|
"பொங்கிடும் கடற்கரை பொலிவிழந்த நாள்"
ஆயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூறு ஆனி மாதம் பதினைந்தாம் நாள் மயிலை மண்ணின் இருண்ட நாள். |
அந்தி சாயும் பொழுது
அன்னியன் ஆக்கிரமிப்பு
காற்றில் வந்த செய்தி கேட்டு
முற்றத்துத் தென்னைமரம் ஒப்பாரி வைத்தது.
கிணற்றுத் துலாக்கொடி தேம்பி அழுதது
மயிலிட்டி வடக்கில் உள்ள தோட்டத்தில் நின்ற
கத்தரிச் செடி வெண்டிச் செடிக்குச் சொன்னது
பேய்கள் ஊருக்குள் வருகுது.
எதிரி ஏவிய ஏவுகணைகள் குடிமனைகளை எரித்தன
பாய்ந்து வந்த குண்டுகள் உயிர்களைப் பறித்தன.
கையில் அகப்பட்டதை எடுத்துக் கொண்டு
உயிர் காக்க விரைந்தனர் எம் மக்கள்.
சொந்த மண்ணை விட்டு மக்கள் விரட்டப்பட்டனர்
கூடிழந்த குருவிகளானோம்.
குந்தி இருக்க குடிநிலமற்ற நாதிகளானோம்.
வீதியெங்கும் மக்கள் வெள்ளம்.
ஊர் வெள்ளம் வடிந்தோடி ஓரிடத்தில் சேர்ந்தது போல
மக்களெல்லாம் ஒன்றானார் ஊறணி அந்தோனியாரிலே
அங்கிருந்து கிளைகளாகப் பிரிந்தனர்.
ஒவ்வொருத்தரும் ஒவ்வோர் திசையிலே
சொந்த மண்ணிலேயே
அனாதைகளானோம்.
ஆண்டாண்டு காலமாக நாம் வாழ்ந்த மண்
அந்நியனால் அபகரிக்கப்பட்டது.
பொங்கிடும் கடற்கரை பொலிவிழந்து போனது.
முப்பாட்டன் வாழ்ந்த மண் முடக்கப்பட்டது.
முட்கம்பி வேலிகளுக்குள்ளும்
கண்ணிவெடி வயல்களிற்குள்ளும்
எம் தாய்மண் சிறைப்பட்டது.
மண்ணை இழந்தோம் மக்களை இழந்தோம்
நாடுகள் கடந்தோம் நாதிலிகளாய் அலைந்தோம்
அப்பு ஆச்சியர் ஆண்ட பூமி
அப்புகாமி ஆளுகின்றான்.
நித்திய பூஜைகள் நடபெற்ற ஆலயங்கள்
நிரந்தரமாக மூடப்பட்டது.
எம்மவர் ஆண்ட கடலினை எதிரி ஆழுகின்றான்.
கலைகள் வளர்த்த இடங்கள் காடாகிப்போனது
தேர் ஓடிய வீதிகள் தேடுவாரற்றுக் கிடக்கின்றது
எங்கள் சிற்பிகள் செய்த சிற்பங்கள் சிதைந்து போனது
மயிலிட்டி தன் அழகை இழந்தது
இருபத்தி ஐந்து ஆண்டுகள் உருண்டோடின.
மயிலை சுதா நவம்
அன்னியன் ஆக்கிரமிப்பு
காற்றில் வந்த செய்தி கேட்டு
முற்றத்துத் தென்னைமரம் ஒப்பாரி வைத்தது.
கிணற்றுத் துலாக்கொடி தேம்பி அழுதது
மயிலிட்டி வடக்கில் உள்ள தோட்டத்தில் நின்ற
கத்தரிச் செடி வெண்டிச் செடிக்குச் சொன்னது
பேய்கள் ஊருக்குள் வருகுது.
எதிரி ஏவிய ஏவுகணைகள் குடிமனைகளை எரித்தன
பாய்ந்து வந்த குண்டுகள் உயிர்களைப் பறித்தன.
கையில் அகப்பட்டதை எடுத்துக் கொண்டு
உயிர் காக்க விரைந்தனர் எம் மக்கள்.
சொந்த மண்ணை விட்டு மக்கள் விரட்டப்பட்டனர்
கூடிழந்த குருவிகளானோம்.
குந்தி இருக்க குடிநிலமற்ற நாதிகளானோம்.
வீதியெங்கும் மக்கள் வெள்ளம்.
ஊர் வெள்ளம் வடிந்தோடி ஓரிடத்தில் சேர்ந்தது போல
மக்களெல்லாம் ஒன்றானார் ஊறணி அந்தோனியாரிலே
அங்கிருந்து கிளைகளாகப் பிரிந்தனர்.
ஒவ்வொருத்தரும் ஒவ்வோர் திசையிலே
சொந்த மண்ணிலேயே
அனாதைகளானோம்.
ஆண்டாண்டு காலமாக நாம் வாழ்ந்த மண்
அந்நியனால் அபகரிக்கப்பட்டது.
பொங்கிடும் கடற்கரை பொலிவிழந்து போனது.
முப்பாட்டன் வாழ்ந்த மண் முடக்கப்பட்டது.
முட்கம்பி வேலிகளுக்குள்ளும்
கண்ணிவெடி வயல்களிற்குள்ளும்
எம் தாய்மண் சிறைப்பட்டது.
மண்ணை இழந்தோம் மக்களை இழந்தோம்
நாடுகள் கடந்தோம் நாதிலிகளாய் அலைந்தோம்
அப்பு ஆச்சியர் ஆண்ட பூமி
அப்புகாமி ஆளுகின்றான்.
நித்திய பூஜைகள் நடபெற்ற ஆலயங்கள்
நிரந்தரமாக மூடப்பட்டது.
எம்மவர் ஆண்ட கடலினை எதிரி ஆழுகின்றான்.
கலைகள் வளர்த்த இடங்கள் காடாகிப்போனது
தேர் ஓடிய வீதிகள் தேடுவாரற்றுக் கிடக்கின்றது
எங்கள் சிற்பிகள் செய்த சிற்பங்கள் சிதைந்து போனது
மயிலிட்டி தன் அழகை இழந்தது
இருபத்தி ஐந்து ஆண்டுகள் உருண்டோடின.
மயிலை சுதா நவம்