நமது மயிலிட்டி
  • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
    • நல்வரவு! 2013,12,11
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு"
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை

நெல்சன் மண்டேலா - கவிப்பிரியை

10/12/2013

0 Comments

 
Photo
நெல்சன் மண்டேலா என்னும் கருப்பினத்தின்
கடவுள் கருப்பினத்தின் கண்கள் கருப்பினத்தின்
இதயம் கருப்பினத்தின் காவியமனிதன் இந்த உலத்தின்
அனைவருக்கும் கண்களாக வானத்தின் நட்சத்திரமாக
வானவில்லாக விளங்குகிறாரென அத்தனை பத்திரிகையும்
அத்தனை தொலைகாட்சிகளும் அத்தனை நாட்டு தேசியகொடிகளும் அரைகம்பத்தில் பறக்கவிட்டும் ஒவ்வொருநாட்டிலும் அவருக்காக
மௌன அஞ்சலிகள் மலர்கொத்துகள் வைத்து அவருக்காக ஒரு துளிகண்ணீர்
விட்டு கைகூப்பி போகிறார்கள் நான் தந்தை மண்டேலாவின் ஆத்ம
அஞ்சலியாக அவர் போராடிய வரலாற்றை அவர் சோகத்தை துயரத்தை
சிறையின் சித்திரவதையும் எழுதும் போது உண்மையிலே கண்ணீரோடு எழுதினேன்
தருகிறேன்))))))))))))).........

Photo
நெல்சன் மண்டேலா என்னும் இந்த வானத்து நட்சத்திரம் பளிச்சிட்ட நாள் 1918 யுலை 18 தேதி தென்னாபிரிக்காவின் உள்ள குலு கிராமத்தில் பிறந்தவர் தந்தை சோசா பழங்குடி இனமக்களின் தலைவர் இவரின் தந்தைக்கு 4 மனைவிகள்
4 ஆண்களும் 9 பெண்களுமாக 13 பிள்ளைகள் மூன்றாவது மனைவிக்கு மகனாக பிறந்த நெல்சன் ரோலிலாலா என்று பெயர் இடப்பட்டார் இவர் குடும்பத்தில் இருந்து முதல் முதல் பள்ளிக்கு சென்ற முதல் மகனாவார்.

இளம்வயதில் ஆடுமாடு மேய்த்து கொண்டே பள்ளிக்கு சென்று பள்ளி படிப்பை தொடர்ந்தார். இவர் பெயரின் முன்னால் இருக்கும் நெல்சன் என்ற பெயர் பள்ளியில் ஆசிரியர் இட்டபெயர் ஆகும். கல்வியறிவை பெறுவதில் பெரிதும் நாட்டம் கொண்ட மண்டேலா லண்டன் தென்னாபிரிக்க பல்கலைக்கழகப் பட்டப்படிப்பை மேற்கொண்டார். 1941 ஆண்டு ஜொகானல்ஸ் பேர்க் சென்று பகுதிநேர சட்ட கல்வி படித்தார். சட்டமும் நீதியும் நியாயமும் இந்த நிறவெறியை தட்டிகேட்குமா? என்று சட்டமும் கற்றாரோ? சுங்க அதிகாரியாகவும் தோட்பாதுகாவலாளியாகவும் நிலவுடமைகளை பாதுகாப்பவராகவும் பணிபுரிந்தார்.

ஒரு குத்துச்சண்டை விரன் இந்த பதவியொல்லாம் மறுக்கபட்டது நியாயத்திற்காக போராடியபடியால் நீதியற்ற நியாயமற்ற சட்டம் தென்னாபிரிக்காவில் பெரும்பான்னையினம் கருப்பினமாக இருந்தபோதிலும் அங்கு வெள்ளையினத்தவர் சிறுபான்னையினத்தவர் கையில் ஆட்சியிருந்தது. இதனால் பொங்கியெழந்த மண்டேலா என்னும் இளைஞன் 1939 ஆண்டு 21 வயதில் கருப்பின இளைஞர் ஒன்றியம் இணைத்து கருப்பின மக்கள் அடக்கப் படுவதையும் அவர்கள் பிரயாணம் செய்வதற்கு அவர்கள் நாட்டிலே அனுமதி பெறவேண்டியிருந்தது. 

