அம்மாவின் அழகு
கவிதைக்கு பொய்யழகு
கவிஞர்களுக்கு மெய்யழகு
தாய்க்கு குழந்தையழகு
எனக்கு நீ அழகம்மா!
உடலுக்கு உயிரழகு
உள்ளத்துக்கு வெள்ளை மனமழகு
உனக்கு நான் அழகம்மா
எனக்கு உந்தன் அன்பழகம்மா!
கவிதைக்கு பொய்யழகு
கவிஞர்களுக்கு மெய்யழகு
தாய்க்கு குழந்தையழகு
எனக்கு நீ அழகம்மா!
உடலுக்கு உயிரழகு
உள்ளத்துக்கு வெள்ளை மனமழகு
உனக்கு நான் அழகம்மா
எனக்கு உந்தன் அன்பழகம்மா!
இரவில் வட்ட நிலவு அழகு
வானத்தில் ஜொலித்திடும் நட்சத்திரம் அழகு
இரவில் மின்னிடும் மின்மினிப் பூச்சியழகு
காலையில் மலர்ந்திடும் மலரழகு
நீ மலர்ந்திடும் புன்னகைஎனக்கு அழகம்மா!
குழந்தையின் கள்ளமில்லா சிரிப்பழகு
தத்தித் தவழும் குழந்தையழகு
குழந்தை தித்தித்து பேசுவது அழகு
நீ மனம் பூரிக்க என் பெயர் உச்சரிப்பது எனக்கழகம்மா!
ஆண்டவன் வாசலில் சிற்பம் அழகு
ஆண்டவன் தரிசனத்தில் பூஜை அழகு
ஆதரிப்பதில் நீ எனக்கழகம்மா!
காதல் செய்வதில் உண்மை அழகு
கரிசனை காட்டுவதில் இரக்கமழகு
நட்பு கொள்வதில் தூய்மை அழகு
அன்பு காட்டுவதில் எனக்கு நீ அழகம்மா!
பாட்டுக்கு இசையழகு
இசைக்கு மெட்டழகு
குரலுக்கு இனிமையழகு
தாலாட்டு பாடுவதில் எனக்கு நீ அழகம்மா!
சாப்பாட்டுக்கு சுவையழகு
சுவைக்கு உப்பழகு
பகிர்வதற்கு பக்குவம் அழகு
ஊட்டுவதற்கு எனக்கு உந்தன் பாசம் அழகம்மா!
பார்ப்பதற்கு கண்ணழகு
அறிவுக்கு புத்தியழகு
ஆண்டவனுக்கு நேர்மையழகு
பெண்ணுக்கு அடக்கம் அழகு
எனக்கு உந்தன் பணிவு அழகம்மா!
மயிலை ச.சாந்தன்
பதிவு: 11/05/2013
வானத்தில் ஜொலித்திடும் நட்சத்திரம் அழகு
இரவில் மின்னிடும் மின்மினிப் பூச்சியழகு
காலையில் மலர்ந்திடும் மலரழகு
நீ மலர்ந்திடும் புன்னகைஎனக்கு அழகம்மா!
குழந்தையின் கள்ளமில்லா சிரிப்பழகு
தத்தித் தவழும் குழந்தையழகு
குழந்தை தித்தித்து பேசுவது அழகு
நீ மனம் பூரிக்க என் பெயர் உச்சரிப்பது எனக்கழகம்மா!
ஆண்டவன் வாசலில் சிற்பம் அழகு
ஆண்டவன் தரிசனத்தில் பூஜை அழகு
ஆதரிப்பதில் நீ எனக்கழகம்மா!
காதல் செய்வதில் உண்மை அழகு
கரிசனை காட்டுவதில் இரக்கமழகு
நட்பு கொள்வதில் தூய்மை அழகு
அன்பு காட்டுவதில் எனக்கு நீ அழகம்மா!
பாட்டுக்கு இசையழகு
இசைக்கு மெட்டழகு
குரலுக்கு இனிமையழகு
தாலாட்டு பாடுவதில் எனக்கு நீ அழகம்மா!
சாப்பாட்டுக்கு சுவையழகு
சுவைக்கு உப்பழகு
பகிர்வதற்கு பக்குவம் அழகு
ஊட்டுவதற்கு எனக்கு உந்தன் பாசம் அழகம்மா!
பார்ப்பதற்கு கண்ணழகு
அறிவுக்கு புத்தியழகு
ஆண்டவனுக்கு நேர்மையழகு
பெண்ணுக்கு அடக்கம் அழகு
எனக்கு உந்தன் பணிவு அழகம்மா!
மயிலை ச.சாந்தன்
பதிவு: 11/05/2013