ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்தசி என்ற 14-ம் நாளில் தீபாவளி வருகிறது. அன்றிரவு நரக சதுர்தசி ஸ்னானம் என்று தீபாவளி கங்கா ஸ்னானம் செய்கிறோம். மறுநாள் அமாவாசை வருகிறது. இதற்குப் பிறகு வரும் வளர்பிறையில் பிரதமை, துவிதியை, த்ருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி எனும் ஆறு நாட்களில் கந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை ஆண்டுக்கு ஆண்டு கந்தர் சஷ்டி சமயத்தில் 6 நாட்கள் மட்டும் அனுஷ்டிப்பவர்களும் உண்டு. இந்த கந்த சஷ்டி தொடங்கி மறு கந்த சஷ்டி வரை மாதாமாதம் வரும் சுக்ல சஷ்டியில் ஒரு வருடம் தொடர்ந்து விரதமிருப்பவர்களும் உண்டு. இது போல 6 ஆண்டுகள் 12 ஆண்டுகள் என்று கணக்கு வைத்து தொடர்ந்து விரதம் அனுஷ்டிப்பவர்களும் உண்டு.
0 Comments
தீபாவளி என்றாலே அனைவருக்கும் மனதில் ஒருவித கொண்டாட்டம். ஏனெனில் அந்த நாளன்று புதிய ஆடை அணிந்து, பலகாரம் செய்து, பட்டாசு வெடித்து, அந்த தினத்தை கோலாகலமாக கொண்டாடுவோம். அதிலும் இந்த நாளன்று வீட்டிற்கு விருந்தினர் பலர் வருகைத் தந்து, தீபாவளியை குடும்பபத்தோடு கொண்டாவார்கள். ஆமாம், இந்த தீபாவளி எதற்கு கொண்டாடுகின்றோம் என்று தெரியுமா? |
முகவுரைஎனதன்பு உள்ளங்களுக்கு பணிவான வணக்கம். வாழ்க நலமுடனும், வளமுடனும். என்னுடைய ஆக்கங்களுக்கு மயிலிட்டி இணையத்தில் பதிவுசெய்வதற்கு வழிவகுத்துத்தந்த மயிலிட்டி ஒன்றிய தலைவர் கௌசிகன் அவர்களுக்கம், சதானந்தன் அவர்களுக்கம், அங்கத்தவர்களுக்கும், திரு அருண்குமார் அவர்களுக்கும் எனது நன்றி மாலையை சமர்பிக்கிறேன். இதில் என்னுடைய ஆக்கங்கள் மட்டுமல்லாமல் நான் படித்து சுவைத்தவைகள், படித்ததில் பிடித்தவற்றையும் பதிவுசெய்கிறேன். தவறுகள் இருப்பின் மன்னிக்கவும். என்றும் நன்றியுடன் உங்களில் ஒருவன் சௌந்தா.. பதிவுகள்
May 2016
முழுப் பதிவுகள் |