பரிசளிப்பு விழா 2026
யா/ மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயம்
02/10/2026 வெள்ளிக்கிழமை இனிதே நடைபெற்ற பரிசளிப்பு விழாவின் காட்சித் தொகுப்பு.

அதிபர். திரு. ம.ரூபதன் அவர்களின் நன்றியுரை.
எமது பாடசாலையின் பரிசளிப்பு விழா நிகழ்வானது 02/10/2026 அன்று முற்பகல் 9 மணியளவில் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் அதிபர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக திரு. சோமசுந்தரம் கலாவண்ணன் (பிரதிக் கல்விப் பணிப்பாளர் தமிழ் வலய அலுவலகம், வலிகாமம்) அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு. திருநாவுக்கரசு கிருஷ்ணதாஸ் (விரிவுரையாளர், யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரி) அவர்களும், கௌரவ விருந்தினராக திரு. சுப்பிரமணியம் துரைரத்தினம் (அதிபர் யாழ் சிமியபாரதி மகாவித்தியாலயம்) அவர்களும் அவர் இப் பாடசாலையின் பழைய மாணவர் அவர்களும் கலந்துகொண்டு இந்த விழாவை சிறப்பித்தார்கள்.
இந்த விழா மிகவும் சிறப்பாக நேரமுகாமைத்துவத்துடன் நடைபெற்றதாக விழாவிற்கு வருகை தந்தவர்கள் பிரதம விருந்தினர் உட்பட அனைவரும் தெரிவித்திருந்தார்கள். குறிப்பாக சொல்லப்போனால் எமது பாடசாலை இடம்பெயர்ந்து சென்றதன் பின்னர் பாடசாலையில் நடாத்தப்பட்ட முதலாவது பரிசளிப்பு நிகழ்வாக இதனைக் கருத முடியும். அந்த வகையில் முதலாவது பரிசளிப்பு விழாவாக நடைபெற்ற இந்த நிகழ்வு மிக மிக சிறப்பாக ஒரு பெரிய பாடசாலைக்குரிய கட்டமைப்போடு மிக மிக சிறப்பாக நடைபெற்றதாக அனைவராலும் பாராட்டப்பட்டது.
இந்த பாராட்டுக்களுக்கு உரித்துடையவர்கள் பழைய மாணவர்களே. அவர்களது அனுசரணையுடன் தான் இந்த பரிசளிப்பு விழா நிகழ்வை எங்களால் சிறப்பாக நடாத்த முடிந்தது. ஆகவே எமது பழைய மாணவர்கள் புலம்பெயர் தேசத்திலும் உள்நாட்டிலும் இருக்கின்ற பழைய மாணவர்கள் தொடர்ந்து இவ்வாறான நிகழ்வுகள் பெளதீக அபிவிருத்திகள் போன்றவற்றிற்கு பாடசாலைக்கு நீங்கள் பங்களிப்பு நல்கும் பட்சத்தில் வலிகாமம் வலயத்தில் உள்ள பாடசாலைகளில் எமது பாடசாலையை சிறந்த ஒரு பாடசாலையாக உருவாக்க முடியும் என கருதுகின்றேன்.
புலம்பெயர் தேசத்தில் இருக்கின்ற பழைய மாணவர்கள் அனைவரையும் ஒழுங்கு படுத்தி ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து அவர்களை இந்த பாடசாலை சமூகத்தில் இணைத்து பாடசாலை வளர்ச்சிக்கு அவர்களிடம் இருந்தும் உதவிகளைப் பெற்று தொடர்ந்தும் பங்களிப்பு நல்கி கொண்டிருக்கின்ற தனா அருண் அவர்களுக்கும், இந்த நேரத்தில் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். மீண்டும் எமது பழைய மாணவர்கள் அனைவருக்கும் பாடசாலை சமூகத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
நன்றி வணக்கம்.
அதிபர். திரு. ம.ரூபதன்