மீளக்குடியமர்த்துமாறு நீதிமன்றத்தில் வழக்குதயாராகுகின்றனர் மயிலிட்டி மக்கள்
எம்மை மீளக்குடியமர்த்துமாறு பலரிடம் மனுக்கள் கையளித்தும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் இல்லை. எனவே எங்களை மீளக்குடியமர்த்துமாறு கோரி நீதிமன்றத்தை நாடுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். இதற்கு வலி.வடக்கு பிரதேச சபையும் எமக்கு உதவி வழங்க வேண்டும் என மயிலிட்டியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரதேசத்திலிருந்து இடம் பெயர்ந்து உறவினர் வீடுகளிலும் நலன்புரி முகாம்களிலும் வாழும் மக்களின் மீளக்குடியமர்வினை துரிதப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் வலி.வடக்கு பிரதேச சபையின் தலைமையலுவலக மாநாட்டு மண்டபத்தில் தலைவர் சோ.சுகிர்தன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போதே மேற்படி உறுதிமொழி மக்களால் வலி. வடக்கு பிரதேச சபைக்கு வழங்கப்பட்டது. மயிலிட்டியில் இருந்து இடம்பெயர்ந்த உங்களை சொந்த இடத்தில் குடியமர்த்தாது, வலி.கிழக்கு பிரதேசத்தில் உள்ள "அக்கரை' என்னும் இடத்தில் குடியமர்த்துவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் நடைபெறுவதாக ஊடகங்கள் மூலம் அறிய முடிகிறது.
எனவே இந்த விடயம் தொடர்பில் உங்கள் அபிப்பிராயங்கள் எமக்குத் தேவையாக உள்ளது என மக்களிடம் வலி.வடக்கு பிரதேச சபைத் தலைவர் தமது தலைமையுரையில் கேட்டுக்கொண்டார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்ட மக்கள் மயிலிட்டி பிரதேசமானது மண்வளமும், கடல்வளமும், கைத்தொழில் வளமும் கொண்ட பிரதேசமாக இருந்தது. சொந்தத் தொழில் செய்தே நாங்கள் வருமானம் ஈட்டினோம். நாங்கள் யாரிடமும் கையேந்தும் தேவை எழவில்லை.
ஆனால் தற்போது நாங்கள் படுகின்ற துன்பங்கள் ஏராளம். இடம்பெயர்ந்து வாடகை வீடுகளில் வசித்து வருகின்ற நாங்கள் வீடுகள் மாறிமாறி தொடர்ந்தும் அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்றோம். வீட்டு உரிமையாளர்கள் எங்களை வீடுகளை விட்டு வெளியேறச் சொல்லியுள்ளனர். இதனால் நாம் நிர்கதியான நிலையில் உள்ளோம்.
கடற்றொழில் தவிர மாற்றுத் தொழில் தெரியாத நிலையில் வேறு எவ்விடத்திலும் தொழில் செய்ய முடியாத நெருக்கடிக்குள் நாம் வசித்து வருகின்றோம். இலங்கையின் இரண்டாவது பெரிய மீன்பிடித்துறைமுகமாக மயிலிட்டித் துறைமுகம் இருந்தது.
மயிலிட்டித் துறையில் கடற்றொழில் செய்பவர்களைத் தவிர அந்தத் தொழிலை அண் டித் தொழில் செய்பவர்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டுடை நலன்புரி முகாமில் 23 குடும்பங்கள் வசித்து வருகின்றோம். நாம் இங்கிருந்தும் இடம்பெயர வேண்டிய கட்டாய நிலையில் உள்ளோம்.
மயிலிட்டியில் அமைந்திருந்த காசநோய் வைத்தியசாலை மிகப்பெரிய வைத்தியசாலையாகும். இந்தப் பிரதேசமே வைத்தியசாலைக்கு ஏற்ற காலநிலையினைக் கொண்டதாகும்.
