பிரித்தானியா மயிலிட்டி மக்கள் ஒன்றியத்தின் 7ம் ஆண்டு வருடாந்த ஒன்றுகூடல் கடந்த 05/04/2015 ஞாயிற்றுக்கிழமை அன்று வழமையைவிட இவ்வருடம் அதிக அளவிலான மக்களுடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கலைநிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு, பொழுது போக்கு நிகழ்ச்சிகள் என நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்த எமது ஊர் மக்கள் அனைவருக்கும், கலைநிகழ்ச்சிகளில் பங்கு பற்றிய எல்லோருக்கும், எமக்கு இலவசமாக இசையை வழங்கி மகிழ்வித்த திரு. அயந்தன் அவர்களிற்கும், மயிலிட்டி.கொம் சார்பில் பரிசுப் பொருட்களை வழங்கிய திரு. சுதா தியாகராஜா அவர்களுக்கும், இந்நிகழ்வை நடாத்துவதற்கு நிதியுதவி மற்றும் உதவிகளை செய்த அனைத்து அன்புள்ளம் கொண்டவர்களிற்கும் நிகழ்வை சிறப்பாக நடாத்துவதற்கு எமக்கு உதவியாக இருந்த திரு. தங்கக்குமரன் இராமசாமி, திரு. ஜீவன் ராஜரட்ணம், திரு. மதன் சிவதாசன், அறிவிப்பாளர்கள் பூஜா கண்ணதாசன், சுரேக்கா சுதாகர், உசாழினி அகிலன் அவர்களிற்கும் பிரித்தானியா மயிலிட்டி மக்கள் ஒன்றியம் தமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றது. இனிவரும் காலங்களில் நடைபெறும் நிகழ்வுகளிலும் தங்களது முழு ஒத்துழைப்பையும் நாடி நிற்கின்றோம்.
பிரித்தானியா மயிலிட்டி மக்கள் ஒன்றியம்
நன்றி நன்றி நன்றி
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமையே பலம் ஒன்றுபடுவோம் பலம் பெறுவோம்
பிரித்தானியா மயிலிட்டி மக்கள் ஒன்றியம்
நன்றி நன்றி நன்றி
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமையே பலம் ஒன்றுபடுவோம் பலம் பெறுவோம்
இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.