நமது மயிலிட்டி
  • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
    • நல்வரவு! 2013,12,11
  • ஆலயங்கள்
    • பேச்சியம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >
      • ஆலய வரலாறு
      • பரிபாலன சபையினர்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு"
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • அன்ரன் ராஜ் படைப்புக்கள் >
      • அன்ரன் றாஜ்
    • பொன்னையா மலரவன்
    • சுகுமார் தியாகராஜா
    • மயிலை வசந்தரூபன்
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • அருண்குமார் படைப்புக்கள்
    • இரா.மயூதரன்
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • Alvit Vincent
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • சங்கீதா தேன்கிளி
    • மகிபாலன் மதீஸ்
    • அஞ்சலி வசீகரன்
    • "ஜெயராணி படைப்புக்கள்"
    • மயிலையூர் தனு
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • சிந்தனை வரிகள்
    • Nirupa Sabaratnam
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • கௌதமன் கருணாநிதி
    • தயாநிதி தம்பையா
    • மயிலை வசந்த்
    • மயிலை துரை
    • ஈழ விரும்பி
    • சுதா நவம் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • சாந்தன் படைப்புக்கள் >
      • சாந்தன் படைப்புக்கள்
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக!"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • ஜீவா உதயம் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை

"உலக மகளிர் தினம் 2015"

Photo
பெண்களுக்கு சக்தியளிப்போம், மனிதத்துவத்திற்கு சக்தியளித்து வளப்படுத்துவோம்!


தாயாய்த்  தாரமாய்த்  தங்கையாய்த் தாரணியில் தன்னலமின்றி மன்னுயிர் வாழவைக்கும் பெண் என்ற பெரும்சத்தியினை வாழ்க்கைத் துணையாகத் தந்த இறைவனடி போற்றி பெண்ணுக்கு உள்ள எல்லாவிதமான அடக்குமுறைகளும் ஒடுக்குமுறைகளும் ஒழிந்திட உழைப்பதற்கு அனைத்துலகப் பெண்கள் தினமான இன்று அனைவரும் உறுதி கொள்வோம்.
 பற்றிமாகரன் 

இந்தப் பக்கம் Hit Counter by Digits தடவை பார்வையிடப்பட்டுள்ளது.

"உலக மகளிர் தினம் 2014"

"பெண் " மயிலை ச. சாந்தன்

Photo
பெண் 

பெண் பெருமைக்குயுரியவள் 
பெருமையோடு போற்றக்கூடியவள் 
தாயாகக்கூடிய வரம் கொண்டவள் 
அன்பையே வரப்பிரசாதமாக கொண்டவள் 

ஓடும் உலகின் அச்சாணியாக அவதாரம் கொண்டவளே  
அகிலமும் ஆண்டிடும் அன்பை இயல்பாக கொண்டவளே  
பரந்த பூமியில் வளர்ந்திடும் 
பணமோகத்தில் ...
போட்டிகளில் .......
பொறாமைகளில் .....
பெண்ணே உன்னையிழந்துவிடாதே

உன் உயர்வுக்கு நீ தடைக்கல்லாகாதே 
உடைத்துவிடு உன் மனக்கோட்டைகளை 
நியக்கோட்டைகளில் நின்மதிகளை நிலைக்கவிடு 
உன் கால்லடிகளில் வந்து விழும் புகழ்மாலைகள் 

பெண்ணே பெண்களுக்கு நீ போட்டியாகாதே 
உனக்கு நீயே முட்டுகட்டையாகாதே 
மாமி ​ ​-மருமகள் 
நாத்தனார் -மச்சாள் 
அக்கா -தங்கச்சி 
சண்டைகளை நிறுத்திவிடு 
புகழ் பாடும் பொன்மாலை உன் வாசல் தேடும்

பெண்ணே உனக்குள் உள்ள வரையறைகளை தளர்த்திவிடு 
வான்னேறி வையகம் போற்றும் பெண்ணுலகம்மிது 
ஆண்கள் மீது சேறுபூசி நீ தாழ்ந்துவிடாதே 
ஆண்கள் ஒன்றும் ஆதிக்க நாயகர்கள் அல்ல 
அன்புக்கு அடிபணியும் அன்புவாதிகள் 

கண்களையும் 
வாய்சொற்களின் வீரங்களையும் 
 சட்டங்களின் பொக்கிசங்களையும் 
உனது போர்வையாக கொள்ளாதே 
புத்திதனை தீட்டி 
புன்னைகையினை அணிகலமாக அணிந்து 
விட்டுகொடுப்பினை விதையாக விதைத்து 
பொறமையினை களையாக களைந்து பார் 
உயர்வினை அறுவடை செய்வாய் பெண்ணே 

              நன்றி 
           மயிலை ச .சாந்தன்
           08.03 2014

"இந்த ஒரு நாள் மட்டும் எதற்கு?" ஊறணி வி. அல்விற்

Photo
இந்த ஒரு நாள் மட்டும் எதற்கு?

