நமது மயிலிட்டி
  • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
  • ஆலயங்கள்
    • பேச்சியம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு" >
      • மீள்குடியேற்றக்குழு
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • சுகுமார் தியாகராஜா
    • மயிலை வசந்தரூபன்
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • அருண்குமார் படைப்புக்கள்
    • இரா.மயூதரன்
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • Alvit Vincent
      • "பலமாய் எழுந்திரு "
      • "முதல்பிரிவு"
      • "தனித்திருப்பாய்"
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • சங்கீதா தேன்கிளி
    • மகிபாலன் மதீஸ்
    • அஞ்சலி வசீகரன்
    • "ஜெயராணி படைப்புக்கள்"
    • மயிலையூர் தனு
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • சிந்தனை வரிகள்
    • Nirupa Sabaratnam
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • கௌதமன் கருணாநிதி
    • தயாநிதி தம்பையா
    • மயிலை வசந்த்
    • மயிலை துரை
    • ஈழ விரும்பி
    • சுதா நவம் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • அன்ரன் ராஜ் படைப்புக்கள்
    • "சமர்ப்பணம்"
    • "மீண்டும் வாழ வழி செய்வோம்"
    • "நினைவுகள் 2" "மடம்"
    • "நினைவுகள் 1" "மண்சோறு"
    • "நான் பிறந்த மண்ணே !"
    • சாந்தன் படைப்புக்கள் >
      • சாந்தன் படைப்புக்கள்
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக!"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • குமரேஸ்வரன் படைப்புக்கள் >
      • "என்ன வாழ்க்கை இது"
      • "தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்"
      • "பனங்கள்ளு"
      • "தேன் கூடு"
      • "வீச்சுவலை"
    • ஜீவா உதயம் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
    • கௌதமன் படைப்புக்கள்
    • கவின்மொழி படைப்புக்கள் >
      • கவிப்பிரியை படைப்புக்கள்
      • "கட்டுமரம்"
      • யுகமாய் போன கணங்கள்!
    • கௌசிகனின் படைப்புக்கள்! >
      • "பூமிக்கு வந்த புது மலரே"
      • "மயிலை மண்ணில்"
      • "இயற்கைக் காவலன்"
      • "வீச்சுவலை"
      • "தேன்கூடே.... தேன்கூடே...."
      • "என் இனிய கருமரமே..."
      • "எங்கள் மயிலை மண்"
    • படம் என்ன சொல்கின்றது... >
      • "பனங்கள்ளு"
      • "வீச்சுவலை"
      • "தேன் கூடு"
      • "பனைமரம்"
      • "கட்டுமரம்"
    • Naavuk Arasan Music
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை
  • நினைவஞ்சலி
    • நினைவஞ்சலி >
      • உருக்குமணி தர்மலிங்கம்
  • சிறப்புத் தினங்கள்
    • NELSON MANDELA
    • சுனாமி 2013 >
      • சுனாமி 2012
    • அன்னையர் தினம்
  • வாழ்த்துக்கள்
    • திருமணம் >
      • திருமண நாள் வாழ்த்து
      • வசந்தன் றஞ்சனா
    • பூப்புனித நீராட்டுவிழா
    • பிறந்தநாள் >
      • பிறந்தநாள்
      • "செல்லப்பா சண்முகநாதன்"
    • பொங்கல்
    • தீபாவளி
    • Christmas
    • New year
    • அன்னையர் தினம்
    • தந்தையர் தினம்
    • மகளிர் தினம்
  • நோர்வே
    • Notice no
  • பிரித்தானியா
    • Notice UK
  • அமெரிக்கா
  • கனடா
    • Notice-Canada
  • kalaimakalmahavidyalayam.com
  • ourmyliddy.com
  • பாடசாலைகள்
    • கலைமகள் மகா வித்தியாலயம்
    • றோமன் கத்தோலிக்க வித்தியாலயம்
    • பிரகாசிக்கட்டும் வாழ்வு
  • உதவிகள்
  • தொடர்புகளுக்கு:
  • கருத்து தெரிவித்தல்
  • பதிவிறக்கம்

என் அம்மா - "ஜெயராணி நிர்மலதாசன்"

5/6/2016

0 Comments

 
Picture
என் அம்மா...❤️...