வளம் நிறைந்த இந்தப் பூமியினை நாம் ஒரு போதும் விட்டுக் கொடுப்பதற்கு தயாராகவில்லை. மயிலிட்டி, பலாலி, காங்கேசன்துறை, ஊறணி பிரதேச இடம்பெயர் மக்கள் சார்பில் சமாசம் ஒன்று உள்ளது. இதன் சார்பில் எம்மை மீளக்குடியமர்த்துமாறு மனுக்களை நாம் அனைவரிடமும் வழங்கியுள்ளோம்.
ஆனால் இதற்கான நடவடிக்கைகள் எதுவும் இதுவரை இல்லை. எனவே எம்மை மீளக்குடியமர்த்துமாறு இடம்பெயர் மக்கள் சார்பில் சட்ட ரீதியான நடவடிக்கை உரிமையைக் கேட்டுப் பெறுவதற்குரிய வழியாக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதன் மூலம் நிரந்தரத் தீர்வினைப் பெற்றுக் கொள்வதற்கு நாங்கள் அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்கத் தயார் என்று தெரிவித்தார். இதற்கமைவாக நீதிமன்ற நடவடிக்கைக்குரிய குழு ஒன்று நேற்று தேர்வு செய்யப்பட்டது.
நன்றி: http://onlineuthayan.com
பதிவு 28/07/12

Gnanapragasam Anton
மீள்குடியேற்றாவிட்டாலும் சொந்த இடங்களில் தொழில்புரிய அனுமதிக்க வேண்டும்: வலிகாமம் கடற்றொழிலாளர்
[ திங்கட்கிழமை, 11 யூன் 2012, 01:45.43 PM GMT ]
அரசு மீள் குடியமர்விற்கு எம்மை உடன் அனுமதிக்காவிட்டாலும் எமது சொந்த இடங்களுக்கு சென்று தொழில் புரிவதற்காவது அனுமதிக்க வேண்டும் என மயிலிட்டி இடம்பெயர்ந்தோர் மீனவ சங்க தலைவரும் வலிகாமம் வடக்கு கடற்றொழிலாளர் சமாச பிரமுகருமான வி.யோகராசா தெரிவித்துள்ளார்.வடபகுதி கடற்றொழிலாளர்களுக்கு வழங்ககப்பட்டு வந்த நிவாரணம் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தொழிலும் இன்றி நிவாரணமும் இன்றி தமது பகுதி கடற்றொழிலாளர்கள், வாழ்வாதார உதவிகள் இன்றி இன்னல்களை அனுபவித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
நூற்றுக்கணக்கான மயிலிட்டி மீனவ குடும்பங்கள் இடம்பெயர்ந்த நிலையில், கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக வல்வெட்டித்துறை முதல் கற்கோவளம் வரையான வடமராட்சி கரையோரக் கிராமங்களில் வசித்து வருகின்றன.
இந்நிலையில் இடம்பெயர்ந்த இந்த கடற்றொழிலாளர்கள் தாம் தங்கியுள்ள இடங்களில் கடற்றொழில் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மீறி தொழில் செய்ய முற்படும் போது உள்ளுர் மீனவர்களுக்கும் இடம்பெயர்ந்த மீனவர்களிற்குமிடையே மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.
வன்னிக்கு சென்ற மீனவர்கள் சொந்த இடம் திரும்பியுள்ளனர். இதனால் கடற்கரை பகுதிகள் நெரிசலை எதிர் கொண்டுள்ளன. இதனாலேயே மோதல் சூழல் தோன்றியுள்ளது. எனினும் நாங்கள் சுமூகமாக செயற்படவே விரும்புகிறோம்.
அரசு மீள் குடியமர்விற்கு எம்மை உடன் அனுமதிக்காவிட்டாலும் எமது சொந்த இடங்களுக்கு சென்று மீன்பிடிக்கவாவது அனுமதிக்க வேண்டும் எனவும் வலிகாமம் வடக்கு மீனவ சமாச பிரமுகருமான வி.யோகராசா மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.
