கருவில் சுமந்தவளே!
என்னை உலகிற்கு பிரசவித்தவளே...
பாசத்தினை எல்லோரிடமும் பகிர்ந்திடுபவளே...
மனதால் எல்லோரையும் அரவணைப்பவளே...
என் கருவிழியோரம் உந்தன் நிழல் அம்மா...
விண்ணை அரசாண்டிடும் நிலா ஒளியில் கூட
உன் முகத்தினை பார்த்திட தினந்தோறும்தவமிருப்பேன்
என்னைக் கருவில் சுமந்தவளே!

உன்னைவிட்டு நெடுதூரம் வந்ததால் இதயம் வலிக்குதம்மா...
விழியோரம் கண்ணீர்த் துளிகளம்மா...
என் வாழ்வில் உன் தென்றல் காற்றே இல்லையம்மா...
உன் நிழலினை பூசித்திட ஏங்குபவன் அம்மா...
தென்றல் காற்றாக என்னைத் தொட்டுத் தாலாட்டதினந்தோறும் வரமாட்டாயோ?
என்னைக் கருவில் சுமந்தவளே!
மெளனமாக இருந்தாலும் மனம் உன்னையே தேடுதம்மா...
விழி மூடுகையிலும் உன் நினைவுகளே என்னைத் தாலாட்டுதம்மா...
கண் தூங்குகையிலும் தலையணையும் நனையுதம்மா உன் நினைவாலே...
மறு பிறவியிலும் உனக்கே குழந்தையாகப் பிறந்திட வேண்டும்
என்னைக் கருவில் சுமந்தவளே...!
-ச. சாந்தன்