நமது மயிலிட்டி
  • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
    • நல்வரவு! 2013,12,11
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு"
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை

மயிலிட்டி மக்களின் ஊர் ஆலயங்களின் திருவிழா நிகழ்வு படங்களுடன்!

Photo
வெள்ளிக்கிழமை (11/07/2014) மயிலிட்டி சென்று கண்ணகை அம்மன், முருகன், தோப்புப் பிள்ளையார் ஆகிய ஆலயங்களை மக்கள் விசேட பூஜை, அன்னதானம் என மிகவும் மகிழ்வுடன் வணங்கி வழிபட்டுத் திரும்பினர். அங்கு நடைபெற்ற நிகழ்வுகளை திரு. குணபாலசிங்கம் அவர்கள் புகைப்படங்களாக எடுத்து உலகெங்கும் உள்ள மயிலிட்டி மக்களின் பார்வைக்காக அளித்துள்ளார். 

மயிலிட்டி கண்ணகை அம்மன், முருகன் ஆலயங்களை சென்று தரிசிக்கத் தயாராகுங்கள்!

Photo
வருகின்ற 11ம் திகதி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகை அம்மன் மற்றும் முனையன் வளவு முருகையன் ஆலயங்களை சென்று தரிசிப்பதற்கு இராணுவத்தினர் அனுமதி வழங்கியதும், அதற்காக புனருத்தான நிகழ்வுகள் நடைபெற்றதும் ஏற்கனவே அறியத் தந்திருந்தோம்.


லண்டனில் "சாதனைத் தமிழா" நிகழ்வில் மீண்டும் விருதினைத் தனதாக்கிய நர்வினிடேரி!

Photo
20/06/2014 அன்று தமிழிதழ் மற்றும் GTAA இணைந்து நடாத்திய  “சாதனைத்தமிழா” கலைஞர்களுக்கான மணிமகுடம் நிகழ்வு மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது ஐரோப்பிய ரீதியில் வெவ்வேறு நாடுகளிலிருந்து கலைஞர்கள் மற்றும் இந்தியாவிலிருந்து நடுவர்களில் ஒருவரும் சிறப்பு விருந்தினரும் தென்னிந்திய நடிகர் ஈழத்து மைந்தன்  ஜெய் ஆகாஷ் அவர்களும் கலந்து நிகழ்வினை சிறபித்தார்கள்.


மயிலிட்டி மக்களுக்கு ஒன்றுகூடல்அழைப்பு

Photo


நலன்புரி முகாம் மக்களுக்கு இரண்டாவது நிவாரணம் வழங்கும் நிகழ்வு படங்களுடன்!

Photo
பாராளுமன்ற உறுப்பினர் திரு.சரவண்பவன் ஐயா அவர்கள் மூலம் சுவிற்சர்லாந்த் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலய நிர்வாகத்தினரால் வழங்கிய பங்களிப்பின்பேரில் நலன்புரி முகாம்களில் உள்ள வலி வடக்கு மக்களுக்கு இரண்டாவது உலர் உணவு நிவாரணம் 26/06/2014 அன்று வழங்கப்பட்டது......... மேலும் படிக்க...


ஊறணியின் செல்வர் அண்டனி பாலா அவர்களின் 25வது குருத்துவ விழா படங்களுடன்!

Photo
ஊறணியின் செல்வரான அருட்.பணியாளர் அன்டனி பாலா அவர்களின் இருபத்தைந்தாவது ஆண்டு நிறைவயொட்டி குருத்துவ வெள்ளிவிழா  இன்று 22/06/2014 கொண்டாடப்பட்டது. 

மேலும் இவ் விழாவின் நற்திருப்பலியானது பண்டத்தரிப்பிலுள்ள தியான இல்லத்தில் இனிதே நடைபெற்றது. நிகழ்வின் படங்களை திரு அ.குணபாலசிங்கம் அவர்கள் தந்துள்ளார் நன்றி!


மயிலிட்டி கண்ணகை அம்மன் ஆலய நிர்வாகத்தினர் மீண்டும் சென்று வந்துள்ளனர்! பிள்ளையார் கோவில் சோகச் செய்தி!

Photo
மயிலிட்டி வீரமாணிக்க தேவன்துறை கண்ணகை அம்மன் ஆலயத்தின் திருத்தவேலைகள் பற்றி ஆலோசனை மற்றும் ஆய்வுக்காக ஆலய நிர்வாகத்தினர், மீள்குடியேற்றத் தலைவர் அ.குணபாலசிங்கம் ஆகியோர் மீண்டும் சென்று வந்துள்ளனர்! 
படங்கள் இணைக்கப்பட்டுள்ளன,





New jaffna இணையத்தில் வெளிவந்திருக்கும் கண்ணகை அம்மனின் செய்தி! வீடியோ இணைப்பு!

Photo
5 வருடங்களாக தன்னைப் பார்க்க யாரும் வரமாட்டார்களா என ஏங்கிக் கொண்டிருந்த கண்ணகியைக் காண்பதற்காக தடைகளைத் தகர்தெறிந்து உயர்பாதுகாப்பு வலயத்தினுள் ஊடுருவி நடாத்தப்பட்ட சிறப்புத் தாக்குதல் சித்திரம்

கடந்த 30 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த கொடூர யுத்தம் ஏராளமான இழப்புக்களுடன் முடிவடைந்துள்ளது. ஆக்ரோசமான யுத்தத்தால் சாதிக்க முடியாத சில செயற்பாடுகளை அன்பாலும் புரிந்துணர்வினாலும் செயற்படுத்த முடிந்துள்ளது.



Abina Sivaranjan அபினா சிவரஞ்சன் பிறந்தநாள்!

