"மனம் கவர்ந்தவளே"
காந்தக் கண்ணழகியே!
உன் கருவிழியினைக் காணாததால் என் இரு விழிகளும் ஒளியிழந்தன! உதட்டோரப் புன்னகையரசியே! உன் உதட்டோரம் நீ புன்னகை சிந்த மறந்தால் என் உதட்டோரம் புன்னகை வர மறுக்கின்றன! குரல்லழகியே! உந்தன் இனிய குரல்தனை கேட்காததால் என் செவியிரண்டும் செவிப்பறையிழந்து கிடக்கின்றன! நடையரசியே! உன் அன்னநடையினைக் காணாததால் எந்தன் கால்களிரண்டும் முடவன்போல் முடங்கிக் கிடக்கின்றன! இதயக்கனியே! உன் இதயம் என்னை மறந்ததால் என் இதயம்கூடத் துடிக்க மறுக்கின்றது! என் மனம் கவர்ந்தவளே! உந்தன் இறந்தகால நினைவோடு எந்தன் நிகழ்காலம் தொடர்கிறது! ச. சாந்தன் பதிவு: 08/09/2012 |
|