நன்றி:http://www.tamilwin.com/show-RUmqyGSVOWfq6.html

வலி.வடக்கு மீள்குடியமர்வு இராணுவத்தினர் கைகளிலேயே! என்னால் எதுவும் செய்ய முடியாது: இமெல்டா கைவிரிப்பு
[ வியாழக்கிழமை, 05 ஏப்ரல் 2012, 03:10.09 AM GMT ]
வலிகாமம் வடக்கு பகுதி மக்களின் மீள்குடியமர்வு தொடர்பாக என்னால் எதுவும் கூற முடியாது எனவும் மக்கள் இப்பகுதியில் குடியமர பாதுகாப்பு தரப்பினரே தனக்கு அனுமதி வழங்கவேண்டும் எனவும் யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.வலிகாமம் வடக்கு, ஊரணி, மயிலிட்டி வடக்கு, பலாலி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்.அரச அதிபருக்கு தம்மை விடுவிக்குமாறு கோரி மகஜர் ஒன்றை கையளிளத்திருந்தனர்.
இந்நிலையில், இது தொடர்பில் யாழ்.அரச அதிபர் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும்,அப்பிரதேச மக்களுக்கு எந்தவிதமான உறுதி மொழிகளையும் அவர் வழங்கவில்லை.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
விடுவிக்கப்படாத பகுதிகள் தொடர்பில் நான் இராணுவத்தினருடன் பேசி கொண்டே இருக்கின்றேன். இயலுமான பகுதிகளை அவர்களும் விடுவித்துக் கொண்டே இருக்கின்றனர். என்ன என்றாலும் என்னிடம் கோரிக்கை விடுங்கள் என்னால் முடிந்ததை மட்டுமே நான் செய்கின்றேன்.
பாதுகாப்பு தரப்பினர் எனக்கு அனுமதி வழங்காமல் நான் உங்களுக்கு மீளக்குடியமர்த்த முடியும் என வாக்குறுதி வழங்கமுடியாது. விடுவிக்காதவற்றை என்னால் அடித்து பறிக்க முடியாது என யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
அரச அதபரின் பதிலினால் மனம் பாதிப்படைந்த மக்கள் சாத்வீக வழியில் போராட்டம் நடாத்த போவதாக தீர்மானித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
நன்றிhttp://www.tamilwin.com

யாழ்ப்பாணம் வலி.வடக்கை விடுக்க கோரி போராட்டம் நடாத்தும் முயற்சியில் அப்பகுதி மக்கள்
[ புதன்கிழமை, 04 ஏப்ரல் 2012, 03:11.52 AM GMT ]
யாழ்ப்பாணம் வலி.வடக்கை விடுக்க கோரி போராட்டம் நடாத்தும் முயற்சியில் அப்பகுதி மக்கள்
[ புதன்கிழமை, 04 ஏப்ரல் 2012, 03:11.52 AM GMT ]இராணுவத்தினர் வசமுள்ள வலிகாமம் வடக்கு பகுதியை விடுவிக்கக் கோரி அப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவதற்கு தயாராகி வருகின்றனர் எனத் தெரியவருகின்றது.பலாலி, மயிலிட்டி, ஊரணி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களே இவ்வாறு பேராட்டத்திற்கான முனைப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இப்பகுதியலிருந்து இடம்பெயர்ந்து 22 வருடங்கள் ஆகிய போதும் இவர்கள் இதுவரையில் தமது சொந்தப்பகுதிகளை பார்வையிட கூட இராணுவத்தினர் அனுமதி வழங்கவில்லை.
இதனால் இவர்கள் தமது பகுதிகளை விடுவிக்ககோரி யாழ்.அரச அதிபரிடம் மகஜர் ஒன்றையும் ஏற்கனவே கையளித்திருந்தனர். இந்நிலையில் இவர்கள் எதிர்வரும் நாட்களில் பேராட்டம் நடாத்தலாம் என தெரியவருகின்றது.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட ஒருவர் கருத்து தெரிவிக்கையில், நாம் எமது பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து பல வருடங்களாகின்றன. எமது இடங்களில் இராணுவத்தினர் உள்ளனர்.
ஆனால், யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டும், சொந்த இடத்திற்கு செல்ல முடியாத நிலையில் உள்ளோம். இப்போது நாங்கள் தங்கியுள்ள நண்பர்களின் உறவினர்களின் வீடுகளில் நாம் எதிர்வரும் நாட்களில் தங்கியிருக்க முடியாது.