Photo
திரு திருமதி சிவரஞ்சன் தம்பதியினரின் அன்புப் புதல்வி அபினா அவர்கள் தனது பிறந்தநாளை 20/06/2014 அன்று கொண்டாடுகின்றார்.


மயிலிட்டி கண்ணகை அம்மன் கோவிலின் இன்றைய நிலையும், புனருத்தாரணத்திற்கான அழைப்பும்!

Photo
மயிலிட்டி வீரமாணிக்க தேவன்துறை அம்மன் ஆலயத்திற்கு வருகின்ற யூலை 11ம் திகதி சென்று வழிபட இராணுவத்தினர் அனுமதி வழங்கியது பற்றிய செய்தியை  ஏற்கனவே தெரிவித்திருந்தோம்,

அதற்கமைய திரு.அ.குணபாலசிங்கம் தலைமையிலான குழுவினர் ஆலயத்தின் புனருத்தாரணம் பற்றி ஆய்வு செய்வதற்காக இராணுவத்தினரின் அழைப்பின் பேரில்  இன்று திங்கள்கிழமை (16/06/2014) மயிலிட்டி சென்று கண்ணகை அம்மன் ஆலயத்தைப் பார்வையிட்டு வந்துள்ளனர்.



படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.........



சுகிர்தா சண்முகநாதன் அவர்களின் வாழ்த்தும் மே 1 கவிதையும்!

Photo
Photo

ராஜாஜி ராஜகோபாலன் அவர்களின் வாழ்த்து!

Photo

அன்ரன் ஞானப்பிரகாசம் அவர்களின் வாழ்த்துக்கள்!

Photo

சங்கீதா தேன்கிளி அவர்களின் வாழ்த்துக்கள்!

Photo

செல்வி மனோ அவர்களின் வாழ்த்து!

Photo

ஊறணி அல்விற் வின்சன் அவர்களின் வாழ்த்துக்கள்!

Photo

மயிலை ஐங்கரன் அவர்களின் வாழ்த்துக்கள்!

Photo

ஜஸ்ரின் தேவதாசன் அவர்களின் வாழ்த்து!

Photo

எமது மூன்றாவது அகவைக்காக இதுவரை கிடைக்கப் பெற்ற வாழ்த்துக்கள்!

ஜஸ்ரின் தேவதாசன்
ஊறணி அல்விற் வின்சன்
சுகிர்தா சண்முகநாதன்
சங்கீதா தேன்கிளி
ராஜாஜி ராஜகோபாலன்
மயிலை ஐங்கரன்
செல்வி மனோ
அன்ரன் ஞானப்பிரகாசம்
மயிலை ச.சாந்தன்
மயிலைக் கவி சண் கஜா


மயிலிட்டி வீரமாணிக்க தேவன்துறை கண்ணகை அம்மனைத் தரிசிக்க அனுமதி!

Photo
மயிலிட்டி வீரமாணிக்க தேவன்துறை அருள்மிகு கண்ணகை அம்மன் ஆலயத்தைச் சென்று தரிசிக்க இராணுவம் அனுமதி வழங்கியுள்ளது.


முதல் இடப்பெயர்வு நிகழ்ந்து இன்றுடன் கால் நூற்றாண்டு!

Photo
யாழ். குடாநாட்டின் முதலாவது இடப்பெயர்வு நிகழ்ந்து இன்றுடன் 24 ஆண்டுகள் பூர்த்தியாகி உள்ளன.  
24 ஆண்டுகளாக தொடர்ந்து அகதி முகாம்களிலேயே அவல வாழ்வு வாழ்ந்து வரும் வலி.வடக்கு மக்கள் இன்று 25 ஆவது ஆண்டுக்குள் கால் வைக்கின்றனர். அவர்களது வாழ்வில் எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலையில் வாழ்வாதாரம் இழந்தவர்களாக   இனி இழப்பதற்கு எதுவுமே இல்லாதவர்களாக பெரும் மனக் கிலேசத்துடன் அவர்கள் இந்தக் கால் நூற்றாண்டுக்குள் பிரவேசிக்கின்றனர். 


தந்தையர் தின வாழ்த்துக்கள்! - அன்ரன் ஞானப்பிரகாசம்

Photo

மரண அறிவித்தல் திரு. சிவசாமி சுப்பிரமணியம்!

Photo
திரு. சிவசாமி சுப்பிரமணியம்

பிறப்பு: 01/04/1959
இறப்பு: 04/06/2014

மயிலிட்டியை பிறப்பிடமாகவும் பருத்தித்துறை திக்கத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசாமி சுப்பிரமணியம் அவர்கள் [04.06.2014]புதன்கிழமை அன்று காலமானார்.


வேற்றுகிரகவாசிகள்

Photo
வேற்றுகிரகவாசிகள் 
இங்கேயே இருந்திட 
வேறெங்கோ தேடப்படுகிறார்கள் 

அறிய அறிய பழக பழக 
புதுமை மனிதர்கள் 
திணறவைக்கிறார்கள்  

மேலும் படிக்க.....


"உதவிக்கரம் நீட்டிய உறவுகளுக்கு பாராட்டுக்கள்"

உறவுகளே! யா/ மயிலிட்டி றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்துக்கு எமது மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்சினால் தொடர்ந்து வழங்கப்படுகின்ற உதவிக்கு உதவும் கரங்களாக முன்வந்த, 
திரு. பொன்னுத்துரை சிவராஜா (தம்பி), 
திரு. இரட்ணசிங்கம் இரஞ்சித்குமார் (றஞ்சன்), 
திரு. இராசையா நாகராஜா, 
திரு. இராசையா அழகராஜா, 
திரு. சிவசுந்தரம் சிவரஞ்சன், 
திரு. முத்துச்சாமி ஜெமிந்தார், 
திரு. இராமநாதன் சின்னத்தம்பி, 
திரு. குணபாலசிங்கம் அருண்குமார், 
திரு. சடாச்சரலிங்கம் சதானந்தன் (சாந்தன்) 
ஆகிய அனைவருக்கும் மனம்திறந்த வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு அனைத்து பிரான்ஸ் வாழ் மயிலிட்டி உறவுகளையும் அவர்களோடு கரம்கோர்க்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி
மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் நிர்வாகம்