​எப்போதும் என் மனதில் அழகிய ஓவியமாய் என்அம்மா. காலையில் எழுகையில் யேசுவே அந்தோனியாரே என்னும்  நாமத்துடனே குளித்து செவ்வரத்தை, நித்தியகல்யாணியையும் சுவரில் தொங்கும் அனைத்துப்படங்களுக்கும் வைத்தபின் அவசரமாய் ஓடிச்சென்று காலைத்தேனீருடன் எழும்பு பிள்ளை என்றுஅன்புடன் அழைக்கும் அன்பான முகம்.​

Picture
அந்தந்த நேரத்துக்கு எல்லா வேலைகளையும்  சோர்வின்றி செய்து முடிக்கும் திறன். பிள்ளை அதை செய் இதைசெய் என்று கட்டளை இட்டு செய்விக்க சொல்லத்தெரியாத ஜீவனோ என்று எனக்கு தோன்றியது உண்டு. ஏன் வலி நோ களைப்பு என்று சொல்லி என்றும் நான் அறிந்திலேன். மெனத்தில் தவித்துக்கொண்டு இருந்தது என் உள்ளத்தில் ஒர் உணர்வு. ஏனெனில் அப்பா இறந்த அன்று இரண்டே வயது நிரம்பாத என்னையும் மற்றும் ஐந்து பெண் பிள்ளைகளையும் கையனைப்பில் அனைத்தபடி அனாதைபோல் எப்படி வலி சுமந்தாள் என்று. அம்மாவின் கடைசி அழுகை அதுவாகத்தான் இருக்க வேண்டும் யேசுவே என்று மன்றாடும் வயதுகூட அப்போ எனக்கல்லை.

​அப்பா இல்லாததை நான் இன்றுவரை அறிந்ததில்லை. அதை அம்மாவின் அன்பே சரிசெய்தது. அம்மாவின் அன்பு ஆறு பேருக்கும் திகட்டாமல் கிடைத்த போதும், அவரின் கோபம் கண்டிப்பு கருணை என்றும் குறையவே இல்லை. எத்தனை பிடிவாதம், வாக்குவாதம், சண்டை நாம் செய்தாலும் அன்பாலே அதை சரி செய்திடுவார். அதற்கும் நாம் அடங்காத வேளையில். சுள்ளித்தடியால் அடித்து பின் அதற்கு எண்ணை பூசி கவலைப்படும் பரிவு. அதற்கும் போணை என்றும், தொடவேண்டாம் என்னை அடித்துவிட்டாய் தானே? என்று சொண்டு பிதுக்கி விம்மி அழும்போதும். தலை தடவும் அம்மாவிடம் அகப்பட்டு அடிவாங்கி தோற்றுப்போவதில் எவ்வளவு மகிழ்ச்சி. ஆறு பெண்பிள்ளை பெற்றாலும்
கடைசி என்னில்தான் பிரியம் அதிகம். அதை சொல்வதில் எனக்கு பெருமிதம்.

அம்மா எனக்குத்தான் என்று சொல்வதில் எனக்குப் பெருமிதம். அதற்கு அவர் நீங்கள் கலியாணம் செய்தால் எங்களை மறந்திடுவியள் என்றபோது, நான் அம்மாவைத்தான் கலியாணம் செய்வேன். உன்னை விட்டு போக மாட்டேன் என்று அறியாத வயதில் அம்மாவின் காலைக்கட்டிக்கொண்டு சொன்னதில் அம்மாவுக்கு என்ன பெருமையோ அள்ளி அனைத்துக்கொண்டாள்.

ஒவ்வொரு குடும்பத்திலும் இறைவன் அவதாரம் அம்மாதான். நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போதும்கூட என் உடுப்பு தோய்த்தது கூட இல்லை அவாவே எல்லாம் செய்வார். அந்த வயதில் கூட அம்மாவைக் கட்டிப்பிடித்துக் கொண்டே தூங்குவேன். இறுக்கி கட்டி பிடிக்காதே பிள்ளை  என்று சொல்வாரே தவிர தள்ளிப்படு என்று எப்பவுமே சொன்னதில்லை. அம்மாவின் பாசமான வாசனை அது ஒரு தனி சுகம் சொல்லும். கோவிலுக்கு கைபிடித்து கூட்டிப்போகும்போது அன்புடன் பல விசயங்கள் சொன்னபடி கூட்டிப்போவார்.