எனவே மிகவிரைவாக எமது பகுதிகளுக்கு செல்ல எமக்கு அனுமதிக்க வேண்டும். இழப்பதற்கு உயிரைத்தவிர எம்மிடம் இனி ஒன்றுமில்லை என்றார்.
நன்றி தமிழ்வின்.கொம்

மயிலிட்டி மீழ்குடியேற்ற கோரிக்கை!
வலி. வடக்கில் மீள்குடியேற்றப்படாத பகுதியில் விரைந்து குடியேற்ற கோரிக்கை
வலிகாமம் வடக்கு, காங்கேசன்துறை, மயிலிட்டி, பலாலி வடக்கு, பலாலி வடமேற்கு ஆகிய பகுதிகளில் விரைந்து மீள்குடியேற்றம் செய்ய வலியுறுத்தி, வலிகாமம் வடக்கு இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றக் குழு யாழ். மாவட்டச் செயலர் இமெல்டா சுகுமாரிடம் மனு ஒன்றைக் கையளித்துள்ளது.
யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று காலை, மீள்குடியேற்றக் குழுத் தலைவர் அ.தனபாலசிங்கம் தலைமையில் குறித்த மனு மாவட்டச் செயலரிடம் கையளிக்கப்பட்டது.
தம்மை வரைவாக மீள்குடியேற்றம் செய்யுமாறு வலியுறுத்தி சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எழுதியுள்ள மனுவின் பிரதியே மேற்படி மாவட்டச் செயலருக்கும் வழங்கப்பட்டது.
அம்மனுவில்,
இருபத்திரண்டு வருடகாலமாக எங்கள் ஊரையும் காணி, வீடுகளையும், உயிர் உடமைகளையும் இழந்து நிற்கதியான நிலையில் நின்று என்ன செய்வது, ஏது செய்வது, எங்கு செல்வது என்று கலங்கி நிற்கும் மக்கள் நாம் கண்ணீரும் கவலையுடனும் ஒரு விடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கைடயுடன் விண்ணப்பித்துக் கொள்வதாகவும்,
நாட்டில் முள்ளிவாய்க்கால் யுத்தம் நிறைவடைந்து மூன்று வருடங்கள் முடிவடையும் நிலை நெருங்கிவிட்ட நிலையிலும் யுத்த அனர்த்தத்தினால் நாம் எமது உறவுகளையும் சொத்துக்களையும் இழந்து உண்ணும் உணவிற்கே கஸ்ரப்பட்டு கலங்கி நிற்கின்றோம். இந்தநிலை மாற வேண்டும். மாற்றப்பட வேண்டும். எனவும்
யுத்தம் நிறைவடைந்ததும் மனதில் ஒரு நம்பிக்கை பிறந்தது. எமது ஊரில் எங்கள் காணி வீடுகளில் மகிழ்வுடன் சுதந்திரமாக வாழப்போகின்றோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
2வது மீன்பிடித் துறைமுகமும் இலங்கையின் முதலாவது காசநோய் வைத்தியசாலையும் உருவாக்கப்பட்டதுமான இப்பகுதி கடல் வளத்திலும் விவசாய வளத்திலும் உழைப்பின் மூலம் நாட்டின் வருமானத்தை உயர்த்தி நின்றது. நாம் எமது ஊருக்குச் செல்ல முடியுமா? என்ற ஏக்கத்துடன் வாழ்ந்து விரக்தி அடைந்த நிலையில் எமது ஊரில் எமது சொந்தக்காணிகளில் வீடுகளில் சொந்தமான தொழில் செய்து நாம் வாழ வழி செய்து தாருஙங்கள் என்று ஒருமித்த கருத்துடனும் ஒருமித்த குரலிலும் கேட்டு நிற்கின்றோம். எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அத்துடன் இந்தக் குழுவினால்,
மிள்குடியேற்ற அமைச்சர், பிரதியமைச்சர் (கருணா), அமைச்சர் தேவானந்தா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தெல்லிப்ழை மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலர்கள், வட மாகாண ஆளுநர், யாழ். மாவட்டக் கட்டளைத் தளபதி, ஆயர், இந்து மதப்பேரவைத் தலைவர், ஐ.தே.க எம்.பி விஜயகலா ஆகியோருக்கும் இம்மனு கையளிக்கப்படவுள்ளன.
