இல்லங்கள் தோறும் எங்கள் செல்வங்கள் தேடி ...... ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, கடவுளும் மனிதனும் சேர்ந்தெடுக்கும் விழா, தேசவிடியலில் மகுடம் சூடியோர் நினைவுத் திருவிழா. எம் பாசப்பிறப்புக்களை மனதிருத்தும் பெருவிழா. ******************************************* 2009 மே பூமாதேவியவள் சிரித்தநாள், தன் பூமிபாரம் குறைந்ததால். உலகத்தமிழன் அழுதநாளும் அந்தநாள், முகவரி தொலைந்ததால். வீரியம் கூடியதால் விண்ணுலகம் முதுகு வளைத்தது. ******************************************* இந்திர சபையில் இரவுபகல் விவாதம், ஈழத் தமிழனுக்கு ஏனிந்தக்கதி? நடந்தது என்ன? விசாரணைக்காக விண்ணுலக ஞானிகள், மண்ணுக்கு வந்த கடவுளரே வருக! ******************************************* எங்கிருந்துநான் ஆரம்பிக்க? இன்று எங்கள் தெய்வங்கள் திருநாள் அவர்களின் இல்லங்கள் செல்லும் பெருநாள். அங்கிருந்தே தொடங்குறேன். ******************************************** கல்லுக்குள்ளே உறுமும் கந்தர் வரை, காணவந்த கடவுளரே! இதோ கோப்பாய் வெளி அதோ கோவில் இருந்த இடம் இதை அழித்தவன் கோத்த அவனை பிடித்து நீர்கேட்பீர். ******************************************* தொப்புள் கொடி உறவுகள் தூங்கிடும் கொடிகாமம் கன்னியை சீரழித்தான் காமத்தால் கொடிகாமத்தை சிதைத்தான் இனவாதத்தால் . ********************************************* நினைவிருக்க 1987 ல் பன்னிருவர் ? உங்கள் ஏடுகளில் இருக்கும் அப்பதிவு தியாகிகள் தூங்கும் தீருவில் ஆனால் இன்று தெருநாய்கள் .... ***************************************** சிரிப்பின் சிறகை புதைத்தோமே -கனகபுரம் சிங்களத்து சீர்மை. முதல்வரிசையில் முகம்காட்டும் மூத்தவன் லீமா. அவனை விதைத்த முள்ளியவளை விதவையாய் .... விதுசாக்க விளக்கேற்றும் ஆலங்குளம் நெல்விளையும் வயலாகி போனது. நாங்கள் நாதியற்ற இனமாகி போனோம். ******************************************** வெஞ்சமர் ஆடி விழுந்திட்ட வீரரை விதைத்திட்ட பூமி விசுவமடு இதை சிதைத்துவிட்டு சிரிக்கிறான் சிங்களவன். அதை இழுத்துவைத்து கேட்க எமக்குயாரும் இல்லை. ******************************************* வன்னிவிளாங்குளம், முழங்காவில், சாட்டி, அலம்பில், மூதூர், வாகரை, இத்தாவில் இன்னும் இருக்கு ஞானியரே, எல்லாம் காடாகவும் கல்லு குவியலாகவும் இருக்கிறது. காலி பஸ்சில் ஏறி, அலரிமாளிகையில் இறங்கி சிவப்புதுண்டு போட்ட கறுப்புமனிதனிடம் விளக்கம் கேட்டுவிட்டு விடையை சொல்லுங்கள். நேரமாகிறது எனக்கு விளக்கேற்றவேண்டும், முடிந்தால் ஜெயாவையும் ஒரு கேள்வி கேட்டு விட்டுபோகவும் .வருகிறேன்,,,,... ஈழ விரும்பி | |
0 Comments
|
என்னைப்ப்ற்றிஈழ விரும்பி பதிவுகள் |