31 ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்! அமரர் உயர்திரு றோமன் பிலிப்பையா

Photo

அன்னையர்தின வாழ்த்துக்கள் - அன்ரன் ஞானப்பிரகாசம்

Photo

மரண அறிவித்தல் திருமதி. தேவதாசன் லூர்து மேரி மயிலிட்டி

Photo
திருமதி. தேவதாசன் லூர்து மேரி

மலர்வு:  02 / 11 / 1947
உதிர்வு:  27 / 04 / 2014 


மயிலிட்டியைச் சேர்ந்த திருமதி. தேவதாஸன் லூர்து மேரி அவர்கள் 27.04.2014 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற இராசேந்திரம் தேவதாஸனின் அன்பு மனைவியும், 
வாசுதேவன், ஸ்ரிபன், லோகதாஸன், ஜஸ்ரின், பிரமிளா ஆகியோரின் பாசமிகு தாயாரும், 


முகாமிலுள்ள வலி.வடக்கு மக்களை அக்கரையில் குடியேற்ற முயற்சிகள்; பொதுமக்களின் எதிர்ப்பால் பிசுபிசுத்தது திட்டம்.

Photo
வலி.வடக்கிலிருந்து இடம் பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களை, அக்கரையில் குடியேற்றுவதற்கு நிலையங்கள் தோறும் இராணுவத்தினர் நேரில் சென்று பதிவுகளை மேற்கொண்ட போதும் மக்கள் தமது சொந்த இடங்களிலேயே தாம் வாழ வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்தனர் என்று கூறப்படுகின்றது.



கடந்தது வருடம் ஒன்று நடந்தது எதுவுமில்லை!

Photo
வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயம் அல்லது முகாம் பகுதி என்ற ரீதியில் இராணுவத்தினரால் கையகப்படுத்தி வைக்கப்பட்டுள்ள காணிகளைச் சுவீகரிப்பதற்கான அறிவித்தல்கள் ஒட்டப்பட்டு ஒரு வருடம் கடந்துள்ளது. அதனை எதிர்த்து உயர்


சித்திரைப் புதுவருட வாழ்த்துக்கள் "ஞா. அன்ரன்"

Photo
Photo

மரண அறிவித்தல் திரு. றோமன் பிலிப்பையா

Photo
திரு றோமன் பிலிப்பையா
(இளைப்பாறிய ஆங்கில ஆசிரியர், முன்னாள் சமாதான நீதவான்)
மலர்வு : 15 யூலை 1930 — உதிர்வு : 16 ஏப்ரல் 2014



லண்டன் வாழ் மயிலிட்டி உறவுகளால் கிளிநொச்சியில் 30 பேருக்கு தையல் இயந்திரங்கள் உதவி

Photo
பொருளாதார நெருக்கடியால் தாயகத்தில் அவதியுறும் உறவுகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு லண்டனில் வாழும் கருணை உள்ளங்களான சிங்கவாகனம் இராஜசுந்தரம் அவர்களும், அவரோடு இணைந்து நிற்கும் தமிழ் உறவுகளும் தம் வியர்வைத் துளிகளால் பெறும் நிதியில் ஒரு பகுதியை ஒன்று திரட்டிதொடர்ந்து உதவி செய்து வருகின்றனர்.
இவர்களின் உதவிகள் மூலம் கடந்த காலங்களில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பயன் அடைந்துள்ளனர்.



மனம் திறந்து பேசுவோமா? "மயிலை துரை"

Photo
அன்று
சாதிகளை பேசிப்பேசி
வறட்டு கெளரவமாய்
வாழ்ந்திருந்த முன்னோரெல்லாம்
பிஞ்சு மனங்களிலே
நஞ்சை கலந்ததினால்
ஒவ்வொரு மனங்களிலும்
வேரூன்றி வளர்ந்தயந்த
சாதி வெறியினாலே
இதயங்களை அழுக்காக்கி
அன்புகளை தொலைத்துவிட்டு------


வலி. வடக்கு மீள்குடியேற்றம் சாத்தியமில்லை!- கட்டளைத்தளபதி உறுதிபட தெரிவிப்பு

Photo
வலி.வடக்கு மீள்குடியேற்றம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்திக்கும் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி உதயப்பெரேராவுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. 

இந்த சந்திப்பானது பலாலி படைத்தலைமையகத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு இடம்பெற்றது.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கேட்டபோது,


பிறந்தநாள் வாழ்த்துக்கள்! திரு. செல்லப்பா சண்முகநாதன்

Photo
திரு. செல்லப்பா சண்முகநாதன் அவர்களுக்கு எமது மனமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


"உன்னால் முடியும்" மயிலை ஐங்கரன்

உன்னை 
உணர்ந்துகொள் 
உயர்ந்துசெல்

சந்தர்ப்பங்கள் வாய்க்கும்போது
விழி பிதுங்கிப்போவாய்
என்னால் ஆகாதென 
ஓரமாக ஒதுங்கிப்போவாய்
முடியவே முடியாதென
பௌவியமாய் பதுங்கிப்போவாய்

"படைப்பாளி" மயிலை ச. சாந்தன்

Photo
உலகத்திற்கு உவமைகளால் 
உண்மைகளை எடுத்துகாட்டுபவன் 

எண்ணங்களை சிதறவிட்டு 
உவமைகளை காதலித்து 
சிந்தனைகளில் தொட்டில்கட்டி 
கவிதை எனும் குழந்தை பெற்று 
படைப்பாளி எனும் தந்தையாகிறான்


எனது ஆசை அண்ணா அண்ணிக்கு இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள். வசந்த் சகாதேவன்

Photo

மயிலிட்டிப் பகுதியில் மக்கள் மீள்குடியேற வாய்ப்பே இல்லை!