நிலவுடமையாளர் கருப்பின மக்கள் இருப்பது தடைசெய்யப்பட்டிருந்தது. இதற்கு எதிராக போராடவேண்டும் இளஞர்களை திரட்டி கருப்பினமக்கள் விழிப்படைய செய்தார். அதிலும் வெற்றி கண்ட புரட்சியாளான் புலமையாளன் அரசின் நிறவாதமும் ஒடுக்கமுறையும் கண்டு சீற்றம் கொண்ட மண்டேலா அரசியலில் குதித்தார், அந்தோ! கருப்பினத்தின் மாற்றங்கள் புறப்பட்டன. அறப்போர் செய்யபுறப்பட்ட மண்டேலா தோல்வியே கண்டார் தானும் இளைஞர்களும் சிறைவாசம் செல்ல நேர்ந்ததின் விளைவு ஆயுதப்போர்புரிய ஆயுதபடைத் தலைவனாக உருவெடுத்தார். வெளிநாட்டு நட்புசக்திகளிடம் உதவிபெற்று இராணுவகேந்திர நிலையங்களை கெரில்லா பாணியில் கிளைத்தெரிந்தார் 1961 ஆண்டு இனவெறிக்கு எதிராக போராடினார். 

மனித உரிமை மீறுவதாக மனிதவுரிமையே என்னவென்று தெரியாத வெள்ளையினம் கருப்பினத்தின் தலைவன் மண்டேலாவை தாக்கியது. பெரும்பான்னை கருப்பினம் வாழும் நாட்டில் அவர்கள் வாழ தொழில் செய்ய நிலங்களை சொந்தமாக வைத்திருக்க முடியாது பாடசாலைசெல்ல முடியாது தடைசெய்தது. எந்த மனிதவுரிமை சட்டத்தில் எழுதியிருந்தது என்று வெள்ளையினத்திடம் யார் கேட்பது?

பொதுமக்களும் தாக்கப்பட்டனர் என்ற குற்றம்சாட்டி பயங்கரவாத முத்திரை குத்தி 27 வருடங்கள் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் வதைப்பட்ட துன்பத்தை அவர் சட்டதரணி தொலைகாட்சிமூலம் காட்சி படங்களாக காட்டியபோது என் கண்கள் கண்ணீர் கொட்டியது எனக்கே தெரியாது? கொட்டியது இந்த மாமனிதன் ஏன்? பாடுபட்டார் கருப்பாக பிறந்தது யார் குற்றம் தென்னாபிரிக் மக்கள் குற்றமா? இதைதட்டிகேட்டது மணடேலாவின் குற்றமா? இதை
இந்த உலகம் உணர்ந்ததா? இல்லை 2008 ஆண்டுதான் பயங்கரவாத குற்றசட்டம் நீக்கபட்டது மண்டேலாவிற்கு இது அதிர்ச்சி ஆனால் உண்மை உலகவரலாற்றிலே மணடேலா போன்று சிறையில் வாடிய தலைவர் இல்லை. சின்ன அறைச்சிறையில் வாடிய மண்டேலா என்னும் அழகிய நட்சத்திரம் கல்லுடைத்து கல்லின் பாரம் சுமந்து கால் காய்த்து களைத்து காசநோயால் வருந்தி வதைபட்டார் சிறையில் வாடும்போது அவரின் ஆண்பிள்ளை விபத்தில் இறந்தது.

இறந்த செய்தியை சட்டதரணி வந்து கூறி மண்டேலாவை மரணசடங்கிக்கு அழைத்து போக அனுமதி கேட்டபோது வெள்ளை சட்டம் மறுத்தது அப்போதும் மண்டேலா சட்டதரணியிடம் கூறியவிடை.'' என்னை என் மகன் மன்னிப்பான் இது ஒரு இனத்தின் போராட்டமென கூறி மன்னிப்பான் என்றார்''; மனம் நெகிழ்ந்தது அவள் காதலி வந்த பார்க்கவும் தடையிருந்தது எந்த உறவும் பார்க்ககூடாத அளவிக்கு தடை எவ்வளவு மனிதவுருவின் மிருகங்களாக இருந்திருக்கிறார்கள்.

