நினைத்தது நான் தான் "தூக்கம் கலைந்தது"
தூக்கம் கலைந்தது
இந்நாட்களில், எமது வயதின் காரணமாக தூக்கம் இடையில், அதுவும் அதிகாலையில் கலைவது இயல்பு ஆயிடுச்சு. அந்தக் கலைவின் பின் திரும்ப தூங்குவது கடினமான ஒன்று. சிலவேளைகளில் அதிர்ஷ்டம் அழைக்கும் தூக்கத்திற்கு. நிறைய நாட்களில் துரதிஷ்டசாலி தான். இன்றும் வழமை போல தூக்கமின்றி படுக்கையில் புரண்டு கொண்டிருக்கும் போது, மனம் தன்பாட்டில் கிளம்பியது. மனதின் வேகம் ஒளியின் வேகத்திற்கு இணையானது என்று நினைக்கிறேன். இன்றும் இன்னொரு வழமையான வேலை நாள் தானே என்றும், அதே வேலை தானே என்று சற்று சலிப்புடன் நினைத்துக் கொண்டது, மனது. எவ்வளவு நாளாயிற்று இந்த வேலை தொடங்கி என்று நினைத்த போது, 30 வருடங்கள் ஆயிற்று என்று தோன்றியது. அதென்ன 30 வருடக் கணக்கு?

தற்போது செய்யும் வேலை coding அல்லது computer programming உடன் தொடர்புடையதொன்று. நான் எனது முதல் programming எழுதி 30 வருடங்கள் ஆயிற்று. அதாவது Campusல் 3வது வருடம் படிக்கும் போது, Campus என்று சொன்னால் பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் வளாகம் ஆகும், Mathematics பாடத்தில் உள்ள Fourier Series என்னும் பகுதிக்காக எழுதிய program தான் என்னுடைய முதலாவதாகும். இது Fortran Languageல் எழுதப்பட்டது. அக்காலத்தில் சக்தி உள்ள computers எல்லாம் இருந்ததில்லை. நாங்கள் பாவித்த computer பெயரே நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீங்க. அதன் பெயர் SORD, அதன் memory 64KB, அதன் speed ஞாபகம் இல்லை என்பதை விட தெரிந்திருக்கவில்லை என்று சொல்லலாம். இதெல்லாம் 1991ல் நடந்ததாக ஞாபகம். இப்ப 30 கணக்கு சரி வருகிறது தானே?
மேற்சொன்ன வருடக் கணக்கை தொடர்ந்து எப்படி programmingல் ஆர்வம், interest வந்தது என்பதிற்குள் மனம் தாவியது. நான் பல்கலைக்கழகம் வரும்வரை computerஐ பார்த்தது கிடையாது. ஆனால் கேள்விப்பட்டிருக்கிறேன். எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் ஒரு இரும்புக்கடை(hardware store) இருந்தது. அதன் உரிமையாளர் தெல்லிப்பளையை சேர்ந்தவர் என்பதுடன் எனது தாயாருக்கு தூரத்து உறவினர். அவரை இரும்புக்கடை அண்ணை என்று தான் அழைப்போம். எனக்கு நேரம் கிடைக்கிற போது அவர் கடையில் போய் நின்று அரட்டை அடிப்பது வழக்கம். அப்படி அரட்டை அடிப்பவர்களில் ஒருவர் தான் அந்த நாட்களில் computer tutionற்கு யாழ்ப்பாணம் போவார். அவர் மூலமாக தான் computerஐப் பற்றி அறிந்து கொண்டேன், Basic language பற்றியும் தெரிந்து கொண்டேன்.
மனதென்பது கடிவாளமற்று கண்டமேனிக்கும் ஓடித்திரியும். இப்படி மனது மேற்கூறிய சம்பவங்களுடன் பயணிக்கும் போது அது இன்னொரு சம்பவத்திற்குள் புகுந்தது. மேற்கூறிய சம்பவம் இரும்புக்கடையை சம்பந்தப்படுத்தியதால், இச்சம்பவமும் அதனுடனேயே சம்பந்தப்பட்டிருந்தது. அது 84-85 காலப்பகுதியாய் இருக்க வேண்டும். நாங்கள் வழமை போல இரும்புக் கடையில் அரட்டையில் இருந்தோம். திடீரென சில ராணுவ வாகனங்கள் இரும்புக்கடையை சூழ நிறுத்தப்பட்டு, அவைகளிலிருந்து இறங்கிய ராணுவ வீரர்கள் கடையை சூழ நின்றார்கள். கடைக்கு முன் நிறுத்தப்பட்டிருந்த ராணுவ ஜீப்பில் இருந்து ஒரு ராணுவ அதிகாரி கடையை நோக்கி வந்தார். என்னை அச்சம் பற்றிக்கொள்ள தொடங்கியது. சிறிய பயத்துடன் கடைக்குள் சென்றேன். அந்த பயம் பற்றிக் கொண்ட நேரத்திலும் எனக்கு சிரிப்பை வரவழைக்கிற சம்பவம் ஒன்று அங்கு நடந்தது. எங்களுடன் கடையில் நின்ற என்னுடைய அப்பு - எனது தந்தையாரின் சிறிய தகப்பனார். அவரை தெரியாமல் மயிலிட்டியில் எவரும் இருக்கமுடியாது. சின்னத்தம்பி பரியாரியார் என்றால் எல்லாருக்கும் தெரியும். இவரின் பேதி குளிகைகள் அவ்வளவு பிரபலம். அந்த வேளையில் அவர் பயத்துடன் காட்டிய எதிர்வினை சற்று சிரிப்பாக இருந்தது. அவர் ராணுவத்தினரை கண்ட அச்சத்தில் இரண்டு கைகளையும் உயர்த்தினார் - அது hands up நிலைக்கும் கைகளை கிடையாக நீட்டும் நிலைக்கும் இடைப்பட்ட்தாகவிருந்தது.
கடைக்கு வந்த அதிகாரி , தனது செல்லப்பிராணிக்கு பாலூட்டுவதற்காக சிறிய பிளாஸ்டிக் குவளை ஒன்று வாங்க வந்திருந்தார் . அந்த அதிகாரியின் முகம் என்னுடைய பயத்தை ஓரளவு போக்கியிருந்தது . ஏனென்றால் அவரின் முகத்தில் கடுமையில்லாமல் சிரிப்பே இருந்தது . எனது பயத்தை போக்கவோ தெரியவில்லை, இரும்பு கடையண்ணை “ராசன் அந்த பிளாஸ்டிக் bowl ஐ அவருக்கு எடுத்து குடும் “ என்று என்னை கேட்டுக்கொண்டார். அது எனக்கு சிறிது தெம்பை தந்தது . அந்த அதிகாரி விரும்பிய bowl ஐ எடுத்துக் கொடுத்தேன் . அந்த அதிகாரி அதற்குரிய பணத்தை இரும்பு கடையண்ணையிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு விட்டார். எல்லா ராணுவத்தினரும் அவ்விடத்தை விட்டு அகன்று விட்டார்கள் . அங்கிருந்தவர்கள் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டார்கள் . ஆனால் எனக்கு அப்பொழுது தெரியாது நான் குவளை bowl, கொடுத்த அந்த அதிகாரி அன்று உயிரை விடப் போகிறார் என்று . அவர் யார், என்ன நடந்தது என்று அடுத்த பகுதியில் சொல்கிறேன்.
- தி. சுகுமார்

இந்தப் பக்கம்
தடவை பார்வையிடப்பட்டுள்ளது.