ஆழிப்பேரலை அனர்த்தத்தின் 9ம் ஆண்டு நினைவில்....
ஆழிப்பேரலையில்
மீளாத்துயில் கொண்டவரே!!!
****** *****-- ******-- *****--**
வெண்மணல்பரப்பும் விடிகாலைப்பொழுதும்
கடந்துவிட்டகாலமதில் கசங்கிப்போனபக்கங்கள்.
இல்லை அவை கிழித்து எறியப்பட்ட பக்கங்கள்.
கூடிவாழ்ந்திருந்த எங்கள் கூட்டின் குருவிகளே!
காலன் உமை கூட்டாக அழைத்தானே!
அமைதியாய் வாழ்ந்த உறவுகளே!
ஆழிப்பேரலை உமை அடித்துச்சென்றதே!
ஆழிப்பேரலையில்
மீளாத்துயில் கொண்டவரே!!!
****** *****-- ******-- *****--**
வெண்மணல்பரப்பும் விடிகாலைப்பொழுதும்
கடந்துவிட்டகாலமதில் கசங்கிப்போனபக்கங்கள்.
இல்லை அவை கிழித்து எறியப்பட்ட பக்கங்கள்.
கூடிவாழ்ந்திருந்த எங்கள் கூட்டின் குருவிகளே!
காலன் உமை கூட்டாக அழைத்தானே!
அமைதியாய் வாழ்ந்த உறவுகளே!
ஆழிப்பேரலை உமை அடித்துச்சென்றதே!
ஆழிப்பேரலையே ஆடினாயே கோரத்தாண்டவம்
அடங்காத்தமிழனை அழித்துச்சென்றாயே
ஆண்டதமிழினம் மாண்டுபோனதே
உவகையோடுவாழ்ந்தவரை
உறக்கத்தில் அழித்தாயே.
தாயின்மடியே தஞ்சமெனவாழ்ந்தவரை
தண்ணீரில் மூழ்கடித்தாயே.
நீ அள்ளிச்சென்றவர்களுக்கு
நாம் கொள்ளி கூட வைக்கலையே...
கொத்துக்கொத்தாக விதைத்தோமே..
உப்பிட்டகடல்தாயே அவர்கள்
உயிரையும் எடுத்தாயே.
உன்மடிவாழ்ந்தவர்வாழ்வில்
உலைவைத்தாயே..
பூத்துக்குலுங்கிய பூக்களை
கசக்கி எறிந்தாயே
உன்னதவாழ்வை நோக்கியவர் வாழ்வை
உதிர வைத்தாயே
கூற்றுவனே !
உனக்கேன் எம்மீது இந்தகொலைவெறி.
கொத்துக்கொத்தாய் எம்மவரை பறித்தாயே.
எங்கள் சிங்காரதேசத்தை சிதைத்தாயே.
எமை தாலாட்டிய கடலன்னையே
ஏன்பொங்கியெழுந்தாய்?
யாரிட்டார் ஆணை
அழித்துவிட்டாய் எம் வாழ்வை.
ஆறவில்லை எம் நெஞ்சங்கள்
அடங்கவில்லை துயரம்
ஆண்டதமிழனை அடக்கநினைத்தாயே.
மாண்டுபோனவரை மீளத்தருவாயோ.???
நீ எம்மவர் உயிரை குடித்தநாள்
எம்வாழ்வில் அது கறுப்புநாள்.
ஆழிப்பேரலையில்
மீளாத்துயில் கொண்டவரே!!
ஆண்டுகள் ஒன்பது ஆனபோதும்
ஆறாது எம்நெஞ்சில் சோகம்.
ஊழித்தாண்டவமாடிய ஆழிப்பேரலையே
புனல்கொண்டு எமை அழித்தாலும்
புதுஜென்மம் நாமெடுப்போம்.
ஆழிவாய்திறந்து பேரலை அடித்தாலும்
நாம் அடங்கிவிடமாட்டோம்.
அழிந்துவிட்ட தேசமதில்
புனரநிர்மானம் செய்தோமே.
மீண்டும் எம்மை சூழ்ந்ததே கார்மேகம்.
பலசுனாமிகள் சேர்ந்து எமைதாக்கியதே.
நந்திக்கடலும்,முள்ளிவாய்க்காலும்
எங்கள் குருச்ஷேத்திரமானதே.
அங்கேதானே விதைத்தோம் எங்கள் விதைகளை.
காலனே உனக்கும் காலம் வராதோ?
எங்கள் காவலர்களை காவுகொண்டாயே.
கடலம்மா கண்திறந்து பாராயோ?
தாய்மண்ணின் தடைகளை
உடைக்காயோ.