தாயாய்த் தாரமாய் 
மாமியாய் மருமகளாய் 
மைத்துனியாய் சித்தியாய் 
அத்தனை பாத்திரங்களையும் உள்ளே 
சொல்லிக் கொடுக்காமலேயே 
கச்சிதமாய் செய்து முடிக்கிறோம்
ஆனால் வெளியே மட்டும் இன்னும் 
பெண்ணுடல்கள் வீசப்பட்டுக் கிடக்கின்றன 
உடல் பலவீனத்தின் இயலாமையில்
உள்ளத்தின் பலங்களும் சிந்தனைகளும் 
சிதைபட்டுப் பழிவாங்கப்படுகின்றன 
உலக இயக்கத்தின் முதற் காரணிகள் 
மிக இலகுவாக சீண்டப்படுகிறார்கள் 
உணர்வுகளை மதியுங்கள் 
சிந்தனைகளை ஏற்றுக் கொள்ளுங்கள் 
வேறுபாட்டைக் களைந்து விடுங்கள் 
பழிவாங்கலைத் தவிர்த்து விடுங்கள் 
உங்களைப் போலவே அவர்களையும் 
ஏற்றுக் கொள்ளுவீர்களாயின் 
இந்த ஒரு நாள் மட்டும் எதற்கு 
வாழ்த்துச் சொல்ல?

வி.அல்விற்.
07.03.2014.


Picture
Picture
Picture
Picture
Picture

"பெண்ணே"

பூவுலகின் சத்தான வித்தே..

உதயத்தின் முத்தான நீ..


பித்தாகாதே..,


சத்தாக இருக்கட்டும் உன் வேகம்..


உலகிற்குப் பத்தாது போகா உன்


விவேகம்..,

விசுவாசத்தின் பிறப்பிடம் நீ..


யாசிக்காதே யாரிடமும் உன்


சுதந்திரத்தை..,

யோசித்துக் கொள்..


பெண்ணே..


உலகின் எல்லாஉரிமைக்கும்


உரியவள் நீ..,

வரிந்து கட்டிக் கொள் வீரத்தை..

பரந்த பூமி உனக்கானாது..


உன் 
விரிந்த கரங்களில்

அணைத்துக்கொள்..

தெரிந்து கொள் உனையன்றி ஏதும்

இயங்காது..,

உரித்தான உன் உரிமை;


அடுத்தவர் தருவது பிச்சை..


உனக்கு வேண்டாம் அந்த எச்சை...


பூமிக்குத் தாயும் நீ..


அதைத் தாங்குபவளும் நீ..,


உன் பூமியில் அனைத்தும் உனதே


உனது..

புவி எத் திசையும் உன் பாதத்தில்


சமர்ப்பணமே...!

.......நவரத்னராணி சிவலிங்கம் 
Picture

"பசுமை மலரும் நிச்சயம்"

பசுமை மலரும் நிச்சயம்

கொடுமையின் வேகமா உன்முகத்தில்

கொத்தரிவாள் ஏன் உன்கையில்

நம் நாட்டில் பிறந்த பெண்களின் பிரதிபலிப்பா நீ

கொடுமை கொடுமை என ஓடும் பெண்கள்

ஓய்வதுதான் எப்போது இறைவா?

பாசமாக சாதம் பரிமாறும் சந்தனக் கையை


என்றுதான் அரிவாளின்றிப் பார்ப்பது............

ஒளிவட்ட முகம் கோபமின்றி

ஒளிநிலவாக வலம் வருவது எப்போது?

கவலை வேண்டாம் பெண்ணே

பசுமை மலரும் ஒருநாள் நிச்சயம்!

........ச. சாந்தன்

"அனுபவித்துக்கொள் பெண்ணே அனுபவித்துக்கொள்...!"

அன்பினுருவமாம் தந்தைக்கும் தாய்க்கும்..

இன்பவுருவமாய்க் கருவினில் தரித்து..

பென்னினுருவமாய்ப் பூமிக்கு வந்த பெண்ணே..

அனுபவித்துக்கொள் பெண்ணே அனுபவித்துக்கொள்...!


பச்சிளம் குழந்தையில் பார்ப்பதற்கு அழகாயிருப்பாய்..

