கறுப்பு ச் சிங்கமே நெல்சன் மண்டேலா!!
**** ****** ****** **** ***** **** ******
இருண்ட கண்டத்தில் விரிந்த மலரே!
இரும்புத்திரை உடைத்தெழுந்த கதிரே!
கறுப்புச் சிங்கமே நெல்சன் மண்டேலா!
நம்பிக்கை முனை நாட்டின் நட்சத்திரமே
விடுதலையின் முகவரி தெரிந்தவனே
போராடிப்பெற்ற சுதந்திரத்தின்
பெறுமதி தெரிந்தவனே!
**** ****** ****** **** ***** **** ******
இருண்ட கண்டத்தில் விரிந்த மலரே!
இரும்புத்திரை உடைத்தெழுந்த கதிரே!
கறுப்புச் சிங்கமே நெல்சன் மண்டேலா!
நம்பிக்கை முனை நாட்டின் நட்சத்திரமே
விடுதலையின் முகவரி தெரிந்தவனே
போராடிப்பெற்ற சுதந்திரத்தின்
பெறுமதி தெரிந்தவனே!
அடக்கப்பட்ட மக்களின் அவதார புருசனே
விடுதலைக்காக போராடிய வீரனே
சுதந்திரக்காற்றை சுவாசித்த உத்தமனே
நிறவெறிக்கு எதிராக குரல் கொடுத்தாய்
நியாயத்திற்காய் போராடினாய்
நியாயத்தை நிலைநாட்டிய வரலாற்றின் நாயகனே!
தேசத்தை வழிநடத்தினாய்
தேசத்தந்தை ஆனாய்
இனவெறியரை சுட்டெரித்த கறுப்பு நெருப்பே
ஆனாய் என்றும் கலங்கரை விளக்கு
விடுதலைக்காக சீறி எழுந்தாய்
அதனால் இருந்தாய் சிறைவாசம்
மீண்டு வந்தாய் நாட்டை ஆண்டாய்
கண்டங்கள் கடந்து நின்றாலும்
நிறங்கள் மாறுபட்டு நின்றாலும்
நாங்கள் உணர்வால் ஒன்றுபட்டவர்கள்
நீங்கள் போராடியவர்கள்
நாங்கள் தொடர்ந்து போராடுகின்றோம்.
சூரியனை வழிமறித்து தொட்டுபேசும்
வல்லமையின்வடிவே!
காலம்உள்ளவரை உன்புகள் பேசப்படும்.
மயிலை சுதா நவம்
விடுதலைக்காக போராடிய வீரனே
சுதந்திரக்காற்றை சுவாசித்த உத்தமனே
நிறவெறிக்கு எதிராக குரல் கொடுத்தாய்
நியாயத்திற்காய் போராடினாய்
நியாயத்தை நிலைநாட்டிய வரலாற்றின் நாயகனே!
தேசத்தை வழிநடத்தினாய்
தேசத்தந்தை ஆனாய்
இனவெறியரை சுட்டெரித்த கறுப்பு நெருப்பே
ஆனாய் என்றும் கலங்கரை விளக்கு
விடுதலைக்காக சீறி எழுந்தாய்
அதனால் இருந்தாய் சிறைவாசம்
மீண்டு வந்தாய் நாட்டை ஆண்டாய்
கண்டங்கள் கடந்து நின்றாலும்
நிறங்கள் மாறுபட்டு நின்றாலும்
நாங்கள் உணர்வால் ஒன்றுபட்டவர்கள்
நீங்கள் போராடியவர்கள்
நாங்கள் தொடர்ந்து போராடுகின்றோம்.
சூரியனை வழிமறித்து தொட்டுபேசும்
வல்லமையின்வடிவே!
காலம்உள்ளவரை உன்புகள் பேசப்படும்.
மயிலை சுதா நவம்