
இடப்பெயர்வின் நாட்கள்....
அதுவரை வாழ்ந்த தாழ்வார வீடு விட்டு
உயிர்வாழ இடம் தேடி
போகாத தடங்களின் மேல்
காணாத ஊர்களின் தெருக்களில்
தொலைத்த நிம்மதியைத் தேடி
துரத்தி வந்த எறிகணைகளுக்கிடையில்
அதுவரை வாழ்ந்த தாழ்வார வீடு விட்டு
உயிர்வாழ இடம் தேடி
போகாத தடங்களின் மேல்
காணாத ஊர்களின் தெருக்களில்
தொலைத்த நிம்மதியைத் தேடி
துரத்தி வந்த எறிகணைகளுக்கிடையில்
அடி வேரோடு பிடுங்கிய மரமாய்
இடம் விட்டு இடம்
உயிர்வாழ இடம் தேடி ஓடிக் கொண்டிருந்தோம்
போகும் ஊர் எங்கும் போடும்
தறப்பாள் கூடாரங்கள்
நான்கு நாளில் அருகில் விழும்
எறிகணை கண்டு
அடுத்த ஊர் நகரும்
இடை இடையே கேட்டிடும்
மனித ஓலங்கள்
எங்கோ உயிர் போனதையும் உறுதிப்படுத்திடும்
அத்தனை உடமைகளும்
உழவு இயந்திரப் பெட்டியில்
இறுதி வரை கொண்டு செல்வதென
சபதங்களும்
உயிர்வலியை காட்டிச் சென்ற
முள்ளிவாய்க்கால் வரை
தொடர்ந்தது
ஆண்டுகள் எத்தனையும் போகட்டும்
இடப்பெயர்வின் இடர்களை
மறந்து போவது சாத்தியமற்றது
எங்களுக்கு...
- மயிலை வசந்தரூபன்
இடம் விட்டு இடம்
உயிர்வாழ இடம் தேடி ஓடிக் கொண்டிருந்தோம்
போகும் ஊர் எங்கும் போடும்
தறப்பாள் கூடாரங்கள்
நான்கு நாளில் அருகில் விழும்
எறிகணை கண்டு
அடுத்த ஊர் நகரும்
இடை இடையே கேட்டிடும்
மனித ஓலங்கள்
எங்கோ உயிர் போனதையும் உறுதிப்படுத்திடும்
அத்தனை உடமைகளும்
உழவு இயந்திரப் பெட்டியில்
இறுதி வரை கொண்டு செல்வதென
சபதங்களும்
உயிர்வலியை காட்டிச் சென்ற
முள்ளிவாய்க்கால் வரை
தொடர்ந்தது
ஆண்டுகள் எத்தனையும் போகட்டும்
இடப்பெயர்வின் இடர்களை
மறந்து போவது சாத்தியமற்றது
எங்களுக்கு...
- மயிலை வசந்தரூபன்
இந்தப் பக்கம்
தடவை பார்வையிடப்பட்டுள்ளது.