நன்றி உதயன்.கொம்

வலிகாமம் வடக்கு பகுதியில் மக்களை மீளக்குடியமர்த்துமாறு யாழ்.அரச அதிபரிடம் மகஜர் கையளிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 03 ஏப்ரல் 2012, 07:18.36 AM GMT ]
வலிகாமம் வடக்கு, காங்கேசன் துறை, மயிலிட்டி, பலாலி வடக்கு போன்ற பகுதிகளில் மக்களை மீள்குடியேற்றம் செய்யுமாறு வலியுறுத்தி, இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றக் குழுவினர், யாழ்.அரச அதிபர் இமெல்டா சுகுமாரிடம் மகஜர் ஒன்று கையளித்துள்ளனர்.22 வருடங்களுக்கு மேலாக சொந்த ஊர்களை விட்டு இடம்பெயர்ந்து, பெரும் இன்னல்களை எதிர்நோக்கி வருவதாகவும் தற்போது நாட்டில் போர் முடிந்து மூன்று வருடங்கள் நெருங்கிக் கொண்டிக்கும் அந்த நேரத்தில், எமது பிரதேசத்தில் இதுவரை மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை.
இதனால் எமது மக்கள், தனியார் காணிகளில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மக்கள் முகம் கொடுத்து வருவதாக, வலிகாமம் வடக்கு இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றக் குழுவின் தலைவர் குணபால சிங்கம் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக, ஜனாதிபதியின் கவனத்திற்கும் பாதுகாப்பு அமைச்சிற்கும் கொண்டு வருவதாகவும், வலிகாமம் வடக்கு பகுதியில் மீள்குடியேற்றத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அரச அதிபர் இமெல்டா குமாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நன்றி tamilwin.com

வலிகாமம் வடக்கில் 23கிராமசேவகர் பிரிவுகளில் இன்னமும் மக்கள் மீள்குடியேற்றப்படாத நிலையில்
[ வியாழக்கிழமை, 24 நவம்பர் 2011, 08:00.48 AM GMT ]
குடாநாட்டில் உயர்பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட்டு மீள்குடியேற்றம் முளுமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் வலிகாமம் வடக்கில் 23கிராமசேவகர் பிரிவுகளில் இன்னமும் மக்கள் மீள்குடியேற்றப்படாத நிலையில் அந்தப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தற்போதும் 15ற்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.யாழ்.மாவட்டத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முளுமையடைவாதாக தெரிவிக்கப்பட்டு வருகின்றது. எனினும் வலிகாமம் வடக்கில் பெரும்பாலான பகுதிகளில் மீள்குடியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் முறையான அரைநிரந்தர வீடுகள் கூட இல்லாத நிலையில் தற்போதும் 15ற்கும் மேற்பட்ட முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் பருவ மழையின்போது இடம்பெயர்ந்து சென்று அருகிலுள்ள பாடசாலைகள்கோயில்களில் வாழ்வதும் மீண்டும் வருவதுமாக இந்த மக்கள் இருந்து கொண்டிருக்கின்றனர். எனினும் இவர்களுக்கான சொந்த மண்ணும் அவற்றில் பெறுமதியான வீடுகளும் இருந்தும்
இதேவேளை தற்போதுவரை மீள்குடியேற்றம் செய்யப்படாத பகுதிகளாக பளைவீமன்காமம் வடக்கு(ஜே237) பளை வீமன்காமம் தெற்கு(ஜே238) கட்டுவன்(ஜே243) கட்டுவன்மேற்கு(ஜே239) தென்மயிலிட்டி(ஜே240) வறுத்தலைவிளான்(ஜே241) குறும்பசிட்டி(ஜே243) வசாவிளான் கிழக்கு(ஜே244) வசாவிளான்மேற்கு(ஜே245) ஆகிய பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகள் என அறிவிக்கப்பட்டபோதும் அவற்றில் பாதியிலும் குறைவான பகுதியே விடுவிக்கப்பட்டவை.
