"தென்றல்"தென்றல் என் வீட்டு முற்றத்தில்
ஏனோ அங்குவந்து திரும்பும்போது தென்றல் தலை சாய்ந்து போகிறது! முன்பெல்லாம் என் இதயப் புன்னகையைக் காணாததால் எள்ளி நகையாடிய தென்றல், இப்போதெல்லாம் என் புன்னகையால் பூரித்துச் செல்கிறது! ஏன்தெரியுமா? என் மனையாளின் மலர்ந்திட்ட செந்தாமரை முகத்தினைக் கண்டதனால், விருந்தோம்பும் என் மனையாளின் நற்பண்பினால், இந்திரலோகத்துக் கன்னிகளே வியந்திடும் என் மனையாளின் அழகினைக் கண்டதினால், சிரித்து விளையாடும் என் குழந்தைகளின் புன்முறுவலினால், இதனால்தான் இன்று என் வீட்டு முற்றத்தில் தென்றல்கள் தென்றல்களாக கோலம் போடுகின்றன! பச்சைக் கிளிகளும் என்னவளுடன் சங்கீதம் பாடுகின்றன, அன்னங்களும் என்வீட்டு முற்றத்தில் என் செந்தாமரையாளுடன் நீராடுகின்றன, கண்ணனும் என் வீட்டு முற்றத்தில் என் நாயகியுடன் லீலைகள் பாடத் தவமிருக்கின்றான்! இதனால்தான் என் வீட்டுமுற்றத்தில் தென்றல் தென்றலாக வீசுகின்றன! ச. சாந்தன் |
|