கறுப்பினத்து சூரியன் மறைந்தது.
*******************************
வானுயர்ந்த கோபுரத்து தீயதனைக் காண,
வரிசை கட்டி வருகிறது வான தேவர் கூட்டம் .
ஆபிரிக்க தேசத்தின் ஜோதியினைக் காண,
அலை மோதி வருகிறது அடியவர்கள் கூட்டம்.
(வானுயர்ந்த)
கறுப்பினத்து சூரியனே கண் மூடித் தூங்குகிறாய் ,
ஒளியிழந்த உன்னவர்கள் உனைத்தேடி ஏங்குகிறார்.
விழி திறந்து பாராயோ விடுதலை...யின் தலைமகனே ,
நீ விசுவாசித்த பூமி தனில் மீண்டொருக்கால் வாராயோ .
(வானுயர்ந்த )

நிற வெறியை உடைத்தெறிய நீள் பயணம் செய்தவனே ,
கொலை வெறி கொண்டோரால் சிறை வாழ்க்கை கண்டவனே .
கறை படியா விருதுகளை சிறை தனிலே பெற்றவனே,
சிரம் தாழ்த்தி வணங்குகிறோம் ஆபிரிக்க பெருமகனே .
(வானுயர்ந்த)
ஆயிரம் பிறை கண்ட அரசியல் தவமகனே ,
அழியாப் புகழ் கொண்ட ஆபிரிக்க தந்தையே .
ஈழத்தவன் போற்றும் மேலைத்தேய போராளியே ,
காலப் பதிவுகளில் நெல்சன் மண்டேலா கரையாத காவியம் .