"தவிப்பு"
மயிலை மண்ணின் காற்றினை
சுவாசித்திடத் தவிப்பு! அம்மாவைக் கட்டி அரவணைத்து முத்தம் கொடுத்துவிடத் தவிப்பு! அப்பாவின் அரவணைப்பில் படுத்து உறங்கிவிடத் தவிப்பு! கூடப் பிறந்தவர்களுடன் பாசமாக கூடி வாழ்ந்திடத் தவிப்பு! உற்றார் உறவுகளுடன் தமிழர் திருநாட்களை சேர்ந்து கொண்டாடிவிடத் தவிப்பு! மருதடி விநாயகரின் மருதமரத்திலும், கருங்கர்களிலும் ஏறிவிளையாடிவிடத் தவிப்பு! பிள்ளையார் கோவிலுக்கு அருகில் உள்ள அன்னதான மடத்தில் அன்னதானம் சாப்பிடத் தவிப்பு! பேச்சியம்மனின் நீர்ச்சாதம் வேண்டிச் சாப்பிடத் தவிப்பு! திருப்பூர் பெரியபுட்டி கொட்டிலின் மணலில் படுத்து உறங்கிவிடத் தவிப்பு! கடற்கரையில் நண்பர்களுடன் கூடி விளையாடிவிடத் தவிப்பு! மயிலைத் துறைமுகத்தில் நின்று இயற்க்கை அழகினைப் பார்த்திடத் தவிப்பு! மயிலைச் சந்தையில் மக்கள் கூடும் அழகினைப் பார்த்திடத் தவிப்பு! முருகன் கோவிலின் வேட்டைத் திருவிழாவில் வேட்டையாடும் விளையாட்டினைப் பார்த்திடத் தவிப்பு! அம்மன் கோவில் கப்பல் திருவிழாவின் அழகினை இரசித்துவிடத் தவிப்பு! பிள்ளையார் கோவிலின் மார்கழி மாதத் திருவெம்பாவில் பஞ்சாமிர்தம் வேண்டி சாப்பிடத் தவிப்பு! மாதா கோவிலின் திருநாட்களில் தெருக்களில் இருக்கும் கடைகளைச் சுற்றிப் பார்த்திடத் தவிப்பு! மாதா கோவிலின் நல் தண்ணீரை ருசித்துப் பருகிவிடத் தவிப்பு! காளவாய்க் கடற்கரையில் உள்ள முருகைக் கற்களுக்கருகில் குளித்து விளையாடத்தவிப்பு! அரசடியில் உள்ள பாண் வெதுப்பகத்தில் சுடச் சுடப் பாண் வேண்டிச் சாப்பிடத் தவிப்பு! குளத்தடி அம்மனைச் சுற்றியுள்ள விளாத்திமரத்தில் விளாம்பழம் பிடுங்கிச் சாப்பிடத் தவிப்பு! கொண்டலடி வைரவரினைச் சுற்றியுள்ள கொண்டல்ப் பூக்களின் மஞ்சள் அழகினை இரசித்துவிடத் தவிப்பு! காட்டுப் பிள்ளையார் கோவில் அருகில் நின்று விமானங்கள் ஏறி இறங்குவதைப் பார்த்திடத் தவிப்பு! ஆலடியில் விவசாயம் செய்யும் விவசாயிகளின் கூட்டுமுயற்ச்சியினைக் கண்டு வியந்திடத் தவிப்பு! வேல்வீதிக்கருகில் உள்ள நீரோடையில் கல்லெறிந்து விளையாடிவிடத் தவிப்பு! தோப்புப் பிள்ளையாரின் குளிர்மையில் இளைப்பாறிவிடத் தவிப்பு! கொத்தாவத்தையில் உள்ள மாமரங்களில் நண்பர்களுடன் மாங்காய் பிடிங்கி உப்புடன் சேர்த்து சாப்பிடத் தவிப்பு! கச ஆஸ்பத்திரியினைச் சுற்றியுள்ள பூவின் அழகினை இரசித்துவிடத் தவிப்பு! அம்பத்தையில் உள்ள முருகைக் கற்களில் நடனமாடி மீன் உண்ணும் கொக்குகளின் அழகினைப் பார்த்திடத் தவிப்பு! முலவை காலான்காட்டில் உள்ள பனை தென்னைகளில் கூட்டம் கூட்டமாக வாழும் கிளிகளின் அழகினைப் பார்த்திடத் தவிப்பு! எனது பாடசாலையான கலைமகள் மகா வித்தியாலயத்தில் ஒருநாள்ப் பொழுதினை எனது ஆசான்களுடன் கழித்துவிடத்தவிப்பு! எனது பாடசாலை முதன்மை ஆசிரியரான திரு அப்புத்துரை, திரு இராசரத்தினம்அவர்களின் அறிவுரையினைக் கேட்டு மகிழ்ந்திடத் தவிப்பு! பழையகால எச்சங்களான போத்துக்கேயர் கட்டிடங்களையும் மலைவேம்பையும் சுற்றிப் பார்த்திடத் தவிப்பு! சகோதர பாடசாலையான றோமன் கத்தோலிக்க வித்தியாலய நண்பர்களுடன் சேர்ந்து விளையாடிவிடத் தவிப்பு! எனது மனையாளுடனும் குழந்தைகளுடனும் சென்று தாயினதும் மயிலை மண்ணினதும் பாதம் போற்றி பூசித்துவிடத் தவிப்பு.....தவிப்பு..... தவிப்பு...................! ச. சாந்தன் |
You've just received a new submission to your
கருத்துக்கள் பக்கம். Submitted Information:பெயர்: kumaresan tamilan மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: saanthan i read your poem which is titled as "thavippu" you showed total beauty of myliddy in one poem i loved it..awesome poem. i was left myliddy in my child hood ( 2 years old) i don'tknow much about myliddy. your poem made some imagination inside of me when i was reading.. thankyou.. You've just received a new submission to your "தவிப்பு- சாந்தன்".
Submitted Information:பெயர்: Justin Thevathasan மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: தம்பி சாந்தனின் தவிப்பு என்ற கவிதை கேட்கவே தவிப்பாக இருக்கிறது! மலரும் நினைவுகளை ஆக்கிக்கொண்டிருக்கும் உங்கள் தவிப்பு கட்டுரைக்கு எங்களுடைய பாராட்டுக்கள் !! இணையத்தில் உங்கள் தவிப்பு மென்மேலும் தொடர எங்கள் பாராட்டுக்கள்! |