மயிலிட்டி காசநோய் வைத்தியசாலையின் அருகே காங்கேசன்துறை வீதியில் ஆலமரநிழலில் ஐந்நூறாண்டு பழமைவாய்ந்த சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம் உடைத்து தரைமட்டமாக்கப் பட்டுள்ளது. வைத்திலிங்க வள்ளலார் தலைமையில் வைரக்கல்லில் பொழிந்து கட்டிய எம்பிரான் சந்நிதி தரைமட்டமாக்கப் பட்டுள்ளது. நித்தமும் சென்று நெய்த்தீபம் ஏற்றிய பக்தர்கள் தலவிருட்ச நிழலில் காவல் செய்யும் முனியப்பரை கற்பூரம் ஏற்றி வழிபாடியற்றி வந்துள்ளார்கள். ஆலய நிர்வாகசபை மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளது. படிப்படியாக அடுத்த கட்ட நகர்வுகள் மேற்கொள்ளப்படும்.
அண்மையில் மயிலிட்டித் துறைமுகமும் அதனைச் சூழவுள்ள 54 ஏக்கர் நிலமும் விடுவிக்கப்பட்ட பகுதியில் காசநோய் வைத்தியசாலையின் அருகே அமைந்திருந்த பழமைவாய்ந்த சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம் உடைத்து தரைமட்டமாக்கப்பட்டு, அதன் அடையாளமாக தலவிருட்சம் மட்டுமே எஞ்சியிருக்கின்றது.
அண்மையில் கற்பூரதீப தீபமேற்றி அடையாள நிகழ்வு நடைபெற்றது. அந்நிகழ்வின் படங்கள் இங்கே.
அண்மையில் கற்பூரதீப தீபமேற்றி அடையாள நிகழ்வு நடைபெற்றது. அந்நிகழ்வின் படங்கள் இங்கே.
இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.