அம்மாவின் கைப்பக்குவம் என்னவொரு ருசி ஆனால் பலதடவை தனக்கு பசி இல்லை என்று தான் பட்டினி கிடந்து நமக்கு உணவளிப்பார். இப்போதும் அம்மாவுக்கு இலங்கைக்கு தொலைபேசி எடுக்கும்போது அம்மா கேட்கும் முதல் கேள்வி சாப்பிட்டியா பிள்ளை என்பதே. பல இரவுகளில் நான் திடீரென விழித்திருந்தால் என்னடா வயுத்துக்கை குத்துதா தலை இடியா என்று இஞ்சித்தேனீர் உடன் என் முன்னே வரும். அதை குடித்து முடிக்கும் வரை தலைதடவி அருகில் இருப்பாள். நானும் இதையே சாட்டாக வைத்து அடுத்தநாளும் வயுத்துக்கை நோகுது என்று ரமணிசந்திரன் கதை புத்தகத்துடன் படுத்திருந்தது வேற கதை.
​
அப்பா இருந்த போது தேவைக்கு அதிகமாக பணம் இருப்பதாக எண்ணி உள்வீட்டு நிலைமை புரியாமல் அம்மாவை அது செய்யலை இது செய்யலை என்று உறவுகள் குறை பேசும்போது உண்மையை மறைத்து அவ்வேளையிலும் அச்சொந்தங்களை நேசித்ததைக் கண்டு நான் வியந்ததுண்டு. அம்மா பாவம் இவரின் பாசத்திக்கு தகுதி அற்றவர்கள் பணத்தை உதவியை எதிர் பார்த்தவர்களிடம் அன்பு எப்படிக்கிடைக்கும் அம்மா பாவம்தான்.

அம்மாவிடம் நான் இனி இலங்கை போகும் போது  அம்மாவை எதுவிதத்திலும் புண்படுத்தி கவலையுற செய்திருந்தால் நான் செய்த சேட்டைகள் தவறுகள் எல்லாவற்றுக்கும் மன்னிப்புக் கேட்கனும். அம்மாவின் மடிமீது தலை வைத்து அவர் விரல் தலைதடவ தூங்கணும்.

அம்மாவுக்கு பிங் நிறம் என்றால் விருப்பம் ஒவ்வொரு முறையும் அந்த நிறத்தில் புடவை வாங்குவேன். அவாவின் ஆசைகளை கேட்டறிந்து நிறைவேற்ற வேண்டும் என்பது எனது மிகப்பெரிய அவா. அவரை அடுத்தமுறை சந்திக்கும் போது என்னை முதல் முதலாய் மடி ஏந்திய போது என்ன நினைத்தீர்கள் அம்மா என்று கேட்கனும். ஆறாவதாயும் பெட்டையா பிறந்திட்டியா என்று நினைத்தீர்களா என்று கேலி பண்ணணும் சிரிக்கனும்.

எனக்கு எமது தமிழ் சமூகத்தில் ஊறிப்போன சம்பிரதாயத்தில் பெரும் கோபம் உண்டு. அம்மாவை என் வாழ்வில் பொட்டும் பூவுமாய் பார்க்க முடியவில்லயே என்று இது எனக்கு ஆறாத கவலைதான். அம்மாவின் ஆழுமைக்காகவே நான்  இவா பெரிய சிறிமா என்று சொல்லி இருக்குறேன்.

என்னால் இப்பவும் நம்ப முடியவில்லை. இப்படி அம்மா பைத்தியமாக இருக்கும் நான் எப்படி பிரிந்து இவ்வளவு தொலை தூரத்தில் இருக்க முடியுதென்று  இப்பவரை புரியவில்லை. இதுதான் காலத்தின் கொடுமையா. அம்மாவுடன் வாழும் காலம் சொர்க்கம்தான். அதை இழந்தவர்களுக்குத்தான் அதன் அருமை புரியும். நாம் இருக்கும் காலம்வரை அவர்களை நம் கையில் ஏந்திப்பார்ப்போம். அப்போதுதான் நம் பிள்ளைகள் எம்மை கையில் ஏந்தாவிட்டாலும் தம் அருகிலாவது வைத்து பார்ப்பார்கள். இப்பவும் காலம் கடந்திடவில்லை உங்கள் அம்மாவுக்கு இன்றே I love you என்று சொல்லுங்கள். உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள்.
.......................................................................ஜெயராணி

இந்தப் பக்கம் Hit Counter by Digits தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
0 Comments



Leave a Reply.

    என்னைப்பற்றி

    ஜெயராணி நிர்மலதாசன்
    ஊறணி

    பதிவுகள்

    June 2016
    October 2013
    May 2013
    March 2013

    முழுப்பதிவுகள்

    All

நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர் web counter
© 2011-21 ourmyliddy.com