நமது மயிலிட்டி
  • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
    • நல்வரவு! 2013,12,11
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு"
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை

"கட்டுமரம்"

Picture
நன்றி புகைப்படம் திரு. மகேஷ்

ஐயா பெரியவரே ஊன்றுகோலோடு
ஊ
ன்றிக்கொண்டு உண்டிக்குவழிதேடி
கட்டுமரம் கட்டி கடல்வழியே தொழில்
தேடிப்போகிறீரோ புரிகிறேன் போய்வாரும்
கவனமாக, கடல்வழியே மனிதப்பேய்கள்
உலாவுகிறது எச்சரிக்கை!! எச்சரிக்கை!!


கடலை நம்பி வாழும் மக்கள்
கண்ணீரோடும் கவலையோடும்வாழும்
நிலை தமிழன் நிலைதான் ஐயா!
என்செய்வேன் எப்படி எழுதுவேன்!

விடுதலை வேண்டியதால்
உமது காலையும் வேண்டினாரோ?
என்செய்வோம் எப்படிக் கூறியழுவோம்
எமது வரலாற்று சோகத்தை!
முதல்முதல் உலகவரலாற்றிலே
யேசொந்தமண்ணில்
அகதியாக்கப்பட்ட இனம் என்றால்
 அது தமிழினமே! அது தமிழினமே!
உரத்து உரைக்கிறேன்உமக்கு
உணர்ந்தீரா பெரியவரே? உணர்ந்தீரா பெரியவரே?

இன்னும் கூறவா?
சொந்தமண்ணில் பிறந்தமண்ணில்
அனாதையாய் போனவர்கள்
ஊனமுற்றுப் போனவர்கள்
ஆயிரம் ஆயிரம் என்னும் சோகம் கூறவா?
இல்லை உயிரோடு சித்திரவதைப்படும்
நிலை கூறவா?
சீர்திருத்தச்சாலையாம் சிறைச்சாலையில்
சித்திரவதைப்படும் வதைகள் கூறவா?
வதைகள் கூறவா?

இல்லை இல்லை சொந்தமண்ணில்
சோற்றுக்குக்கோப்பை தூக்கும் நிலை கூறவா?
நோய்க்கு மருந்தின்றி துடித்ததை
துடிக்கின்றதைக் கூறவா?
எதைக்கூற பெரியவரே?
எழுத்துரிமை பேச்சுரிமை பறித்து
மண்ணோடு மண்ணாக மாண்டகதை சொல்லவா?
சாம்பலாய்ப்போன கதை சொல்லவா?
தமிழரின் சோக வரலாறுகள்
அதிகமய்யா! அதிகமய்யா!
நீர் கட்டுமரம்கட்டி கடல்வழியே தொழில்தேடி
செல்லும் செயலை நினைத்து எம்மை
தேற்றுகிறோம்.நடைப்பிணமாய் போன எத்தனை
உயிர்கள் எத்தனையய்யா உம்கண்முன்னே!
இந்தநிலை, உமது நிலையை எண்ணி
தேற்றிக்கொள்ளும்! தேற்றிக்கொள்ளும்!


--- கவின்மொழி 

இங்கு பதிவு செய்யப்படும் அனைத்து ஆக்கங்களுக்கும் கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன.
உங்களால் பதிவுசெய்யப்படும் கருத்துக்கள் நேரடியாக உரியவர்களுக்குச் சென்றடைய
தொடர்பு ஏற்ப்படுத்தப் பட்டிருக்கின்றது.

    "கட்டுமரம்" கவிதைக்குரிய கருத்துக்களை இங்கே பதிவுசெய்யுங்கள்:

Submit
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர் web counter
© 2011-22 ourmyliddy.com