அமரர் பண்டிதர் திரு. சிறீரங்கம் அப்புத்துரை அவர்களுக்கு சமர்ப்பணம்!
மயிலங்கூடல் பெற்றெடுத்த மாணிக்கமே!
மயிலையம்பதி தத்தெடுத்த மரகதமே! வெள்ளை அங்கியுடன் மயிலைக்கு வந்த வெண்மதியே! சந்தணப் பொட்டு வைத்த சிறீரங்கரின் சூரியனே! எங்களையெல்லாம் கழுத்துப்பட்டி கட்டுங்கள் என்று சொல்லிவிட்டு நீங்கள் நேசித்தது அங்கவஸ்த்திரம் தானே! அதனால் தானோ என்னவோ அங்கவஸ்த்திரம் தன் அழகை உங்கள்மேல் இருந்து மேலும் உயர்த்திக்கொண்டது! எங்கள் கல்விக் கூடத்தில் இராஜநடை போட்ட வீரனே! தமிழை எனக்குக் காட்டிய தமிழ் அரசனே! அமெரிக்க மிஷன் பாடசாலையில் தமிழைத் தழைக்கச் செய்த பண்டிதரே! "பிரின்ஸிப்பல்" இல்லை "அதிபர்" என்றும் "ஒஃப்பிஸ்" இல்லை "அலுவலகம்" என்றும் இன்னும் பிற ஆங்கிலங்களைத் தமிழாக்கி எங்களை விதையிலேயே மாற்றிய வித்தகனே! காப்புக் காய்த்த அந்தக் கட்டைவிரல் கைகளால் கருணை காட்டிய கர்ணனே! நான் தவறு செய்தபோது அதே கருணையை என் கன்னத்தில் காட்டிய கம்பனே! தமிழுக்கு மூன்று சங்கம் இருந்தது அனைவரும் அறிந்ததே! உங்களுக்குத் தமிழ் மூன்றாவது கண் என்பதும் அனைவரும் அறிந்ததே! மீசை இல்லாத பாரதியை உங்கள் மூலம் கண்டுகொண்டேன்! அதனால் தான் கலைமகளுக்குப் பாரதியை காணிக்கையாய்ப் பதிவு செய்தீரோ! அந்தப் பதிவில் எனது நிழலும் இருந்ததையிட்டு உங்களால் நான் மகிழ்கிறேன்! தமிழே எங்களிடம் தமிழைத் தந்துவிட்டுத் தனியே எங்கே போய்விட்டீர்! அகரத்தை மட்டும் எம்மிடம் தந்துவிட்டு சிகரத்தில் வாழச் சென்றுவிட்டீரா! பேச்சிலும் சிந்தனையிலும் தமிழைக் காதல் கொண்ட தமிழனே! உன் காதலைத் தவிக்கவிட்டுவிட்டு தனியே எங்கே போய்விட்டீர்! தேவலோகம்பதியிலும் மயிலையம்பதிபோல் உங்கள் சேவையைத் தொடங்குங்கள்! நாங்களும் அங்கு வரும்போது உங்களின் பழையமாணவர் என்று சொல்லி வருகின்றோம்! தமிழ் தந்த தமிழுக்கு மாணவன் கு. அருண்குமார் பதிவு: 10/11/12 |
You've just received a new submission to your "நான் பிறந்த மண்ணே"
Submitted Information:உங்கள் பெயர்: சுந்தரலிங்கம் வி உங்கள் மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: அருண்குமார்! "சமர்பணத்தில்" உங்கள் குருதட்சணையைப்பார்த்தேன். அதற்காக அவர் உங்களிற்கு விட்டுச்சென்றதை இதில் பார்க்கிறேன். எண்ணத்தில் இருப்பதை எழுதியதில் இருக்கும் நேர்த்தி மிகவும் அருமை. இன்னும் எழுதுங்கள். பதிவு: 29/11/2012 |
அஞ்சலியும் நினைவுகூரலும்
மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் 10/2012
எமது முன்னால் அதிபர் உயர் திருவாளர் சி. அப்புத்துரை அவர்களுக்கு எமது அஞ்சலியும் நினைவு கூரலும் !
அனைவருக்கும் வணக்கம் !
இன்றைய நாளில் ! அன்று மயிலை மண்ணில் சிறு பாடசாலையாக இருந்த கலைமகள் வித்தியாலத்தை "கலைமகள் மகா வித்தியாலயம்" என்ற உயர்ந்த நிலைக்கு உயர்த்த தன் வாழ்நாளை அதர்க்கு சமர்ப்பணமாக்கிய அற்புதமான மாமேதை எமது முன்னாள் அதிபர் உயர்திருவாளர் சி. அப்புத்துரை அவர்களை இன்று இழந்து நிற்கின்றோம்.