Photo
மயிலிட்டிப் பகுதியில் மீள்குடியேமர்வுக்கு இடமளிக்க முடியாது. மயிலிட்டியைச் சேர்ந்தவர்கள் வளலாய்ப் பகுதியில் ஒதுக்கப்படும் காணிகளில் குடியேறலாம். தேவையானால் தமது கடற்றொழிலுக்கு மயிலிட்டித் துறைமுகத்தை அவர்கள் பயன்படுத்தலாம்.”


"பெண்" மயிலை ச. சாந்தன்

Photo
பெண் பெருமைக்குயுரியவள் 
பெருமையோடு போற்றக்கூடியவள் 
தாயாகக்கூடிய வரம் கொண்டவள் 
அன்பையே வரப்பிரசாதமாக கொண்டவள் 

ஓடும் உலகின் அச்சாணியாக அவதாரம் கொண்டவளே  
அகிலமும் ஆண்டிடும் அன்பை இயல்பாக கொண்டவளே  
பரந்த பூமியில் வளர்ந்திடும் 
பணமோகத்தில் ...
போட்டிகளில் .......
பொறாமைகளில் .....


இசைத் துறையில் மயிலிட்டிக் கலைக் குடும்பத்தின் இன்னொரு வாரிசு "B.டேரியஸ்"

Photo
டென்மார்க்கில் வாழும் திரு திருமதி ஜெயாஞ்சலி (சுபத்திரா) இரவிசங்கர் தம்பதியினரின் மகன் B.டேரியஸ் அவர்கள் சொல்லிசைப் (RAP) பாடகராக பரிணாமம் பெற்று பிரகாசித்து வருகின்றார். இவரது சகோதரிதான் "உயிர்வரை இனித்தாய்" திரைப் படத்தின் கதாநாயகி, மற்றும் அண்மையில் சிறந்த இயக்குனருக்கான "ஒளிக்கீற்று" விருதையும் பெற்றவர் என்பதை ஏற்கனவே அறிந்திருப்பீர்கள்.


"அம்மாவிற்கு ஓர் கடிதம்" மயிலை ச. சாந்தன்

Photo
அன்புள்ள அம்மா 
நலமா ......?

உன் நினைவுகளின் ஸ்பரிசத்தோடு
 நான் இங்கு நலமே !

உன் மனம் நோகடிப்பதோ 
என் துன்பங்களை கொட்டுவதோ 
நோக்கமல்ல இக்கடிதம் 
என் ஆதங்கத்தை கொட்டுகின்றேன் >>>>> 



"பூ" மயிலை ச. சாந்தன்

Photo
" பூ"

மொட்டாகயிருக்கையில் பூமாதேவியில் 
அழகாகயொலிக்கின்றேன் 
பூவாகயிருக்கையில் தேனீக்களுக்கு 
தேனாகயினிக்கின்றேன் 
பூத்துக்குலுங்க்கியதும் தெய்வங்களுக்கு 
அர்ச்சனைப் பூவாகின்றேன் 


பூப்புனித நீராட்டு விழா திருநிறைச்செல்வி அரசி

Photo
திரு திருமதி வசந்தகுமார் கெளசலா தம்பதியினரின் திருநிறைச்செல்வி அரசி அவர்களின் பூப்புனித நீராட்டு விழாவிற்கு எமது நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.


வெளிவந்துவிட்டது "தெய்வீக ராகங்கள்" இசைத்தட்டு இணைத்துக் கொள்ளுங்கள் உங்களுடன்!

Photo
மயிலிட்டி உறவுகளே வணக்கம்! 
மயிலிட்டி ஆலயங்கள் மீதெழுந்த தெய்வீக ராகங்கள் இசைத்தட்டு பிரான்ஸ் நாட்டிற்குள் வந்து அனைவரையும் வந்தடைய காத்திருக்கின்றது. வெளியீட்டாளர்களை வாழ்த்தி உங்கள் அன்பான பங்களிப்பை வழங்கி இசைத்தட்டைப்பெற்று உங்கள் இல்லங்களில் மயிலை ஆலயங்களின் மகிமையை வலம் வரப் பெறுங்கள்!

CD க்களைப் பெற்றுக்கொள்ள தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி:

ஜென்சன்: 07 51 39 95 57
அருண்குமார்: 06 80 66 66 42


"அகதிகளின் உள்ள குமுறல்" மயிலை ச. சாந்தன்

Photo
சொந்தமாயிருந்த வீடு இழந்து 
சொத்தேயென்று இருந்த கல்வியிழந்து 
சொர்க்கமேயென்று இருந்த மண் இழந்து 
சொந்தமில்லா அன்னிய தேசத்தில் 
சொல்லொணா துயருடன் அகதியெனும் பட்டத்துடன்>>>>>> 


ஈழத்தில் ஒரு சினிமா சரித்திரம்! உயிர்வரை இனித்தாய் தொடர் ட்ரெய்லர்கள்.

Photo
ஈழத்தில் ஒரு சினிமா சரித்திரம்! எங்கள் மயிலிட்டி மண்ணில் பிறந்த மகளின் மகளால் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றோம்.

நர்வினி டேரி இரவிசங்கர் அவர்கள் பிரான்ரின் "ஒளிக்கீற்று" அமைப்பினால் சிறந்த ஈழத்து இயக்குனராகத் தெரிவு செய்யப்பட்டமை அனைவரும் அறிந்ததே!

