நிம்மதி
பனை மரமேறும் மைந்தனே ஒரு கணம்.....
நீ எடுத்துவரும் போதையினை ருசிக்க உன் வீட்டுத் திண்ணையில்ஊர்வம்பு பேசிக் காத்திருக்கும் பெரியவர்களும், உன்னை இடைமறித்து பனங்கள்ளுக் குடிக்கும் முறுக்கேறிய வாலிபக் கூட்டங்களும், நீ கட்டிய முட்டிதனை கல்லால் உடைக்கும் விளையாட்டுப் பிள்ளைகளும் குதூகலிக்க..... உன் வீட்டினுள் உனக்காக உன் மனைவி மட்டும் ஏங்கியிருப்பாள்.... கள்ளு முட்டியுடன் வரும் உன் துவிச்சக்கர ஓசையே அவளுக்கு நிம்மதி! ச. சாந்தன் |
You've just received a new submission to your "பனங்கள்ளு".
Submitted Information:பெயர்: சுந்தரலிங்கம் வி மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: குணபாலசிங்கணரின் புகைப்படமும் உங்கள் கவிதை வரிகளும் மிகவும் அருமை.கள்ளின் ருசியை ருசிப்பவர்கள் மட்டுமல்ல எல்லோரும் இதை ரசிப்பார்கள். பதிவு: 29/11/2012 |
பனங்கள்ளு.... குமரேசன் தமிழன்நன்றி புகைப்படம்: திரு. குணபாலசிங்கம்
சாலை எல்லாம் பனை மரங்கள்
வானுயர்ந்து எழுந்து நிற்கும் எழுச்சிமிக்க கிராமத்திலே துணிச்சலுடன் மரமேறி குளிர்ச்சிமிக்க கள் இறக்கி மகிழ்ச்சி கொண்ட காலம் அது.. ஆதவன் சங்கமிக்கும் பொழுதுகளில் ஆடிப்பாடி கொண்டாட காத்திருக்கும் மனசுகளின் ஊக்க மருந்து தேவைக்காய் பல அடி உயரம் பக்குவமாய் ஏறி சொட்டிச் சொட்டி நிறைந்திருக்கும் பானைகளை இறக்கி தந்தாய்... கட்டு மரமேறி கடல் அலைமீது போட்டியிட்டு துடுப்பினை அசைத்து கரை சேரும் நெஞ்சங்களும் காடு வெட்டி களனி செய்து உச்சி வெய்யிலில் வற்றிப்போன உதடெல்லாம் தாகம் தீர்க்கும் உன்னைத்தேடி .. வற்றிப்போகாத காலநீரோடையில் சிக்கிய மரங்கள் மட்டும் சீரழிந்து நிற்கிறது வெடி விழுந்து எரிந்த பனை தலையிழந்து நிற்கிறதே அழியாத பல வடுக்களின் விம்பமாய் உன் தலை எழுத்தை என்ன சொல்ல? ....குமரேசன் தமிழன் You've just received a new submission to your "பனங்கள்ளு".
Submitted Information:பெயர்: Justin Thevathasan மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: Wow superrrrrr............. |
பனங்கள்ளு.... ----- சங்கீதா தேன்கிளி
நன்றி புகைப்படம்: திரு. குணபாலசிங்கம்
பனங்காற்று கொஞ்சம் களைப்பாற்றும்
பனங்கள்ளு கொஞ்சம் உரமேற்றும் கற்பகவிருட்சம் இப்பனைத மிழனின் சொத்து இப்பனை தனிப்பனைக்கள்ளு தனி ருசி பழங்கள்ளும் கருவாடும் படு ருசி இடுப்புபட்டி இறுகக் கட்டி கத்தியும் முட்டியும் சொருகி பாளைக்கயிற்றின் துணையோடு பனையேறுவாய் நீ பசுவின் மடியில் காம்பெடுத்து பால் கறப்பது போல் பனையின் முடியில் வட்டெடுத்து பனம்பால் கறப்பாய் நீ.. அப்பம் சுட ஆச்சிமாரும் அலுப்பு தீர்க்க அப்புமாரும் குதூகலிக்க குமரர்களும் கள்ளுக்காக காத்திருப்பார் அந்தக்காலம் இனிவருமா... பனைமரமே நீ சொல்லு... ----- சங்கீதா தேன்கிளி You've just received a new submission to your "பனங்கள்ளு".
Submitted Information:பெயர்: Justin Thevathasan மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: Wow superrrrrr............. |