பொங்குது மகிழ்வில் மனம் பொங்குது திருவிழாக் காண மனம் பொங்குது தங்குது நினைவுகளுள்ளே தங்குது திரும்புது ஊர் நோக்கி விரும்புது.
தெருவெங்கும் தொங்கும் தோரணங்கள் காற்றுவந்து அசைத்தூஞ்சலாட்டி விடும்.
தென்னையிலை மடித்தடித்த அலங்காரங்கள் கலைஞர்களின் கதை சொல்லி நிமிர்ந்திருக்கும்.
தெருவிலே கானமிடும் ஒலிபெருக்கிகள் தந்துவிடும் என்றுமில்லா மனத்துள்ளல்கள்.
பரபரப்பொன்று வந்து தொற்றி விடும் பாரினிலே நாம்தானெனத் தோன்றும்.
தெருவெங்கும் வண்ண மிட்டாய்கள் விரிப்புகள் தொட்டுவிட ஏங்கி நிற்கும் ஒரு கணம்.
குணமண்ணை ஐஸ்கிறீமும் தீர்ந்துவிடும் நாவிலேயதன் சுவை மட்டும் மாறாது.
புத்தாடை மடமடப்பின் சிரிப்புகள் தேவதைகள் வருகையின் கட்டியங்கள்.
ஆணழகர் கூட்டமென்ன குறைந்திடுமா? அதுதானே இயற்கையுமெனக் கொள்க.
எத்தனைதான் சொல்லியிதை முடித்துவைக்க? இத்தனையும் பார்த்திருக்க அந்தோனியார் உல்லாசமாக ஊரைச் சுற்றி வருவார் கச்சானும் சோளமும் வாங்கியபடி...
வி. அல்விற். 05.03.2017.

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.