மயிலைமண்ணை சூழ்ந்த மாற்றானை
அழிக்கப்புறப்படு.
பொங்கியெழு கடலம்மா
அழிப்பேரலையாய் ஆர்ப்பரித்து எழு
அன்னியனை அழித்துவிடு
எங்கள்மண் ணை அன்னியன் ஆக்கிவிட்டான் காண்டவப்பிரஸ்தம் .
அதில் அமைத்திடுவோமபுது் இந்திரப்பிரஸ்தம்.
எம்மண் குருச்ஷேத்திரமமுடிந்த அஸ்தினாபுரம்
அதில்கட்டி எழுப்புவோம் புது நகரம்
எங்கள் மயிலிட்டியில் அமைத்திடுவோம்
புதிய துவாரகை.....
மயிலை சுதா நவம்
அடங்காத்தமிழனை அழித்துச்சென்றாயே
ஆண்டதமிழினம் மாண்டுபோனதே
உவகையோடுவாழ்ந்தவரை
உறக்கத்தில் அழித்தாயே.
தாயின்மடியே தஞ்சமெனவாழ்ந்தவரை
தண்ணீரில் மூழ்கடித்தாயே.
நீ அள்ளிச்சென்றவர்களுக்கு
நாம் கொள்ளி கூட வைக்கலையே...
கொத்துக்கொத்தாக விதைத்தோமே..
உப்பிட்டகடல்தாயே அவர்கள்
உயிரையும் எடுத்தாயே.
உன்மடிவாழ்ந்தவர்வாழ்வில்
உலைவைத்தாயே..
பூத்துக்குலுங்கிய பூக்களை
கசக்கி எறிந்தாயே
உன்னதவாழ்வை நோக்கியவர் வாழ்வை
உதிர வைத்தாயே
கூற்றுவனே !
உனக்கேன் எம்மீது இந்தகொலைவெறி.
கொத்துக்கொத்தாய் எம்மவரை பறித்தாயே.
எங்கள் சிங்காரதேசத்தை சிதைத்தாயே.
எமை தாலாட்டிய கடலன்னையே
ஏன்பொங்கியெழுந்தாய்?
யாரிட்டார் ஆணை
அழித்துவிட்டாய் எம் வாழ்வை.
ஆறவில்லை எம் நெஞ்சங்கள்
அடங்கவில்லை துயரம்
ஆண்டதமிழனை அடக்கநினைத்தாயே.
மாண்டுபோனவரை மீளத்தருவாயோ.???
நீ எம்மவர் உயிரை குடித்தநாள்
எம்வாழ்வில் அது கறுப்புநாள்.
ஆழிப்பேரலையில்
மீளாத்துயில் கொண்டவரே!!
ஆண்டுகள் ஒன்பது ஆனபோதும்
ஆறாது எம்நெஞ்சில் சோகம்.
ஊழித்தாண்டவமாடிய ஆழிப்பேரலையே
புனல்கொண்டு எமை அழித்தாலும்
புதுஜென்மம் நாமெடுப்போம்.
ஆழிவாய்திறந்து பேரலை அடித்தாலும்
நாம் அடங்கிவிடமாட்டோம்.
அழிந்துவிட்ட தேசமதில்
புனரநிர்மானம் செய்தோமே.
மீண்டும் எம்மை சூழ்ந்ததே கார்மேகம்.
பலசுனாமிகள் சேர்ந்து எமைதாக்கியதே.
நந்திக்கடலும்,முள்ளிவாய்க்காலும்
எங்கள் குருச்ஷேத்திரமானதே.
அங்கேதானே விதைத்தோம் எங்கள் விதைகளை.
காலனே உனக்கும் காலம் வராதோ?
எங்கள் காவலர்களை காவுகொண்டாயே.
கடலம்மா கண்திறந்து பாராயோ?
தாய்மண்ணின் தடைகளை
உடைக்காயோ.
மயிலைமண்ணை சூழ்ந்த மாற்றானை
அழிக்கப்புறப்படு.
பொங்கியெழு கடலம்மா
அழிப்பேரலையாய் ஆர்ப்பரித்து எழு
அன்னியனை அழித்துவிடு
எங்கள்மண் ணை அன்னியன் ஆக்கிவிட்டான் காண்டவப்பிரஸ்தம் .
அதில் அமைத்திடுவோமபுது் இந்திரப்பிரஸ்தம்.
எம்மண் குருச்ஷேத்திரமமுடிந்த அஸ்தினாபுரம்
அதில்கட்டி எழுப்புவோம் புது நகரம்
எங்கள் மயிலிட்டியில் அமைத்திடுவோம்
புதிய துவாரகை.....
மயிலை சுதா நவம்