அவர் நடித்த விரைவில் வெளிவரவிருக்கும் "உயிர்வரை இனித்தாய்" திரைப்படத்தின் தொடர் ட்ரெயிலர்களை இணைக்கின்றோம் பார்த்து மகிழ்ந்து உங்கள் ஆதரவையும் வாழ்த்துக்களையும் நமது மண்ணின் மங்கைக்கு வழங்குங்கள்!


 "வறுமையின் சாடல்" - மயிலை ச.சாந்தன்

Photo
அன்பே உருவான இறைவனே 
அகிலமும் ஆளும் இறைவனே 
கல்லாலான இறைவனே 
கருணையே உன்னிடம் இல்லை(யா)
உருவமே இல்லா இறைவனே 
உருக்கமே உன்னிடம் இல்லை(யா)

மானிடர்யிடத்தில் ஏன் உன் பித்தலாட்டம் 
பொக்கிஷம் ஏன் கொடுத்தாய் பலரிடம் 
வறுமையை ஏன் கொடுத்தாய் எங்களிடம்....>>>>>


திரைத்துறையில் மயிலிட்டி மகளின் மைல்கல்!

Photo
ஒளிக்கீற்று திரையிசை பாடல் நிகழ்ச்சி புலம்பெயர் தேசங்களில் தமிழர்களின் கலை படைப்பாற்றலுக்கு அமைக்கப்பட்ட களம்.

பிரான்ஸ் பாரீசில் அனைத்து நாடுகளிலிருந்தும் போட்டியிட்ட நம்மவர்களின் படைப்புக்களில் நமது மயிலிட்டி மகள் நர்வினிடேரி இரவிசங்கர் (மயிலிட்டி பரஞ்சோதி வசீகரனின் பேத்தி) அவர்கள் ஈழத்தின் முதல் பெண் இயக்குனருக்கான "ஒளிக்கீற்று" விருதினை தமதாக்கிக் கொண்டார். இவரது வெற்றியால் மயிலிட்டி பெருமையடைகின்றது, வாழ்த்துக்கள்!


மயிலிட்டி மங்கையின் சாதனை விண்வெளிவரை.......

மயிலிட்டி மிக்கேல்பிள்ளை (அப்பையா கடை) மகன்  காலம் சென்ற ஞானகுலேந்திரன் (குலம்) மகள் சிவேன் ஞானகுலேந்திரன் என்னும் மாணவியின் அறிவியல் திறனைக் கண்டு வியந்தார்கள் விண்வெளி ஆய்வாளர்கள். அடுத்து செல்லவிருக்கும் விண்கலத்தில் இவரின் திட்டத்தனை ஏற்ற விண்வெளி ஆராச்சியாளர்கள் நடைமுறைப்படுத்தவும் முன் வந்துள்ளார்கள். பல்கலைக்கழகம் நுழைய முன்பே இவ் மாணவியின் திறனைக் கண்ட BBC தொலைக்காட்சி விசேட நேர்காணலை கண்டது. அந்த காணணெளியை நீங்களும் காணலாம்.

நன்றி: திரு. அன்ரன் ஞானப்பிரகாசம்

கல்வி உதவியும் நன்றி பாராட்டுகளும்!

Photo
யா/ மயிலிட்டி றோ.க.த.க. பாடசாலையின் பழைய மாணாவி (ஊறணி) திருமதி ஜெயராணி நிர்மலதாசன் (இலண்டன்) அவர்களால் தற்போது ஆனைக்கோட்டையில் இயங்கும் யா/ மயிலிட்டி றோ.க.த.க. பாடசாலை மாணவர்களுக்கு கழுத்துப்பட்டிகள் மற்றும் கற்கை உபகரணங்களை ஏற்கனவே அன்பளிப்பாக வழங்கியிருந்தனர், அனைவரும் அறிந்ததே! அத்துடன் பாடசாலைக்கு Photo coppy இயந்திரம் வாங்குவதற்கும் உதவியிருக்கின்றார்......

நிகழ்வின் படங்கள் இணைக்கப்பட்டுள்ளது. நன்றி திரு. அ.குணபாலசிங்கம்


Photo
எல்லாம் அவள் செயல்

அவள் கழித்துவிட்ட  புகைப்படங்களை 
பொறுக்கி சென்ற பிரம்மன்  அதன் பிரதியாக 
படைப்பின் உச்சமாக சிருஷ்டித்ததுதானாம்
"வெண்ணிலவு"

காவிய நாயகிக்காக அலைந்து களைத்த  
கம்பன் சொப்பனத்தில் அவள் கைவிரல் கண்டு 
அந்த வண்ணத்தை எண்ணத்தில் நிறுத்தி 
உருவாக்கியவள்தானம்
"காவிய நாயகி சீதா".......>>>


என் அப்பாவுக்கு தந்தையர் தின வாழ்த்து - அருண்குமார் குணபாலசிங்கம்

Photo

மயிலிட்டியைப் பிரிந்து இன்று 24 வருடங்கள், அதனையொட்டி மயிலை ச.சாந்தனின் படைப்பு!

"ஏங்குகின்றோம் " 

கருவுற்ற மண்ணில்
மூவெட்டாண்டாக நாமில்லை
நீதியின் முன் கண்ணீர்ப்பூக்களாக
தவம் கிடக்கின்றோம்
நீதி தேவதையும் மலர்கின்றாள்யில்லை மீள்குடியேற
ஈரநெஞ்சு உள்ளம் எவரையும்
மூவெட்டாண்டாக காணவும்மில்லை.....

மேலும் படிக்க......

திரு திருமதி அல்விற் வின்சன் தம்பதியினருக்கு 20வது திருமண நாள் வாழ்த்துக்கள்!

Photo

திரு. குணபாலசிங்கம் அவர்களின் விடா முயற்சியால் கிடைக்கப்பெற்ற நம்மவர்க்கான நிவாரணம்!