பள்ளிக்குச் செல்கையில்.. புள்ளிமான்போல்
துள்ளித் துள்ளித் திரிவாய்..

ஆண்கள் பேதமின்றி அனைவருடனும் இயல்பாய்ப் பழகுவாய்..

ஆனால் நீ வயதிற்கு வந்ததும்..
வட்டத்துக்குள் அடக்குவார்..

அதனால்இப்போது.....

அனுபவித்துக்கொள் பெண்ணே அனுபவித்துக்கொள்...!

நீ சிறுமியாக இருந்தபோது உன் அழுக்குடைகளை..

அன்னையவள் அலசித் தோயப்பாள்..

நீ வயதிற்கு வந்ததும்
அண்ணன் தம்பியின்

அழுக்கு உடைகளை அலசித் தோயக்கவேண்டிவரும் கடினம்

அதனால் இப்போது..

அனுபவித்துக்கொள் பெண்ணே அனுபவித்துக்கொள்...!


சந்தன தேவதை என்று செல்லம் கொஞ்சி

சகலதும் இன்பமாகச் சமைத்துத் தருவார் உனக்கு

நீ சமைந்தபின் அக்கம் பக்கம்
எங்கும் செல்லாது

அன்னைக்கும் தந்தைக்கும் அண்ணனுக்கும் தம்பிக்கும்

புகையிருட்டில் சமைத்துக் கொடுக்க வேண்டிவரும் கண் எரிய

அதனால் இப்போது.....

அனுபவித்துக்கொள் பெண்ணே அனுபவித்துக்கொள்...!


நாசமாய்ப் போன சீதனத்தாலும்

சாதி சமயக் கோதாரிகளாலும்

மோசமான ஒருவன் வரலாம் உன்னைக் கைபிடிக்க

அதனால்
அன்னை தந்தையுடன் இருக்கும்வரை

 அனுபவித்துக்கொள் பெண்ணே அனுபவித்துக்கொள்...!


திருமணம் முடிந்ததும் நல்மனம் கொண்ட..

உன் பொன் வீட்டைப் பிரிந்து..

கல்மனம் கொண்ட மன்வீட்டிற்குப் போகவேண்டிவரும்

ஆமியைப் போன்ற மாமியாரின் கொடுமைகளால்

காஸ் வெடித்துச் சிதறி ஆவியாக அலையவேண்டிவரும்

ஆதலால் இப்போது....

அனுபவித்துக்கொள் பெண்ணே அனுபவித்துக்கொள்...!


செல்லமாக இருந்த நீ வளர்ந்ததும்..

அன்னைக்கும் தந்தைக்கும் பயப்படுதலன்றி

அண்ணனுக்கும் தம்பிக்கும் பயப்பட வேண்டும்

புகுந்தவீட்டிலோ..
உன் கணவருக்கு மட்டுமன்றி

மாமிக்கும் மாமாவுக்கும்
அவர்களின் தாயின் பேத்திக்கும்

மச்சாளுக்கும் மச்சானுக்கும்
காலை எழுந்துநின்று சலூட் அடிக்க வேண்டிவரும்..

நீ பெற்ற பிள்ளை ஆண்மகனாக இருந்தால்

அவன் வளர்ந்து ஆளாகியதும் அவனுக்கும் அடிக்கவேண்டிவரும் சலூட் கவனம்

எனவே இப்போது

அனுபவித்துக்கொள் பெண்ணே அனுபவித்துக்கொள்...!


மாமியின் வீட்டிற்குள்
மதில் சுவருக்குள் மறைவாகவே
வாழ வேண்டிவரலாம்..

பாசமான உன் தாய் தந்தையினைப் பார்த்து வரவும்

மாமியாரின் அனுமதிக்குக் காத்திருக்கவேண்டிவரலாம்

அதனால் இப்போதே....

அனுபவித்துக்கொள் பெண்ணே அனுபவித்துக்கொள்...!


அண்ணனுக்கு தம்பிக்கும் உடைகள் தோய்த்த உன்கைகள்

பெண்களின் தடைகளைத் தகர்ப்பது எப்போது..?

அடுப்பங்கரையினில் இருந்து நீ ஆழ்கடலுக்குத் தனியே

துடுப்பெடுத்து வலித்துச் செல்வது எப்போது..?

கொடுமையான மாமியாரின் மரமண்டையில்

சூடான தாச்சி வைத்து மிளகாய் தாளிப்பது எப்போது..?

காட்டுமிராண்டித் தனமான கணவன்மார்களின் காலில்

கால்த் தடம் போட்டு வீழ்த்துவது எப்போது..?