இதேபோல் காங்கேசன்துறை மேற்கு(ஜே233) காங்கேசன்துறை மத்தி(ஜே234) காங்கேசன்துறை தெற்கு(ஜே235) மயிலிட்டி வடக்கு(ஜே246) தையிட்டி கிழக்கு(ஜே247) மயிலிட்டித்துறை தெற்கு(ஜே248) தையிட்டி வடக்கு(ஜே249) தையிட்டி தெற்கு(ஜே250) மயிலிட்டித்துறை வடக்கு(ஜே254) பலாலி தெற்கு(ஜே252) பலாலி கிழக்கு(ஜே253) பலாலி வடக்கு(ஜே254) பலாலி வடமேற்கு(ஜே255) பலாலி மேற்கு(ஜே256) ஆகிய பகுதிகளில் இன்னமும் முளுமையாக மீள்குடியேற்றம் நடைபெறவில்லை.
இந்தப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் 50வீதத்திற்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்தும் முகாமகளிலும் ஏனையோர் உறவினர் நண்பர்கள் வீடுகளிலும் தங்கியிருக்கின்றனர். எனினும் இன்று வரையில் இந்தப்பகுதிகளில் எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை
இறுதியாக வவாவிளான் மத்தியமகாவித்தியாலயம் விடுவிக்கப்பட்டபோது. அதற்குமேல் எதையும் என்னிடம் கேட்கவேண்டாம் என யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி ஹத்துருசிங்க தெரிவித்திருக்கின்றார்.
இந்நிலையில் இந்த பகுதிகளில் மீள்குடியேற்றத்தை செய்யுமாறு வலியுறுத்தி வலிவடக்கு மீள்குடியேற்றக்குழுவின் உபதலைவரும் வலிவடக்கு பிரதேச சபையின் உபதலைவருவமான சட்டத்தரணி சஜீவன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

21வருடங்களுக்குப்பின் கீரிமலை, காங்கேசன் துறை, ஊறணி, மயிலிட்டி, பலாலி, தொண்டைமானாறுமீன்பிடிக்க அனுமதி - இராணுவத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க [ புதன்கிழமை, 09 நவம்பர் 2011, 04:47.31 PM GMT ]
யாழ். கீரிமலையிலிருந்து தொண்டமானாறு வரையிலான கடற்பகுதியில் மீன் பிடிப்பதற்கு நேற்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.13 கிலோ மீற்றர் தூரத்தினை உள்ளடக்கிய இந்தக் கடற்பிரதேசத்தில் மீன் பிடிப்பதற்கு 21 வருடங்களாக விதிக்கப்பட்டிருந்த தடை நேற்று முதல் நீக்கப்பட்டுள்ளதாக, யாழ் மாவட்ட இராணுவத் தளபதி மற்றும் அடுத்த நிலை தளபதிகளுக்கும், யாழ் மாவட்ட அரச அதிபர் மற்றும் பிரதேச செயலர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் யாழ் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
எனவே இவ்வளவு காலமும் கடற்தொழில் செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதால் இந்த நீரேரியில் இனிமேல் மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதுடன், தங்கள் வாழ்வாதாரங்களை உயர்த்திக் கொள்ள முடியும் என யாழ் மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக 90ம் ஆண்டு இந்தப் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டதுடன், இந்தப்பிரதேசம் உயர்பாதுகாப்பு வலயமாக இருந்து வந்தது. அத்துடன் இந்தக் கடற் பிரதேசங்களில் மீன் பிடிப்பதற்கு முற்றாகத் தடை விதிக்கப்பட்டிருந்தது.நேற்று முதல் நீக்கப்பட்டுள்ள இந்தத் தடைஉத்தரவை அடுத்து கீரிமலை, காங்கேசன் துறை, ஊறணி, மயிலிட்டி, பலாலி, தொண்டைமானாறு, ஆகிய பிரதேசங்களைச் சோ்ந்த மீனவர்கள் தடையின்றி மீன் பிடித் தொழிலில் ஈடுபடமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.