வலி வடக்கு மீள் குடியேற்றத் தலைவர் திரு அ. குணபாலசிங்கம் அவர்களின் கோரிக்கையின் பேரில் வடமாகாண முதலமைச்சர் திரு விக்கினேஸ்வரன் அவர்களின் வழிகாட்டலில் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் ஆதரவில் நலன்புரி நிலையங்களில் வாழும் 104 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் (அரிசி, மா, சீனி, மிளகாய்த்தூள்,பருப்பு, தேயிலை) 13/05 அன்று வழங்கப்பட்டது. திரு. ஆறுதிருமுகன் மற்றும் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மாகாண சபை அங்கத்தவர்கள், உத்தியோகத்தர்கள் ஆகியோர் முன்னிலையில் இனிதே இடம்பெற்றது. 

Photo
வலி.வடக்கு மக்களுக்கு 3 வருடங்களின் பின் நிவாரணம் - "வலம்புரி, உதயன், தினக்குரல்"
வலி.வடக்கிலிருந்து இடம் பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கி வாழ்ந்து வரும் வறுமைக் கோட்டிற்குட்பட்ட மக்களுக்கான உலர் உணவு வழங்கும் நடவடிக்கையை கடந்த 3 வருடங்களாக அரசாங்கம் நிறுத்தி வைத்துள்ள நிலையில்  நேற்றையதினம் 84 குடும்பங்களுக்கு முதற்கட்டமாக நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.


எனது கிராமத்து நினைவுகள் "மயிலை துரை"

Photo
அழகான மயிலிட்டி கிராமம்
அங்கு கம்பீரமாய் கடலில்
அசைந்தாடும் தோணிகளின் தோற்றம்

காலை நேரத்தில் அங்கு
காணும் இடம் எல்லாம்
நடமாடும் மனிதர்கள் கூட்டம்

எறும்புகள் போல் வாழ்வில்
சுற்றுவோம் சுழலுவோம் இது
அன்றாடம் நிகழ்கின்ற நிகழ்வு

கரையோரம் குடியிருக்கும் வீடு
காற்றையும் கடவுளையும் நம்பி
ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்வோம்



மன்னித்துவிடு "மயிலை ஐங்கரன்"

மன்னித்துவிடு 
நான் உன்னை மட்டும் காதலிக்கவில்லை!
இன்னும் பலரை காதலிக்கிறேன் 
உன் உறவுகள் ஊரவர் 
நீ அன்பாய் வளர்க்கும் 
நாய்க்குட்டி பூமரம் 
நீ நடந்துசெல்லும் தெரு 
தினமும் உன்னை பார்த்து மகிழும் 
தெருவோர மரங்கள் 
உன்னை சுமந்து செல்லும் சைக்கிள் ......


முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் வேலன் புவனேசன் (புவனேஸ்)

Photo
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வேலன் புவனேசன் (புவனேஸ்)


அன்னைமடியில் 22 மார்கழி 1952
ஆண்டவன்மடியில் 07 வைகாசி 2014

மயிலிட்டியைச் சேர்ந்த சுப்பிரமணியம் வரதன் அவர்களின் மாமனாரின் (மனைவியின் தந்தை) முதலாம் ஆண்டு நினைவஞ்சலி



உதவிகள் கிடைக்காவிடின் பட்டினியால் உயிர் போகும்!

Photo
உதவிகள் கிடைக்காவிடின் பட்டினியால் உயிர் போகும், நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள வலி. வடக்கு மக்களின் நிலை இது.

சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்த வலி.வடக்கு மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள 11 நலன்புரி நிலையங்களிலுள்ள 160 குடும்பங்கள் கடுமையான பட்டினி நிலைமையை எதிர்நோக்கியுள்ளன. அவர்களுக்கான உலர் உணவுப் பொருட்களை உடன் வழங்குவதற்கு அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் முன் வர வேண்டும் என்று கோருகின்றார் வலி.வடக்கு மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வுக் குழுவின் தலைவர் அ.குணபாலசிங்கம்.


காதல் சமர் "மயிலை வசந்த்"

Photo
காதல் சமர்...

பெண்ணே என் மனதை 
யுத்தசூனிய வலயமாக்கி 
இதயத்தை தலைமையாகக் கொண்டு 
காதல்சமர்  புரிந்து விட்டாய்
அணுக்கள் அனைத்தும் அழிந்து விட்டன 
நரம்புகள் நான்கைந்தைக் காணவில்லை-but 
என் இதயம் மட்டும் இன்னும் சேதாரமில்லாமல் 
ஏனெனில்-அது நீ குடியிருக்கும் 
உயர்பாதுகாப்பு வலயமதலால்....!!!


லண்டன் வாழ் மயிலிட்டி உறவுகளால் பருத்தித்துறையில் மேலும் 2 பேருக்கு தையல் இயந்திரங்கள் உதவி

Photo
கிளிநொச்சியில் 30 பேருக்குத் தையல் இயந்திரம் வழங்கிய நிகழ்வை அடுத்து, பருத்தித்துறையில் பொருளாதார நெருக்கடியால் வறுமையில் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த 2 பேருக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு மேலும் 2 தையல் இயந்திரங்களை வழங்கியிருக்கின்றார்கள்.


உயிர்வரை இனித்தாய் முதல்நாள் நிகழ்வு - நன்றி தமிழிதழ்


***பத்தாம் ஆண்டு நினைவலைகள்***

Photo
அமரர் .மயிலிட்டியூர் சின்னத்துரை நவரத்தினம் அவர்கள்.

