நமது மயிலிட்டி
  • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
    • நல்வரவு! 2013,12,11
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு"
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை

வாழ்க்கை வெறுமையாகி விட்டது எனப்புது புலம்பலுடன் அப்பா! "தயாநிதி தம்பையா"

15/8/2014

0 Comments

 
Picture
பெயரளவிலை நானும் உங்களைப் போல ஒர் குடும்பஸ்தன் தான். நிறைவான மனைவி. அழகான பிள்ளைகள். குறிப்பிட்ட காலம் வரை எல்லாமே அழகிய நகர்வாய்த் தான் இருந்தது. வசதிகளை பெருக்கிட நோக்கமெதுவும் பெரிசாய் ஆரம்பத்திலை இருக்கேல்லை என்றது உண்மை தான். இப்ப இங்கை இருக்கிற வீட்டை வாங்கிற வரைக்கும் சமச் சீரான வாழ்க்கை எங்கடை இல்லறத்தை தன்னுடைய ஆட்சிக்கை தான் வைச்சிருந்தது என்பது அப்பட்டமான உண்மை.

Photo
அது ஒரு கனாக்காலம்! இப்ப நினத்தாலும் இனிமை பெருமை சேர்க்கின்றது.நான் வேலை முடிந்து வீட்டுக்கு வரும் வரையிலை எனது மனைவியின் காத்திருப்பும் நித்திரை முளிப்பும் எனக்கு மிகவும் கடினமாகத் தான் இருந்தது. சொல்லிப் பயன் இல்லை.. அவா என் மீது அள்ளிச் சொரிஞ்ச அன்பு அமைதி காத்தது. என்னைக் கண்டதும் அடுப்பு சூடாகும். கை கால் முகம் கழுவி விட்டு வருவதற்குள் மேசையிலை ஆவி பறக்கச் சாப்பாடு பரவிக் கிடக்கும்.
கலியாணம் முற்றுகையிடப் பட்ட கோட்டை! உள்ளே இருப்பவர்கள் வெளியே வரத் துடிக்கின்றார்கள்! வெளியே இருப்பவர்கள் உள்ளே நுழையத் துடிக்கின்றார்கள் என்ற வாக்கியம் பெரிசுகளின் சுத்துமாத்து என்று தான் உண்மையிலை எண்ணத் தோன்றியது. வாழ்க்கை ஒரு சறுக்கு மரம் அது அடிக்கடி சறுக்கும் நிதானமாய் பிடித்துக் கொள் என்று புத்திமதி சொன்னவையும் இல்லாமல் இல்லை. இதையும் தாண்டி வாழ்க்கை ஒரு கண்ணாடிக் கார் அதைக் கவனமாக ஓட்ட வேணும் என்று மிரட்டியவையும் இருக்கினம். எனக்கு அது அப்ப வேத வாக்காய் தெரியேல்லை. சுவை தான் அதிகமாய் இருந்தது.
நாள்ப்பட நாள்ப்பட பொருளாதாரப் பேய் என்ரை வீட்டுக்கையும் அழையா விருந்தாளியாய் நுழைஞ்சிட்டார். இவர் எப்படி உள்ளை வந்தவர் என்ற ஆய்வைத் தொடங்க முதலே விடை முன்னாலை விரியத் தொடங்கீட்டுது. எல்லாமே பொதுவான தேவைகள் என்று தான் எனக்குப் பட்டது. பிள்ளைகளின் அதி வேக வளர்ச்சி! தனியார் பாடசாலை அனுமதி! வீட்டுக் கராச்சுக்குள்ளை பவ்வியமாக நிறுத்தப் பட்ட அந்த அழகான மகிழூர்தி! ஆளுக்கொரு கைத் தொலை பேசி! இவர்களோடு தொடர்பில் இருக்க அம்மாக்கு கடைசியாய் வந்த புது மொடல் ஐபோன்! ஆளுக்கொரு அறை! அடம் பிடித்து வாங்கிய கொம்பீற்றர்கள்..... வீட்டிலை சும்மா இருக்கிற அம்மாவிற்கு பொழுது போக்கிட சண் ரிவி, கலைஞர் ரிவி, ஜெயா ரிவி அதையும் தாண்டி அம்மாக்கு ஒரு ஐபாட்.............................................................................
வருமானத்தில் எந்தவித ஏற்றமும் இல்லாமல் வீட்டுக்குள் இத்தனை ஏற்பாடுகள். ஈடு செய்வதற்கு எனது உறக்க நேரம் சுருக்கப் பட்டது. பிரிவோம் சந்திப்போம்! 

