புதிய தலைமுறை!
முட்டைக்குள் போராடியது குஞ்சு
முழுமையாக 22 நாள்
ஊருக்குள் போராடினோம் வேறுபட்டு
ஊருக்காய் போராட்டம் ஒன்று பட்டு
முட்டைக்குள் போராடியது குஞ்சு
முழுமையாக 22 நாள்
ஊருக்குள் போராடினோம் வேறுபட்டு
ஊருக்காய் போராட்டம் ஒன்று பட்டு
மண்ணினை இழக்கும் வரை
மதிப்பு தெரியவில்லை உப்பை போல்
தொலைந்த பின் தான் உணர்வு
தெளிகிறது பெறுமதியற்றது என்று
வேற்றுமைகள் பல வடிவம் ஊரில்
வெளியே தெரியாத நாய் சண்டை போல்
வேறுபட்டும் ஒன்றுபட வைத்தது
வேதம் போல ஊரின் நாமம்
கல்வியால் தொழிலால் கஷ்டத்தால்
காசால் கழுத்தறுப்பு அவமானத்தால்
கணக்கிட முடியாது கற்றுக்கொண்டது
மண்ணினை இழந்து வாழ்வதால்
புதிய தலை முறைக்கு ஏற்காடு
பழைய தலை முறைக்கு சாக்காடு
திரும்பும் போது தொலைத்து விடுங்கள்
திருந்தாத மனங்களை
புனித பூமியின் புதிய ஆரம்பம்
புதிய தலைமுறை எழுதட்டும் ....
........மயிலை இ .தாஸ் .....(ஸ்ரீ )
மதிப்பு தெரியவில்லை உப்பை போல்
தொலைந்த பின் தான் உணர்வு
தெளிகிறது பெறுமதியற்றது என்று
வேற்றுமைகள் பல வடிவம் ஊரில்
வெளியே தெரியாத நாய் சண்டை போல்
வேறுபட்டும் ஒன்றுபட வைத்தது
வேதம் போல ஊரின் நாமம்
கல்வியால் தொழிலால் கஷ்டத்தால்
காசால் கழுத்தறுப்பு அவமானத்தால்
கணக்கிட முடியாது கற்றுக்கொண்டது
மண்ணினை இழந்து வாழ்வதால்
புதிய தலை முறைக்கு ஏற்காடு
பழைய தலை முறைக்கு சாக்காடு
திரும்பும் போது தொலைத்து விடுங்கள்
திருந்தாத மனங்களை
புனித பூமியின் புதிய ஆரம்பம்
புதிய தலைமுறை எழுதட்டும் ....
........மயிலை இ .தாஸ் .....(ஸ்ரீ )