உலக இராணுவத்தால் கற்பழிக்கப் படுகின்ற நிலை மாறி

அவர்களின் காலுக்குள் வெடிகுண்டு வைப்பது எப்போது..?

மச்சாளுக்கும், மச்சானுக்கும், மாமிக்கும், கணவருக்கும்

உன்னை அடிமைப்படுத்தும் உலக சமுதாயத்திற்கும்

நீ "ஆப்பு" வைப்பது எப்போது................???????????????

......க.கௌசிகன் 

"உலகம் உன் காலடியில் பெண்ணே..."

பெண்ணே...

ஆண்டவன் தோட்டத்தில்
அழகு சிரிக்கின்றது

சமுதாயத்தில்
நீ சிரிக்க ஏன் மறுப்பு?

கடல்தனில் தவமிருக்கும்
கொக்கு சிரிக்கின்றது

குடும்பம் தனையாண்டிடும் நீ
ஏன் தலை சாய்கிறாய்?

பறந்து திரியும் பறவைகள்
பாடிச் சிரிக்கின்றன

பாசம் காட்டும் நீ ஏன்
பாறாங்கல் போல் முடங்கிக் கிடக்கின்றாய்?

பூக்கள் எல்லாம்
மலர்ந்து சிரிக்கின்றன

பூக்களுக்கே அழகைக்கொடுக்கும்
நீ ஏன் மலரமறுக்கின்றாய்?

வீறு கொண்டெழு பெண்ணே....

புத்திதனை தீட்டிடு பெண்ணே....

திட்டம்தனை வகுத்திடு பெண்ணே....

நீ அடிமை எனும் உணர்வை
மறந்திடு பெண்ணே....

மிகவிரைவில் உலகம்
உன் காலடியில் பெண்ணே....!


........ச.சாந்தன் 
Picture

"மாண்புமிகு பத்தினியாய்"

அற்றிருத்தல் நலம்

பற்றறுத்தலை விடவும்

மோப்பக் குழையும் அனிச்சமென

மௌனித்திருக்கையில்

பிய்த்தெறிந்துவிடுகிறாய்

அறிந்தோ அறியாமலோ...

மாதவிடாய்க் கதைகள் பேசி

மகிழ்ந்திருக்க முடிவதில்லை பெண்ணாக...

பாண்டி வட்டத்திற்குள் சுருங்கிக்கொண்டு

புளியங்கொட்டைகளுடன்

புன்னகைக்கச் சொல்கிறாய்

முகப்புத்தகத்தில் உலகிருக்கும் யுகத்தில்...

அரசியல் கல் களைய

ஆர்வமிருக்கையில்

அரிசியில் கல் களைகிறேன்

மீண்டும் மீண்டும்...

விலகலில் கூட

புரிந்துகொள்கிறேன் உன்னை

உணர்தலில் கூட

தொடர்வதேயில்லை என்


நெஞ்சிருப்புக்களை

நீ...


முரண்பாட்டு மேசைகளில்

உணவருந்திக்கொண்டிருக்கிறோம்

எண்ணக் கிளிஞ்சல்கள்

தேங்கிக் கிடக்கின்றன தட்டுக்களில்

அற்றிருத்தல் நலம்தான் போலும்

பற்றறுத்தலை விடவும்...


......தேன்கிளி சங்கீதா
Picture

"ஒருத்தீ"

காற்றுவெளி கிழித்துச் செல்கிறாள்
ஒரு குதிரைக்காரி


விண்தொட ஏகும் நோக்கத்தோடு
திக்குத்திசையற்று....


கடிவாளம் அற்றதாய்
எட்டுக் கால்களுடன் அவள் குதிரை


மலைமுகடுகள் தாண்டும் ஆசை
ஒரே பாய்ச்சலில்...

திக்கெட்டும் தெறித்துச் சிதறும்
ஒலிகளற்ற அவள் குரல்


புவிப்பரப்பெங்கும் மிதந்து திரியும்
கட்டற்ற அவள் மனம்


சிறுவட்டங்களை அழித்துக்கொண்டிருக்கின்றன
அவள் பாதங்கள்


அண்டங்களை ஆளும் சூட்சுமங்களை வரைகின்றன அவள் கைகள்...

உடைந்த மூங்கில் புல்லாங்குழலுடன் அவள்


வறண்ட வயல்கிணற்று வீட்டில்


விண்மீன் தொட ஏகும்


ஒரு பாடலுக்காக

முயற்சித்துக்கொண்டு...



......தேன்கிளி சங்கீதா 

    உங்கள் கருத்துக்களை இங்கே பதிவுசெய்யுங்கள்:

Submit

நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர் web counter
© 2011-23 ourmyliddy.com