
குச்சு வீதிகளில்
சராத்தை
மடித்துக் கட்டிக் கொண்டு
லோட் பண்ண மிஸ் பண்ணிய
கறல்பிடித்த ஆயுதங்கலோடு
வெறுங்கால்களில்
செருப்புமிலாமல்
விடுதலை
வாவென்று அழைத்த
அந்த நேரம்
எல்லாரும்
எல்லா இயக்கங்களுக்கும்
அப்படித்தான்
ஒரு முடிவோடு எழுந்து
போனார்கள்...
சராத்தை
மடித்துக் கட்டிக் கொண்டு
லோட் பண்ண மிஸ் பண்ணிய
கறல்பிடித்த ஆயுதங்கலோடு
வெறுங்கால்களில்
செருப்புமிலாமல்
விடுதலை
வாவென்று அழைத்த
அந்த நேரம்
எல்லாரும்
எல்லா இயக்கங்களுக்கும்
அப்படித்தான்
ஒரு முடிவோடு எழுந்து
போனார்கள்...
விடிவுகள்
கிழக்கை நோக்கிய
மிக நீண்ட
முப்பது வருடங்களில்
தேசம் முழுவதும்
வித்துடல்கள்
எரிக்கப்பட்டன
விதைக்கப்பட்டன
தொலைதூரமாகிப் போய்
முழுமையாக
எழுதி முடிக்கப்படாத
வரலாற்றில்
முப்பதினாயிரம்
விலை மதிப்பற்ற
தியாகங்கள்..
இளமைக்காலக்
கனவுகள் எல்லாம்
துறந்து போனவர்களே
நீங்கள்
புதைந்த இடத்திலிருந்து
இன்று
ஒருநாளாவது
எழுந்து வாருங்கள்....
கிழக்கை நோக்கிய
மிக நீண்ட
முப்பது வருடங்களில்
தேசம் முழுவதும்
வித்துடல்கள்
எரிக்கப்பட்டன
விதைக்கப்பட்டன
தொலைதூரமாகிப் போய்
முழுமையாக
எழுதி முடிக்கப்படாத
வரலாற்றில்
முப்பதினாயிரம்
விலை மதிப்பற்ற
தியாகங்கள்..
இளமைக்காலக்
கனவுகள் எல்லாம்
துறந்து போனவர்களே
நீங்கள்
புதைந்த இடத்திலிருந்து
இன்று
ஒருநாளாவது
எழுந்து வாருங்கள்....