நமது மயிலிட்டி
  • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
    • நல்வரவு! 2013,12,11
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு"
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை

"என்ன வாழ்க்கை இது"

    • இதெல்லாம் ஒரு வாழ்க்கை...

      எனக்குள்ளே ஒரு மாற்றம்
      தடம் மாறும் தடுமாற்றம்
      ஏன் இந்த நிலை மாற்றமோ?
      என் வாழ்வே ஏமாற்றமோ?

      கொடும்பாவி எரித்தாற்போல்
      அப்பாவி இவன் நெஞ்சோ
      அனலாக வெடிக்கின்றதே
      புது புயலொன்று அடிக்கின்றதே..

      கனவுக்குள் பேரின்பம்
      நனவிலோ பூகம்பம்
      எதிர்பார்ப்பும் தவிடானதே
      உடல் "மெய்" இல்லை "பொய்" ஆனதே..

      கொடிப்பூக்கள் பூக்கின்ற
      கொடியொன்று எனைச்சேர
      இதமாக சிரிக்கின்றதே
      பாசக்கயிறாக துடிக்கின்றதோ?

      ஒரு மூடன் இவன் என்று
      ஊரெல்லாம் கதை இன்று
      அவை எல்லாம் பொய் ஆகுமா?
      கண்ணீரே விடையாகுமா?

      நெருடல்கள் சுவைக்கின்ற
      உணவாக நான் இங்கு
      வருடல்கள் எனக்கேதம்மா
      விதியென்று மனம் ஆறுமா?

      வெள்ளத்தில் மிதக்கின்ற
      கரைசேர்ந்த ஓடம் போல்
      கண்ணீரில் மிதக்கின்றேன்
      துடுப்பின்றி தவிக்கின்றேன்..

      பச்சைத்தண்ணிரில்
      பலகாரம் சுட நினைக்கும்
      கஞ்சன் நான் இல்லை
      பஞ்சம் வாட்டுதம்மா..

      பெற்றவளும் இங்கே
      கூடப்பிறந்தவளும் இங்கே
      செஞ்சோற்றுக்கடன் தீர்பேனோ
      சோறின்றி உயிர் நீப்பேனோ?

      தோள் மீது சுமையோடு
      சுமைதாங்கி இங்குள்ளேன்
      வழிகாட்டி இங்கில்லையே
      திசைகாட்டி திரும்பலையே..

      தெவிட்டாத உறவொன்று
      என்னுள்ளே குடியிருக்க
      அவளுக்காய் என்செயவேனோ?
      உயிர் நீங்கும் உடல் காண்பாளோ?

      ஏமாற்றம் தனிஎன்று
      துணை வந்து கை கோர்க்க
      தடுமாற்றம் புறப்பட்டதோ ?
      தடம் புரண்ட ரயிலாவேனோ?


Picture
Picture
Picture
Picture

    "என்ன வாழ்க்கை இது-குமரேசன் தமிழன்"
    கருத்துக்களை இங்கே பதிவுசெய்யுங்கள்:

Submit
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர் web counter
© 2011-22 ourmyliddy.com