செந்தணலில் வெந்ததுவோ செங்கரங்கள் 
-------------------------------------------------------------
விஸ்வகுலம் தந்த கலை விருட்சமின்று 
வேரிழந்து வீழ்ந்ததுவே மாநகரிலே 
சங்கவத்தை ஐங்கரனை அமைத்து நின்ற 
சங்கிலியாம் தவண்டையவர் மரபினிலே 
வந்துதித்து வள்ளலெனும் பெயரெடுத்து 
சிற்பவாரிதியாய் ஆகி நின்றாய் நின் திறத்தினால் 
(விஸ்வகுலம் )


மரண அறிவித்தல் திரு. அந்தோனிமுத்து கவுரியேற்பிள்ளை 

Photo
திரு. அந்தோனிமுத்து கவுரியேற்பிள்ளை 
இறப்பு: 20/03/2014
மயிலிட்.டியைப் பிறப்பிடமாகவும் தற்போது இன்பர்சிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிமுத்து கவுரியேற்பிள்ளை அவர்கள் 20/03/2014 அன்று காலமானார்.


மரண அறிவித்தல் திரு. மத்தியாஸ் சூசைதாஸ்

Photo
திரு. மத்தியாஸ் சூசைதாஸ் (சமாதான நீதவான்)
இறப்பு: 20/03/2014

மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும் மணற்காட்டை வசிப்பிடமாகக் கொண்ட திரு. மத்தியாஸ் சூசைதாஸ் அவர்கள் 20/03/2014 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.



ஞானராணி (பாப்பா) ஐந்தாம் ஆண்டு நினைவு அஞ்சலி


வலி.வடக்கு மக்களை நிரந்தரக் குடியிருப்பு அமைத்துக் குடியேற்ற இராணுவம் முயற்சி

Photo
வலி.வடக்கு மக்களை நிரந்தரக் குடியிருப்பு அமைத்துக் குடியேற்ற இராணுவம் முயற்சி
வலி.வடக்கு மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர அனுமதிக்காமல், நிரந்தரக் குடியிருப்பு அமைத்து குடியேற்றுவதற்கான யோசனைகளை நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இராணுவத்தினர் முன்வைத்துள்ளனர்.


"இந்த ஒரு நாள் மட்டும் எதற்கு?" ஊறணி வி. அல்விற்

Photo
தாயாய்த் தாரமாய் 
மாமியாய் மருமகளாய் 
மைத்துனியாய் சித்தியாய் 
அத்தனை பாத்திரங்களையும் உள்ளே 
சொல்லிக் கொடுக்காமலேயே 
கச்சிதமாய் செய்து முடிக்கிறோம்
ஆனால் வெளியே மட்டும் இன்னும் 
பெண்ணுடல்கள் வீசப்பட்டுக் கிடக்கின்றன 
உடல் பலவீனத்தின் இயலாமையில்
உள்ளத்தின் பலங்களும் சிந்தனைகளும் 
சிதைபட்டுப் பழிவாங்கப்படுகின்றன 
உலக இயக்கத்தின் முதற் காரணிகள் 
மிக இலகுவாக சீண்டப்படுகிறார்கள் 


"உயிர்வரை இனித்தாய்" 22 மார்ச் அன்று டென்மார்க் திரையரங்கில் பிரமாண்ட வெளியீட்டு திருவிழா..!

Photo
"உயிர்வரை இனித்தாய்" 22 மார்ச் அன்று டென்மார்க் திரையரங்கில் பிரமாண்ட வெளியீட்டு திருவிழா..!


"அமைதிபூமியில் தலைசாய" மயிலை ச. சாந்தன்

Photo
"அமைதிபூமியில் தலைசாய"

நிலைமாறா அன்பினையும் ,பாசத்தினையும் 
தந்திட்ட பூஞ்சோலை மயிலை மண்ணே 

தத்தி தவழ்ந்த குழந்தைகளையும் நிலைதடுமாறி 
நடந்திடும் முதியவர்களையும் தாலாட்டும் பசுஞ்சோலை 
மயிலை மண்ணே >>>>> மேலும்படிக்க



"விபச்சாரி" மயிலை ச. சாந்தன்

வயிற்றுப்பசிக்காக தன்னையே சிதைத்துக்கொள்பவள்
பூ மன(ண )ம் கொண்ட பாவையவள்
சில்லறைக்காக சிரித்துக்கொள்பவள்
தலைவணங்கும் பெண்குலத்துக்கே
அவமானச்சின்னமாக இருப்பவள்
ஒரு சாண் வயிற்றுக்காக
ஜென்மத்திற்கும் பாவியாக பிறப்பெடுப்பவள் >>>>> மேலும்படிக்க

வலி.வடக்கு மக்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவர் - யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி : உதயன்

Photo
வலி.வடக்கு மக்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவர் - யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி : உதயன்

வலி.வடக்கிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் அவர்களின் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்படுவர் என்றும், அதுவரை அவர்கள் ஆர்ப்பாட்டமோ, போராட்டமோ செய்ய வேண்டாம் என்றும் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் உதயபெரேரா கேட்டுக் கொண்டுள்ளார்.  >>>> மேலும்



"நிர்க்கதி" வி.அல்விற்

Photo
கருவேந்த உனை நாம் தவமிருந்தோம் 
கருவறையில் கவனமாய் சுமந்திருந்தோம் 
கதைகள் பல உள்ளேயே சொல்லி வந்தோம் >>>>>>>


மரண அறிவித்தல்

Photo
திரு. பர்ணாந்து ஜேசுதாஸ்
(இளைப்பாறிய தபால் ஊழியர்)
பிறப்பு : 28 மார்ச் 1926 — இறப்பு : 18 சனவரி 2014

மன்னார் விடத்தல் தீவைப் பிறப்பிடமாகவும், மன்னார் மூர் வீதியை வதிவிடமாகவும் கொண்ட பர்ணாந்து ஜேசுதாஸ் அவர்கள் 18-01-2014 சனிக்கிழமை அன்று காலமானார்.



