நான் பிறந்த மண்ணே !
பிறந்த போது என்னை ஏந்திய மண்ணே!
தவழ்ந்த போது என்னைத் தாங்கிய மண்ணே ! நடை பயின்ற போது என் கைபிடித்த மண்ணே ! தாவித் தாவி நான் தரையைத் தொட்ட மண்ணே ! என் கால்விரல்களை அடிக்கடி எண்ணிப்பார்த்த மண்ணே ! அழகான மயிலை மண்ணே ! வாதனாராணிகளையும் பூவரசுகளையும் கிழுவைகளையும் இன்னபிற மரங்களையும் எமக்காகச் சுமந்த மண்ணே ! வீரர்களையும் சூரர்களையும் கற்றவர்களையும் வித்தகர்களையும் பெற்றெடுத்து பெருமை கொண்ட மண்ணே ! அன்பான மயிலை மண்ணே ! தேவைக்கேற்ப அனைத்தையும் தன்னகத்தே கொண்ட தாய் மண்ணே ! மற்றவர்கள் உன்னைப்பார்த்து ஆச்சர்யப்பட்ட போதும் நிதானம் தவறாது முன்னேறிய பெருமைக்குரிய மண்ணே ! போட்டிகளில் முன்பாகவும் பொறாமையில் கடைசியாகவும் என்றும் மாறாநிலை கொண்ட எங்கள் மயிலை மண்ணே ! காவியமாகிய பலரைக் கண்டும் கலங்காத நீ இன்று தனியே நின்று எங்களைக் கலங்க வைப்பதேன் என் மண்ணே ! தனிமை உனக்குப் பிடித்துவிட்டதா அதற்காக எங்களைத் தனிமைப் படுத்தாதே என் மண்ணே ! பிடிவாதம் ஏன் மயிலை மண்ணே ! பசுவைப் பிரிந்த கன்றுபோல், தாயைப் பிரிந்த குழந்தைபோல் உன்னைப் பிரிந்த நாங்கள் உன் மடியில் தவழத் துடிக்கின்றோம் எப்போது எங்களை உன் மடியில் தவழவைப்பாய் என் தாய் மண்ணே ! குழந்தைகள் நாம் தவிக்கின்றோம் அழைத்துக்கொள் என் மண்ணே ! பாசமுள்ள மயிலை மண்ணே ! தவறி விழுந்த போதெல்லாம் தளராதே தாவிப்பாய் என்று ஏவி விட்ட என் தமிழ் மண்ணே ! உன் மண்ணெடுத்து பூசிக்கொள்ள அசையாயிருக்கிறது அதைவிட விழுந்து புரண்டு கதறி அழவேண்டும் போலிருக்கின்றது ! ஊரே எனது உயிரே பார் போற்றும் மயிலை மண்ணே ! தங்கத்தைவிட மேலான உன் அழகு நிலத்தை தழுவிப்பார்ப்பது எப்போது என்று தயங்காது உன் குழந்தைகளுக்குச் சொல் என்னைப் பெற்றெடுத்த மயிலை மண்ணே ! கு. அருண்குமார் பதிவு: 23/08/2012 |
You've just received a new submission to your "நினைவுகள்"
Submitted Information: உங்கள் பெயர்: கெளசிகன் கருணாநிதி உங்கள் மின்னஞ்சல்: @ அருண்குமார் அவர்கள் படைத்த நினைவுகள், நான் பிறந்த மண்ணே எம்மை ஒரு கணம் பழைய நினைவுகளுக்கு இட்டுச்சென்று நாம் பிறந்த மண்ணிற்கு அழைத்துச் சென்றது! பதிவு: 08/09/2012 ou've just received a new submission to your "நான் பிறந்த மண்ணே"
Submitted Information:உங்கள் பெயர்: Kumaran Jeyakkumar: உங்கள் மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: mikawom arumai unkal padaipu ennai en urucke kutdi senru vitdathu.pirantha pootum,thavalntha poothum thankija manai jaraal marcka mudiyum,naam enruthaan nam mannin wasathai suwasip pooma?unkal aackam thodara ennathu walthuckal பதிவு: 08/09/2012 Bonjour France,
Selvie Mano a commenté votre lien. Selvie a écrit : « வாதனாராணியும் பூவரசு கிளுவையையும் உங்கள் மயிலை மண்ணையும் கண் முன்னே கொண்டு வந்துள்ளீர்கள் .வாழ்த்துக்கள் . » பதிவு: 26/08/2012 You've just received a new submission to your
"நான் பிறந்த மண்ணே" Submitted Information:உங்கள் பெயர்: alvit vincent உங்கள் மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: எமது ஏக்கங்கள் ஒரு நாள் நிறைவடையும் என்று எதிர்பார்ப்போம் அருண்குமார். நல்ல ஆக்கம். பதிவு: 25/08/2012 You've just received a new submission to your "நான் பிறந்த மண்ணே" கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
Submitted Information:உங்கள் பெயர்: thenkili sangeetha உங்கள் மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: மிகவும் அழகான ஆழமான கவி.. சொந்த மண்ணில் வாழ வேண்டும் என்ற ஏக்கத்தை இன்னமும் அதிகப்படுத்துகின்றது.. பதிவு: 24/08/2012 |