அம்மா!
எத்தனை கனவுகள் வளர்த்தாய்
எனை உன்னுள் வளர்க்க
உள்ளே துடித்ததும் செல்லமாய்
வெளியே தட்டிக் கொடுத்தாய்
வெளியே வந்ததும்
மழையாய் பொழிந்தாய்
எத்தனை கனவுகள் வளர்த்தாய்
எனை உன்னுள் வளர்க்க
உள்ளே துடித்ததும் செல்லமாய்
வெளியே தட்டிக் கொடுத்தாய்
வெளியே வந்ததும்
மழையாய் பொழிந்தாய்
சேர்த்து வைத்த முத்தங்களை
பெருமிதத்தில் மிதந்தாய்
பேரமுதம் பெற்றுப்
பிறவிப் பயன் கிட்டியதாய்
கண்ணயர நான்
காவியங்கள் சொன்னாய்
எனைக் காணாத போதில்
கதிகலங்கிக் கிடந்தாய்
கால் கடுக்க நடந்தாய்
காலம் எனை ஏற்றி வைக்கும்
நாளை எண்ணி
கண்ணுக்குள் வைத்தென்னை
இமைகளால் மூடிக் கொண்டாய்
காலமெல்லாம் நான்
கலங்காமல் வாழவென்று
என்னதவம் செய்தேனம்மா
உன்னை அன்னையாய்ப் பெறுவதற்கு
எப்பிறப்பும் வேண்டுகின்றேன்
மீண்டுமுன்னை அன்னையாய்
கொண்டுன் அன்பை பெறுதற்கே!
அத்தனையும் போதாதுன்
கடன் தீர்த்து மீள்வதற்கு
வி.அல்விற்
பதிவு: 11/05/2013
பெருமிதத்தில் மிதந்தாய்
பேரமுதம் பெற்றுப்
பிறவிப் பயன் கிட்டியதாய்
கண்ணயர நான்
காவியங்கள் சொன்னாய்
எனைக் காணாத போதில்
கதிகலங்கிக் கிடந்தாய்
கால் கடுக்க நடந்தாய்
காலம் எனை ஏற்றி வைக்கும்
நாளை எண்ணி
கண்ணுக்குள் வைத்தென்னை
இமைகளால் மூடிக் கொண்டாய்
காலமெல்லாம் நான்
கலங்காமல் வாழவென்று
என்னதவம் செய்தேனம்மா
உன்னை அன்னையாய்ப் பெறுவதற்கு
எப்பிறப்பும் வேண்டுகின்றேன்
மீண்டுமுன்னை அன்னையாய்
கொண்டுன் அன்பை பெறுதற்கே!
அத்தனையும் போதாதுன்
கடன் தீர்த்து மீள்வதற்கு
வி.அல்விற்
பதிவு: 11/05/2013