
கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் 29 ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட கலாபூஷணம் விருது வழங்கல் விழா கொழும்பு றோயல் கல்லூரி நவரங்க கலா மண்டபத்தில் நேற்று கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சர் ரீ.பீ.ஏக்கநாயக்க தலைமையில் நடைபெற்றது. இலக்கியம் கலைத்துறையில் நீண்ட கால சேவையாற்றியவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.