வரதராஜா சிதம்பரம்
காவிரிப்பூம்பட்டினம் போல்.. கதைகள்பல சொல்லும் மயிலையிலே.., மதிப்பிற்குரிய மனிதனாய்... மனதிற்கினிய மாந்தனாய்ப் பிறந்த.., எம் மண்ணின் மைந்தனே.. அயலவர்தம் அன்பின் பாந்தனே.., வரத வேந்தனே.........நற்குண சாந்தனே..., பொற்புவி உருட்சியில்..அதன் அருட்சியில்...., படர்ந்து வரும் மார்கழியில்..தொடர்ந்து மலரும் பதின் எட்டில்....,யாருக்கும் கிட்டா மொட்டாய்.... ஓட்டியே வந்த நன் நாள்.., அதுவோ...."நீ..பிறந்த " மென் நாள்....... கிறீஸ்த்துவின் பிறப்பைக்கூடக்.., கட்டியங்க் கூறுகின்றதோ..அப் பொன்னாள்.... இன் நாளிலே....,மயிலை வாழ் மாந்தரொடு.... உன் அன்பு சார் உறவுகளும்..,மலர்ந்த உன் வாழ்வு .... மென்மேலும் வழம் பெறவே..., குன்றாத..ஆயுளும், குறையாத செல்வமும்..., நிறைந்தோங்கும்.. உறவுகளும்...சிறந்தோங்கும் புகழும்.., மறையாத மகிழ்வும்...நிறைவாகப் பெருக......, மருகாது..போற்றுகின்றோம்.... மனமார வாழ்த்துகின்றோம்...! --நவரத்னராணி சிவலிங்கம் (செல்வி) 18 /12 /2011 தனது பிறந்தநாளைக் கொண்டாடும் அண்ணன் வரதராஜா அவர்களுக்கு குடும்பத்தார் உறவினர்கள் நண்பர்கள் சார்பாக மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றது! |
அன்னையைப் போன்ற;...
என் உயிர் சகோதரர்..
"புஷ்பராஜா" அவர்களின்
பிறந்த நாள் இன்று.
* * *
அன்னையைப் போன்ற;... என் உயிர் சகோதரர்.."புஷ்பராஜா" அவர்களின் பிறந்த நாள் இன்று.
* * *
பத்து மாதம் மடி சுமந்து...பாது காத்த தாய் போல..
இத்தனை காலமும்எமைச் சுமந்து அடைகாத்த.. மகராசா...,
பித்துப் போல் நாம் துடிக்க..போனதெங்கே நெடுந்தூரம்..,எம்
இத்துப் போன இதயத்தில்...பத்துப் போட..நீயில்லை..,
சுத்தமாக எமை மறந்து..பாசப்பற்றுத் துறந்து..போனதேனொ...?
குத்தம் என்ன நாம் செய்தோம்.....சத்தியமாய்த் தெரியவில்லை...,
அறுத்து விட்ட பட்டம் போல்...சுத்திச் சுத்தி..அலைகின்றோம்..,
விக்கித்து நிக்கின்றோம்...நெஞ்சம் முழுதும் ரணமாக.....!
நவரத்னராணி சிவலிங்கம் (செல்வி)