நினைவஞ்சலி! அமரர் மிக்கேல்பிள்ளை ஞானகுலேந்திரன் (குலம்)

Photo
வாழும் வயதில் வரலாறாகி போனாயோ!
------------------------------------------------


உன் நினைவுத் துதி பாடவா ?
உனைப் பெற்ற ஊர்ப் புகழ் கூறவா?
அல்லது நம் இனப் பெருமை சொல்லவா ?
அண்டம் தொட்டு நிற்க்கும் அக்கினி குஞ்சை 
ஐரோப்பாக் கண்டத்தில் தந்துவிட்டு,
கண்டங்கள் தாண்டி கடவுளுக்குள் சென்றுவிட்டாய் .
விண் தொட நிமிர்ந்த வித்துவத்தை தந்து விட்டு 
விண்ணுக்கு சென்று விட்டாய்.
*************************************************   >>>>>>>


"சாதனை மலரே" - மயிலை ச.சாந்தன்

Photo
தமிழ் இனம் போற்ற பிறந்தவளே 
மயிலை மண்ணுக்கு பொன்னாடை போர்த்தியவளே 
உந்தன்  சாதனையில் பூரிக்கிது நம்மினம் 
பொக்கிஷம் போல் உன்னை காத்திட ஏங்குது நம்மினம் 

பாராட்டுமழைகள் குவியட்டும் உன்மடியில் 
சாதனை இமயங்கள் தொடரட்டும் உந்தன் அறிவில் 
விண்வெளியில் அக்கினி சுடரும் உன்காலடியில் தலைசாயட்டும் 



சமர்ப்பணம்! - மயிலை ஐங்கரன்

Photo
சாத்தியத்தின் எல்லைகளுக்குள்  இருந்து 
சாதிப்பவன் சாதரனமனாவனாகிறான் 
சாத்தியத்தின் எல்லைகளுக்குள்  அப்பால் சென்று
சாதிப்பவனே சாதனையாளனாகிறான்  

சுட்டெரிக்கும் சூரியக்கணியை இலக்காக்கி பாய்பவன் 
மரத்திலுள மாங்கனியையேனும் பற்றிக்கொள்வான் 
மரத்திலுள மாங்கனியை இலக்காக்கி பாய்பவன் 
அடிமர இலையையே பறித்துச்செல்வான்


பொங்கல்... மயிலை ச.சாந்தன்

Photo
ஏர் பூட்டி 
வயல் உழுது 
வரம்பமைத்து 
வாய்க்காலில் நீர்பாய்ச்சி 
நாற்று நட்டு 
களை கழைந்து 
முற்றிய கதிர் நிலம்சாய 
அறுவடை செய்து 
புது நெல்லெடுத்து  
வீட்டு முற்றத்தில் 
மாவிலை தோரணம் கட்டி 
வர்ணஜால கோலம்மிட்டு
......


Photo
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவு!

அமரர் கைலாயபிள்ளை துரைரத்தினம் (குட்டித்தம்பி)

பிறப்பு: 27/04/1957      ---     

கடலின் பிடியில்: 10/12/2013

மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும் நாச்சிமார் கோவிலடி, அல்வாய் வடமேற்கு, திக்கம், பருத்தித்துறை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திரு. கைலாயபிள்ளை துரைரத்தினம் (குட்டித்தம்பி) அவர்கள் 10/12/2013 அன்று அகாலமரணமடைந்தார்.


Photo
மெழுகுபோல் உருகும் தமிழினத்துக்கு 
புத்துணர்வுதரும் ஆண்டாக வருக!
நெஞ்சைத்தொட்டு மோதியெழும் -நம் 
துன்பங்கள் மூழ்கிடும் ஆண்டாக வருக!
தொலைந்த உறவுகளை  தேடும் உறவுகளுக்கு 
நல்உறவாடும் ஆண்டாகவருக!
வாழ்க்கை தொலைந்த பெண்குலங்களுக்கு 
வசந்தம் வீசும் ஆண்டாகவருக!
ஏதிலிகளாக புலம்பெயர் தேசங்களில் புலம்பும் 
ஆத்மாக்களுக்கு ஆதரவுதரும் ஆண்டாகவருக!


Photo
Hit Counter by Digits
Picture
Photo

நம்மவர்களின் அழகு நிலையம்! 

Photo
  • ஊறணி
  • பலாலி
  • மயிலிட்டி கண்ணகி அம்மன்
  • அளவெட்டி
  • அல்லைப்பிட்டி
  • ஆனைக்கோட்டை
  • இடைக்காடு
  • இணுவில்
  • உரும்பிராய்
  • ஊரெழு
  • கரந்தன்
  • குரும்பசிட்டி
  • குப்பிளான்
  • கொக்குவில்
  • கோண்டாவில்
  • சிறுப்பிட்டி
  • பண்ணாகம்
  • பனிப்புலம்
  • புங்குடுதீவு
  • புன்னாலைக் கட்டுவன்
  • மண்டதீவு
  • மன்னார்
  • மாதகல்
  • மானாவலை
  • வரணி
  • நாகர்மணல்
  • நாகர் கோவில்
  • நீர்வேலி
  • வல்வெட்டித்துறை
  • முள்ளிவாய்க்கால்

  • தமிழ்நாதம்
  • திசைகாட்டி
Photo
Photo
idhayamfm.com/
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
கௌதமன் kowtham31@hotmail.fr
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture

மரண அறிவித்தல் திரு.தம்பிராசா தவராசா (குட்டிப்பவுண்)

Photo
Photo
திருப்பூர் மயிலிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு.தம்பிராசா தவராசா (குட்டிப்பவுண்) அவர்கள் 04/072014 அன்று காலமானார்.

மேலதிக விபரங்கள்


நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர் web counter
© 2011-22 ourmyliddy.com