என் இனிய கருமரமே............
நன்றி புகைப்படம்: திரு. குணபாலசிங்கம்
பனைமரே... மயிலை மண்ணில் விளைந்த நன் கருமரமே... துளிர் இலைவிட்டு பூத்துத் திளைத்து கொத்துக்கொத்தாய் நொங்குக் குலைகளுடன் காட்சிதரும் என் இனி மரமே... ஏன் இந்த வெறித்த கனல் பார்வை....? உன் நிமிர் பார்வைதனில்...... பச்சிளம் பாலகர் மயிலை மண்ணில்.... கலைமகள் மகா வித்தியாலயம் எனும் பள்ளிக்குச் செல்லும் இடைவழியில் உன் மடியில் நொங்குண்டு மகிழ்ந்ததை..... எண்ணி நீ இன்று இன்புற்று இருக்கின்றாயோ...? எம்மூர் இளைஞர் பட்டாளத்தின் கள்ள இளநீர் வேட்டையும் மாங்காய் களவும் போதாமல் உன்னுடன் கள்ளுண்ட காளையர்கள் தம் உடல் முறுக்கேறி கவிதைகள், பாடல்கள், தேவாரம், திருவாசகமெனத் தெருவெங்கும் கேட்ட இசைகளற்று இன்பமின்றி இருக்கின்றாயோ..? பன்னாடை, கங்கிள் மட்டை, பனை ஓலை, சிறுவிறகு, பனை மட்டை கொண்டுநாம் உண்பதற்கு அடுப்பினில் உலைவைத்தோமே உன்னாலே. பனம்பழப் பணியாரம், பனாட்டு, பனங்கட்டியுடன் பனங்கிழங்கு ஒடியலுடன் பெருங்கூழ் காய்ச்சிணோமே. உன் சிறு கள்விட்ட வெள்ளையப்பமென பற்பல தேனமுதமும் உண்டு மகிழ்ந்தோமே உன்னாலே... எம்மண்ணில் மக்கள் உன்னிருப்பிடம் தேடிவந்தபோது... வாழ்வதற்கு வசிப்பிடம் தந்தாய். உண்டு வாழ்வதற்கும் பற்பல இன்பங்கள் தந்தாய். இன்று.... நாமெவருமின்றி பிறதொரு மொழியான், இனத்தானுடன் உனைத் தனிமரமாய் விட்டுவிட்டு.... நன்றியற்ற மனிதர்களாய் நடைபிணமாய் வெளிநாடுதனில் ஏதிலிகளாய் வாழு(டு)கின்றோம். இங்கும் உன்னைப்போல் பன்மடங்கு உயரமான இரும்பினால் உருவான ஈபிள் ரவர் உண்டு இரவுப்பொழுதினில் பலவண்ண விளக்குகளுடன் இன்பக்காட்சி தந்தும் எமக்கென்ன பலன்.... உணப்பார்த்த பொங்கி எழவில்லையே! ஈபிள் ரவர் உச்சத்திற்கு ஏறிச்செல்ல ஏகப்பட்ட பணச்செலவுகள்.... அன்று உன்னிடம் ஏறிவந்தபோது எமை உச்சிமுகர்ந்து முத்தம் கொடுத்தாய்.... உண்டு உயிர்வாழ பல இன்பங்கள் அல்லவா அள்ளித்தந்தாய்.... நீ உயிரோடு உள்ளபோதும் இன்பம் தந்தாய் நீ உயிரைவிட்டு மண்ணில் வீழ்ந்தபோதும்..... எமக்கு பனங்குருத்து, பனையோலை, மட்டை, தீராந்தி எனப் பற்பலவும் தந்துவிட்டுத்தானே........ புன்முறுவலுடன் உன் கண்களை எமக்காய் மூடிக்கொண்டாய் பனைமரமே....... என் இனிய கருமரமே............ க. கௌசிகன் |
பனைமரம்
நன்றி புகைப்படம்: திரு. குணபாலசிங்கம்
பனைமரம் எங்களின் கற்பகதருவல்லவா, கற்பகதரு அன்று வானுயர்ந்து நின்றது, இன்று அது வட்டிழந்து நிற்கின்றது. எதிரியவன் ஏவிய எறிகணை வீழ்த்தியது அதன் தலை. எம்பாட்டன் போதைக்கு கள் கொடுத்த கற்பகதரு, அவர் தூங்க பாயுமல்லவா கொடுத்தது!! சுதா நவம் You've just received a new submission to your "பனைமரம்" சுதா நவம் .
Submitted Information:பெயர்: DR.NALLATHAMBI mutnu மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: very nice kavithai பதிவு: 20/08/2012 |