலிட்டி மண்ணில் மீள்குடியேறிவரும் மக்களால் நமது மயிலிட்டி புதிய வடிவம் பெற்று வருகின்றது. அவற்றுள் ஒரு கட்டமாக விளையாட்டு மைதானம் அமைக்கப் பட்டுள்ளது.
திருப்பூர் மயிலிட்டி இளைஞர் ஒன்றியத்தினால், திருப்பூர் மக்களின் நிதி உதவியுடன் துப்பரவு செய்து அமைக்கப்பட்டுள்ளது. மயிலிட்டி வைத்தியசாலையின் மேற்குப் பக்கமாகவுள்ள காணியிலேயே தவிசாளர் திரு. சுகிர்தன் அவர்களின் அனுமதியுடன் இந்த நிலம் பாவனைக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. மயிலிட்டி திருப்பூர் பேச்சி அம்மன் ஆலய வளாகத்தில் நவராத்திரி விழாவின் இறுதி நாள் நிகழ்வு நடை14/10/2018 ![]()
செல்வச் செழிப்புடன் சீரும் சிறப்புமாக வளம் கொழித்து வனப்புடன் திகழ்ந்திருந்த எமது மயிலிட்டி மண் இன்று முற்றிலுமாக அழித்தொழிக்கப்பட்டு நிர்மூலமாக்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் துரிதகதியில் எமது மண்ணை அபிவிருத்தி செய்து எமது மக்களின் வாழ்வை வளப்படுத்தும் பாரிய பணி எம்முன் உள்ளது. அதனை செவ்வனே ஆற்றிடும் வகையில் மயிலிட்டி திருப்பூர் இளைஞர் ஒன்றியத்தை கட்டமைக்கும் ஒன்றுகூடல் இன்று நடைபெற்றுள்ளது.
![]()
புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மயிலிட்டி மாணவி அருணகிரிநாதன் தாட்சாயினி.
இவ்வருடம் நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் தும்பளை சிவப்பிரகாச மகா வித்தியாலயத்தில் பயிலும் எமது மயிலிட்டி மண்ணின் மகள் அருணகிரிநாதன் தாட்சாயினி 172 மதிப்பெண்ணை பெற்று மாவட்ட ரீதியில் 617 வது இடத்தினையும் தனதாக்கி, பாடசாலைக்கும் எமது மயிலிட்டி மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளார். மயிலிட்டிக்குப் பெருமை சேர்த்த அருணகிரிநாதன் தாட்சாயினி அவர்களின் கல்விப் பயணம் மேலும் மேலும் சிறக்க எமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். ![]()
புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மயிலிட்டி மாணவி வெள்ளிமயில் நிவேதா.
இவ்வருடம் நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் யா/வடக்கு இந்து ஆரம்ப பாடசாலையில் பயிலும் எமது மயிலிட்டி மண்ணின் மகள் வெள்ளிமயில் நிவேதா 171 மதிப்பெண்ணை பெற்று மாவட்ட ரீதியில் 651வது இடத்தினையும் பாடசாலை ரீதியில் மிகச்சிறந்த பெறுபேற்றினை வெளிப்படுத்தி பாடசாலைக்கும் எமது மயிலிட்டி மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளார். மயிலிட்டிக்குப் பெருமை சேர்த்த வெள்ளிமயில் நிவேதா அவர்களின் கல்விப் பயணம் மேலும் மேலும் சிறக்க எமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். |
நமது மயிலிட்டிநேரடி மற்றும் ஊடகங்களில் வெளிவரும் மயிலிட்டி செய்திகள் அனைத்துப் பதிவுகள்
All
Archives
November 2021
|