இருபத்தைந்து ஆண்டுகள்
கடந்து விட்டது என்பதை விட
எம் இனிய காலங்கள்
இறந்து போய் விட்டது
என்று தான் சொல்ல வேண்டும்.
அழகிய கிராமம் என்பதா
அனைத்து ஆரோக்கியங்களையும்
அள்ளி தந்த தாய் என்பதா
தெரியவில்லை.
கடந்து விட்டது என்பதை விட
எம் இனிய காலங்கள்
இறந்து போய் விட்டது
என்று தான் சொல்ல வேண்டும்.
அழகிய கிராமம் என்பதா
அனைத்து ஆரோக்கியங்களையும்
அள்ளி தந்த தாய் என்பதா
தெரியவில்லை.
ஆலயங்களின் மணியோசை அழகிய கடலின் அலையோசை அருள் தரும் விநாயகர் அமைதியே வடிவான அன்னை மாதா எம்மைச் செதுக்கிய இரண்டு மாபெரும் கல்விக் கூடங்கள் விளையாட்டு மைதானங்கள் விசாலமான விமான நிலையம் எம்மக்களுக்கு போதுமான இரு பெரும் தொழில் வளங்கள் மாசில்லா மாதா கோவில் தரை தாலாட்டும் தென்றல் ஊர்த் தாகத்தையே தீர்க்கும் தண்ணீர்க் கிணறு. இன்னும் எத்தனையோ கவலை அற்று காற்றாய் திரிந்தோம் அன்று இன்று எத்தனை உயிர்கள் எம்மோடு இல்லை. நம் உறவுகளில் பலர் எங்குள்ளார்கள் என்றே அறியாமல் நாலா திசைகளிலும் நாடு கடந்தும் ஒரு நரக வாழ்கை எல்லாம் இருந்தாலும் எதுவுமே இல்லாதது போல இந்த ஊர் தாகம் தணியுமா இறுதியாக ஒரு கேள்வி நம்மை புதைப்பதற்கோ எரிப்பதற்கோவாவது எமது மண் கிடைக்குமா? ஏக்கங்கள் மட்டும் மீதமாக இறைமை மேல் கை வைத்தவனோ வசதியாக எம் தேச மக்களோ அகதியாக......... நிரூபா ********* |