மயிலங்கூடலில் இருந்து பல மைல்கள் தூரம் தனது மிதிவண்டியில் கடந்து வந்து எமது மயிலை மண்ணின் மைந்தர்களின் மேன்மைக்காக உழைத்த உயர்வாளர் எமது அதிபர் அவர்கள்.
மாணவர்களுடனும், ஆசிரியர்களுடனும் பாடசாலையின் வளர்ச்சி கருதி கண்டிப்பாக நடந்து கொள்வார். தனது கடமையிலிருந்து ஒருபோதும் அவர் தவறியதில்லை.
தான் மட்டும் பலமைல் தூரம் கடந்து வருவதோடு அல்லாமல் தனது பிள்ளைகளையும் எமது பாடசாலைக்கு அழைத்து வந்து கல்வி கற்கச்செய்தார் எமது அதிபர் அவர்கள்.
எமது பாடசாலையில் இருந்து அதிபர் அவர்கள் ஓய்வுபெற்றுச் செல்கையில் பாடசாலை நிர்வாகத்தினரால் பரிசு அவருக்கு வழங்கப்பட்ட்போது, இதற்காக செலவுசெய்த பணத்தினை பாடசாலை வளர்ச்சிக்காகப் பயன்படுத்தியிருக்கலாம் என்று கூறிய சிறந்த பண்பாளர் எமது அதிபர் அவர்கள்.
எமது அதிபர் என்பது ஒருபுறமிருக்க, தமிழில் தமிழில் மிகவும் பண்டித்தியம் பெற்ற ஒரு பண்டிதருடன் ஒரு காலத்தில் நாமும் வாழ்ந்திருக்கின்றோம் என்பதை நினைத்துப் பெருமையடைகின்றோம்.
நாடு கடந்தும் இறுதிவரை தமிழுக்காகவே உழைத்துக் கொண்டிருந்தவர். தமிழைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தவர். அன்றுதொட்டு இன்றுவரை அவரின் குடும்பத்தினரும் மயிலை மக்களுடன் மிகவும் அன்பாக நடந்து கொண்டவர்கள்.
அண்மைக்காலமாக இணையத்தளங்களில் அதிபர் அவர்களின் படங்களைப் பார்த்து அனைவரும் சந்தோசமடைந்தோம். ஆனால் இவ்வளவு விரைவாக அவரது மறைவுப்படம் வருமென நாம் எதிர்பார்க்கவுமில்லை, யாரும் நினைத்த்ருக்கவுமில்லை.

அமரர் சி. அப்புத்துரை
திரு ஸ்ரீரங்கம் அப்புத்துரை
(கலாபூஷணம் பண்டிதர் அதிபர், யா/மயிலிட்டி கலைமகள் மகாவித்தியாலயம்)
பிறப்பு : 22 ஏப்ரல் 1928 — இறப்பு : 11 ஒக்ரோபர் 2012
யாழ்ப்பாணம், இளவாலை, மயிலங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பண்டிதர் திரு. ஸ்ரீரங்கம் அப்புத்துரை அவர்கள் 11-10-2012 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஸ்ரீரங்கம் - சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குப்பிளான் சுப்பையா - தில்லைமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,
Dr.அன்பழகன்(அவுஸ்ரேலியா), இளவழகன்(லண்டன்),
இந்துமதி(லண்டன்), சாந்தி(கனடா)
ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இராசேந்திரம்(ஆசிரியர்), பொன்னையா(ஆசிரியர்),
செல்வநாயகி, செல்வலக்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிலோசனி(அவுஸ்ரேலியா), விமலினி(லண்டன்),
சதீஸன்(லண்டன்), சிவபாலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆரூரன், அனந்தன், ஆத்மீகன், அபூர்வா, அதீதன், அபிதா, ஆரண்யா, அகல்யா, ஆதீத்தன்
ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் இளவழகன்(லிங்கா - மகன்)
தொடர்புகளுக்கு:
இளவழகன்(லிங்கா - மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447515025521
அன்பழகன்(மகன்) — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி:+61402849635
இந்துமதி(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447903796698
சாந்திமதி(மகள்) — கனடா
தொலைபேசி:+1647988048
நன்றி: http://notice.lankasri.com