புயலடித்த தேசத்தில் ஒரு புனிதப்போர்
புத்தனின் பித்தர்களுக்கு பாடம் புகட்டும் போர்.
நாங்கள் சுனாமி அடித்த தேசத்திற்கு சொந்தக்காரர்கள்
சிங்களத்திற்கு பினாமிகளாய் வாழமாட்டோம்!
மாவைக்கந்தன் வீதியில் நடக்குது
மக்களின் போராட்டம்.
இது பகட்டுப்போரல்ல- பட்டிணிப்போர்.
மன்னனுக்கான போரல்ல
மண்ணுக்கான போர்.
இது வேடிக்கை போரல்ல
விடியலுக்கான போர்.
நல்லைக்கந்தன் வீதியில் அன்று
இன்று மாவைகந்தன் வீதியில்.
அன்று நடந்தது பாரதத்திற்கு எதிராக
இன்று நடப்பது சிங்கள பாதகருக்கு எதிராக.
இது ஆயுதப்போரல்ல
அகிம்சைப்போர்.
நாம் தீவிரவாதிகளல்ல
அகிம்சா வாதிகள்.
நாம் சிங்கள தேசத்தை கேட்கவில்லை
எங்கள் சிங்கார தேசத்தே கேட்டோம்.
இது அன்னியன் பூமியல்ல
எங்களின் அன்னை பூமி.
மயிலிட்டிமண் மகிந்த தேசமல்ல
எங்களின் மாசற்ற மண்
உப்புக்கடலும் உவர்மணலும்
எங்கள் உதிரத்தில் கலந்தவை.
மயிலிட்டி கந்தக பூமியல்ல
எங்களின் கற்பக பூமி.
உணவு தவிர்ப்புப் போராட்டம்
எங்கள் உணர்வுகளின் வெளிப்பாடு.
இது வெள்ளரசு வளரும் தேசமல்ல
வேம்புகள் வளரும் தேசம்.
கித்துல் வளரும் இடமல்ல
வைரம் பாய்ந்த பனைகள் வளருமிடம்.
வறண்ட தேசமல்ல
வந்தாரை வாழவைத்த தேசம்
எங்கள் மண் வணங்காமண்
வனப்புமிக்க மண்.
எம்மக்களே!
ஒன்றுபடுங்கள்
உரிமைக்காக குரல் கொடுங்கள்
ஊருக்கு போவோம்
போருக்கு வாரீர்.....
விடுதலை இன்றேல் விடிவு இல்லை.
அடங்கிக்கிடந்தது போதும்
ஆர்ப்பரித்து எழுவோம்.
நாளை எம் தேசம் புகுவோம்....
மயிலை சுதா நவம்
புத்தனின் பித்தர்களுக்கு பாடம் புகட்டும் போர்.
நாங்கள் சுனாமி அடித்த தேசத்திற்கு சொந்தக்காரர்கள்
சிங்களத்திற்கு பினாமிகளாய் வாழமாட்டோம்!
மாவைக்கந்தன் வீதியில் நடக்குது
மக்களின் போராட்டம்.
இது பகட்டுப்போரல்ல- பட்டிணிப்போர்.
மன்னனுக்கான போரல்ல
மண்ணுக்கான போர்.
இது வேடிக்கை போரல்ல
விடியலுக்கான போர்.
நல்லைக்கந்தன் வீதியில் அன்று
இன்று மாவைகந்தன் வீதியில்.
அன்று நடந்தது பாரதத்திற்கு எதிராக
இன்று நடப்பது சிங்கள பாதகருக்கு எதிராக.
இது ஆயுதப்போரல்ல
அகிம்சைப்போர்.
நாம் தீவிரவாதிகளல்ல
அகிம்சா வாதிகள்.
நாம் சிங்கள தேசத்தை கேட்கவில்லை
எங்கள் சிங்கார தேசத்தே கேட்டோம்.
இது அன்னியன் பூமியல்ல
எங்களின் அன்னை பூமி.
மயிலிட்டிமண் மகிந்த தேசமல்ல
எங்களின் மாசற்ற மண்
உப்புக்கடலும் உவர்மணலும்
எங்கள் உதிரத்தில் கலந்தவை.
மயிலிட்டி கந்தக பூமியல்ல
எங்களின் கற்பக பூமி.
உணவு தவிர்ப்புப் போராட்டம்
எங்கள் உணர்வுகளின் வெளிப்பாடு.
இது வெள்ளரசு வளரும் தேசமல்ல
வேம்புகள் வளரும் தேசம்.
கித்துல் வளரும் இடமல்ல
வைரம் பாய்ந்த பனைகள் வளருமிடம்.
வறண்ட தேசமல்ல
வந்தாரை வாழவைத்த தேசம்
எங்கள் மண் வணங்காமண்
வனப்புமிக்க மண்.
எம்மக்களே!
ஒன்றுபடுங்கள்
உரிமைக்காக குரல் கொடுங்கள்
ஊருக்கு போவோம்
போருக்கு வாரீர்.....
விடுதலை இன்றேல் விடிவு இல்லை.
அடங்கிக்கிடந்தது போதும்
ஆர்ப்பரித்து எழுவோம்.
நாளை எம் தேசம் புகுவோம்....
மயிலை சுதா நவம்