எப்பொழுதும் சிறைக்குள்ளே மாற்றம் செய்வதாக இருந்தாலும் 7 பொலிஸ் காவலாளிகளுடனே கூட்டிபோவார். சிறைசாலையில் இருக்கும் போதே கருப்பினத்திற்கான அடக்கு முறைபற்றியே எழுதுவார் பேசுவார்ரென சிறையில் பெரும் காலங்களை ராபன் தீவுபகுதியல் சின்னசிறையில் கழித்தார் இவையும் காட்சி படங்களாக காட்டபட்டது. கடுமையான காசநோய் காரணமாகவே சிறையில் இருந்து விடுபட்டார். விடுதலையான மண்டேலா தொடந்தும் போராடினார் ஒரு நாட்டின் தலைவன் அந்த இனத்தின் உரிமைக்காக போராடினான் இறுதிவரையிலும் அவரை சட்டம் துரத்தியது இறுதிவரைக்கும் கூட நோயாளியாகிவிட்டதும் இந்த சட்டம்தான் இந்த உலகம்தான். அவர் ஆயுதத்தை கைவிட்டு நிறவெறிகாக பாடுபட்ட வர்ணிக்கமுடியாத மனிதன் பயங்கரவாதியென பெயர் வைக்கப்பட்ட ஒரு மனிதன் அதை நீக்கி ஐந்து வருடங்கள் ஆனாலும் அவரை உலகமே கடவுளாக கண்களாக நட்சத்திரமாக வானவில்லாக நியாயத்தின் மணியாக அநீதியின் எதிர்ரொளியாக மொத்தத்தில் இந்த உலகின் கடவுளாக வணங்குகிறது.

இவருக்காக கூறப்பட்ட குற்றங்கள் பிழையானவையென மனச்சாட்சி பேசுகிறது பாருங்கள் கருப்பு உள்ளங்களை வெள்ளையுள்ளமாய் மாற்றி மனிதவுருவின் கடவுளாக கருணை காட்டுகிறார் மண்டேலா உரிமை கூறிகிறார். என்போல நீங்களும் வாழுங்கள் உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் அழகிய வீடுகள் கட்டிவிட்டார். உலகத்தின் அத்தனை மனித உள்ளங்களின் உயிர் அணுக்களிலும் உரிமையோ உற்பத்தியாகிவிட்டார் மண்டேலா

அவரின் இறுதி அஞ்சலி இன்று தென்னாபிரிக்காவின் 80.000 ஆயிரபேர் கொண்ட அரங்கில் உலகத்து தலைவர்கள் ஒன்று கூடி மக்கள் தீரள்கள் கூடி அவரை வர்ணனைசெய்து வாழ்த்தி அஞ்சலி செய்து பெருமைகொள்ளும் காட்சிதன்னை பிரான்ஸ் தொலைகாட்சிகள் வானொலிகள் அத்தனையும் உலகத்து தொலைகாட்சிகள் அத்தனையும் காட்டுகிறது. தொடர்கிறார்கள் நாட்டு மக்கள் அதிகாலையில் இருந்து பாட்டுபாடி நடனம் ஆடி சிரித்து மரணவிழா கொண்டாடுகிறார்கள் அரங்கில் சிரிக்க தெரிந்த ஒரேயொரு உயிர் மனித உயிர் என்று தெரிந்தவர் மண்டேலா என்ற மாமனிதன் தான் அதற்காக அறிவித்து விட்டு போயிருக்கிறார் சிரியுங்கள் சிந்திங்கள் இயற்கையோ மழையாக கண்ணீர் கொட்டுகிறாள் கொட்டுகிறாள் இறுதி அஞ்சலியில், மக்கள் சிரிக்கிறார் மனம் விட்டு சிரிக்கிறார்கள் மனம் மகிழ்கிறது. நடனம் ஆடிக்கொண்டே இருக்கின்றார்கள். களைக்கவில்லை. சோரவில்லை. மாபெரும் பொக்கிசத்தை இழந்த சோகத்தின் வெளிப்பாடு இந்த நடனமும் பாட்டும் உணர்கின்றேன். 

Photo
தந்தையே மண்டேலா வணங்குகிறேன்.
வணங்குகிறேன் பல முறை
வானவில்லாக உன்னை பார்கின்றேன்
வானத்தின் நட்சத்திரமாக பார்கிறேன்
வானத்தின் சந்திரனாக பார்கிறேன்
சரித்திர நாயகனே சரித்திரங்கள்
உன்னை புகழ்ந்து கொண்டேயிருக்கும்

(கவிப்பிரியை பிரான்ஸ் 10 12 2013)

0 Comments



Leave a Reply.

    நெல்சன் மண்டேலா

    1918 - 2013

    பதிவுகள்

    December 2013

நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர் web counter
© 2011-23 ourmyliddy.com