அவசரப்படாதயுங்கோ! இது எனது மனைவியைக் கடைசியாகக் கவர்ந்த தொலைக் காட்சி தொடர். இந்த நேரத்திலை எந்தக் கொம்பனும் தொந்தரவு செய்யக் கூடாது. மீறி நடந்தால் விருந்தாளியாக பத்திரகாளி அம்மன் அடுப்படிக்குள்ளை அவலட்சண நடனம் ஆரம்பம் தான்.
Photo
ஆளுக்கொரு சாப்பாடு! அடிக்கடி ரேக்கவே தான். அதிகம் பிடிச்சதும் அலுக்காமல் போனதும் கே எவ் சி தான். நடுக் கோலுக்குள்ளை தனிச்சுப் போன அந்த அழகான கண்ணாடி மேசை தேடுவாரற்று தேம்பித் தேம்பி அழுதபடி தான்.. வாயிருந்தால் இப்ப என்னோடை சேர்ந்து நிறைய உண்மைகளை உங்களுக்கு அதுகும் சொல்லும்.
Photo
கிடைக்கின்ற ஓய்விலை தனிமை என்னை விரட்டி விரட்டிக் கொல்லத் தொடங்கியது. சராசரி இனிமைக்கு இருட்டடிப்பு! வரவேற்பு வற்றிப் போச்சு! விதண்டா வாதமும் வாய்ச் சண்டைகளும் மலிஞ்சு போச்சு! தனுஷ் நடிச்ச வேலை இல்லாத பட்டதாரி படத்தை திரையில பார்க்க தன்னோடை வரேல்லை என்றது தான் இப்போதைக்கு கடைசி யுத்தம் என்றால் பாருங்கோவன்.. 
Photo
முக நூலில் 300 நண்பர்கள் நண்பிகள் உட்பட. அதற்க்குள் நான் அடங்காமல் போனது எனது துற்பாக்கியம்.. இப்பிடியான பொறிக்குள் எனது மனைவி சிக்கியதால் என்னோடு பேச நேரமில்லை என்பது தான் நிஜம்..
அளக்கப் பட்டது 24 மணி நேரம் தானே. அவாவும் என்ன செய்ய முடியும். நடிகர் சூரியா அடிக்கடி சொல்லுவது போல் மாற்றம் ஒன்றே மாறாதது. அது எப்பிடியான மாற்றம் என்று என்னாலை இதுவரை கண்டு பிக்க முடியேல்லை. இதைப் படித்து முடித்த பின் நீங்களாவது சொல்லுங்கள் அந்த மாற்றம் என்னவென்று. இது எனக்காக மட்டும் இல்லை. என்னைப் போல முட்டுப் படுறவைக்கு உதவும் என்பதற்காகத்தான். இருந்தாலும் என்னில் வைத்திருக்கும் பாசம் வற்றவில்லையாம் என்பது பிள்ளைகளின் கணிப்பு.
புதுத் தகவல்! சுமைகளைப் பகிர்ந்து கொள்ள எடுத்த முற்சியில் அவாவிற்கு பெரு வெற்றி.. வேலை ஒன்று கிடைத்து விட்டது. அதனால் இப்போ எங்களுக்குள் தரிசணக் குளப்பம். இருவரும் ஒரு வீட்டுக்குள்ளை தான் இருக்கின்றோமா என்பதுகேலிக்குரிய கேள்வியாய் விடையின்றி நீளுது.. பிள்ளைகளும் இப்ப அடிக்கடி விருந்தாளியாய்த் தான் வந்து போகின்றார்கள். எங்களுக்குள்ளையும் மொழிப் பிரச்சினை என்ன கேட்டாலும் தலையை தலையை ஆட்டுகின்றார்கள். சொந்தங்கள் தெரியாத, தாயக உணர்வில்லாத தளத்திலை தான் அவர்களின் தற்போதைய நவீன பயணம்..
கொஞ்சம் பொறுங்கோ. அழைப்பிலை திருமதி கனெக்ஸ். யாரென்ண்டு யோசிக்காதயுங்கோ என்ரை வைவ் தான். எடுக்கப் பிந்திப் போனதாலை எஸ் எம் எஸ் போட்டிருக்கின்றா! கப்பி நியூஸ் தான். கார் லைசன்ஸ் பாஸ் பண்ணீட்டாவாம்.. உண்மையிலை திறமைசாலி தான். எப்பிடியும் முன்னுக்கு வந்திடுவா. என்னைப் போல எங்கட காரும் பழைய மொடல் தான். இப்பதான் எல்லாத்தையும் இன்ரர்னெற். முகநூல் என்று சுகமாய் தேடிக் கொள்ளலாம். அப்ப கெதியிலை புதிசாய் ஒன்று வந்திறங்கப் போகின்றது.. நான் காரைச் சொல்லுறன்..

கன நேரம் இருந்து எழுதினது நாரீக்கை நறுக்கெண்டு நோகின்றது. கொஞ்ச நாளைக்கு முதல் தானே நட்டு பூட்டினது விட்டுப் போச்சோ தெரியேல்லை. இப்ப கொஞ்ச நாளாய் நான் பழகின எல்லாவற்றிலையும் வெறுமை தான் கொலுவிருக்குது. வாழ்க்கை பசுமையை இழக்கிற மாதிரி உள்ளூர உணர்வு. கடந்த காலங்களை இரை மீட்கிறதிலையும் ஒரு சுகம் இருக்கதான் செய்கின்றது இல்லையா!

"ஏனப்பா! இப்ப எத்தினை மணி? எனக்காண்டி நித்திரை முழிச்சுக் காத்திருக்க வேண்டாம் என்று எத்தினை தரம் சொல்லி இருப்பன். கேட்க மாட்டீரே!" இப்பிடி நான் அடிக்கடி அவாவுக்கு சொன்ன திருவாசகம். இப்ப நினைச்சுப் பார்த்தன் சிரிப்பாய் போச்சு....................

அனேகமானவர்களுக்கு வலிகள் வரப் பிரசாதமாகிக் கொண்டிருக்கின்றது.. வாறன்.



8.08.2014.
தயாநிதி..

இந்தப் பக்கம் Hit Counter by Digits தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
Photo
Photo
Photo
Photo
Photo
Photo
0 Comments



Leave a Reply.

    Photo

    என்னைப்பற்றி

    தயாநிதி தம்பையா
    ஈழத்துக் கலைஞர்
    நடிகர், எழுத்தாளர், தமிழ் ஆர்வலர்

    பதிவுகள்

    October 2014
    August 2014

    முழுப்பதிவுகள்

    All

நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர் web counter
© 2011-22 ourmyliddy.com