பெற்ற தாயின் அன்புக்கு ஈடு இணை எதுவும் இல்லை என்பது உண்மைதான். அதே நேரத்தில், தந்தையின் தியாகத்தையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
ஒவ்வொரு தந்தையும், தனது பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக கடினமாக உழைத்து பொருள் ஈட்டி, வாழ்வில் தன்னலமற்ற பல தியாகங்களை செய்து குழந்தைகளை நல்ல நிலைக்கு கொண்டு வருகிறார்கள். அப்படிபட்ட,தந்தைக்கு குழந்தைகள் நன்றி தெரிவிக்கும் நாள்தான் தந்தையர் தினம். பத்து மாதம் சுமக்க முடியவில்லை என்பதால், அதற்கு எல்லாம் சேர்த்து வைத்துதான் தந்தையானவர், தம்மால் இயலும் வரை தோளிலும் முதுகிலும் சுமக்கிறார் என்றால் மிகை இல்லை. இந்த நாளில் ஒவ்வொரு குழந்தையும், தங்களின் முன்னேற்றத்திற்கு தந்தை பட்டபாடு, தியாகத்தை நினைக்க வேண்டும். முடிந்த பரிசு பொருளை தந்தைக்கு கொடுத்து நன்றி பாராட்டுங்கள்! அதைவிட,"அப்பா நான் உங்களை அதிகம் நேசிக்கிறேன்!" என்ற நன்றி பெருக்கான அன்பு கலந்த வார்த்தையை சொல்லுங்கள்.அல்லது அதை அழகாக எழுதி வாழ்த்து அட்டையாக கொடுங்கள்..! தந்தையின் அன்பு கிடைக்காமல் போவது, அன்னையின் அன்பைப் போலவே குழந்தையின் ஆளுமை, நடத்தையின் வளர்ச்சியில் அதிக பங்காற்றுகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்!
Sountha Manuel ,Evry, France
Sountha Manuel ,Evry, France