நமது மயிலிட்டி
  • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
    • நல்வரவு! 2013,12,11
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு"
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை

இயற்கைக் காவலன்...

Picture

எழில்மிகு மயிலை மண்ணில் விளைந்த நன்பனைமரத்தில் 
தமிழ் மறவர் தொழில்களில் வீரமும் துணிவும் கொண்டதனாம்
உயர்மிகு பனைமரமேறியே கள் எடுக்கும் காட்சி காண்பீர்!

என்னே... அழகென்பேன்... என்னே துணிவென்பேன் காண்பீர்!

மாடியிலே ஏறுவதற்கே நமதிரு கால்களும் நோகுதென்போம்,
மொட்டை மாடியிலே நின்றுகொண்டு கீழே பார்க்கப் பயமென்போம், 
மாடியிலும் பன்மடங்கு உயரமான பனைமரத்தில் நிற்கும் தமிழா! என் தமிழா! 
உன் துணிவை என்னென்பேன் எவ்வண்ணம் கவி எழுதுவேன்?

உள்நாட்டிற்கும், வெளிநாட்டிற்கும் வியாபாரம் செய்தலன்றி
வெளிநாட்டிற்குச் சென்றும் பொன், பொருள் தேடல் மறுத்து 
மயிலை மண்ணின் இயற்கை வளமாம் பனை மரத்தின் 
கள்ளினை எடுத்து பொன் பொருள் தேடிய தமிழ் மறவா

இங்கு நாம் உயரமெனில் ஏணியின்றி ஏறிடமாட்டோம் 
நீயோ இமயமென உயரமான பனை மரத்தில் ஏறிச் செல்ல 
உன்னுயிரைப் பணயம் வைத்தல்லவா நிமிர்ந்து நிற்கின்றாய் 
பாதுகாப்பு அதிகமில்லாத இயற்கைப் பாதுகாவலன் நீ!

முட்டிகளில் சேர்ந்த நற்கள்ளினை கவனமாக நிரப்பு 
வட்டுக்குள் கொடுக்கான், தேள், பாம்பு நிற்கும் கவனம் 
கீழே உந்தன் அன்பு மனைவியும் பிள்ளைகளும் நாமும் 
காத்திருக்கின்றோம் உனக்காக கவனமாய் இறங்கிவா!

உன் கள் குடிக்க இளைஞர் பட்டாளம் புதருக்குள்
 ஒளிந்துள்ளோம் வந்துசேர் வந்துசேர் கவனமாய்!
புளித்த கள்குடித்து கொழுப்புக் கதைகள் பேச 
வயோதிபப்பட்டாளம் தள்ளாடி வருகின்றார் வந்துசேர்!
வந்துசேர் நண்பா வந்துசேர் கவனமாக வந்துசேர்!

க. கௌசிகன் 
இந்தப்படம் பிரசுரித்து 45 நிமிடங்களில் கருவுற்று 90 நிமிடங்களில் பிரவசமாகியது!
நன்றி கெளசிகனுக்கு!
இவ்வண்.
இணையப் பொறுப்பாளர்அருண்குமார்


 கருத்துக்கள் பக்கம்.

பெயர்:
ஜஸ்டின் தேவதாசன்

மின்னஞ்சல்:
@

கருத்துக்கள்:
மயிலிட்டி கம்பன், சொல்லின் வேந்தன், தனது அழகு கவிதை தமிழால் பிறந்த மண்ணுக்கு பெருமை சேர்க்கும் தம்பி கௌசிகனின் "இயற்கைக் காவலன்" என்ற கவிதை மிகவும் அருமை! அதற்கு எங்கள் பாராட்டுக்கள்.. மென்மேலும் உங்கள் கவிதைகள், ஆக்கங்கள், இணையத்தில் தொடர எங்களுடைய வாழ்த்துக்கள். 

    "இயற்கைக் காவலன்...   க. கௌசிகன்"  கருத்துக்களை இங்கே பதிவுசெய்யுங்கள்:

Submit
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர் web counter
© 2011-22 ourmyliddy.com