பாளை கிழித்துக் கீறலாக்கி
பழைய துணியால் தலைப்பாகையிட்டு
எண்ணெய் தோய்த்துத் தீயைப்
பற்ற வைத்துக் கோடியிலும்
பந்தம் ஏற்றினோம் மகிழ்வாக!!
வாழைக் குற்றி வெட்டி
வாசலில் நிறுத்தி வைத்து
சிரட்டையில் எண்ணெயும் துணிகளுமாய்
சிகரமாய்ப் பந்தம் கொழுத்துவோம்.
சிலிர்க்கும் அனுபவங்கள் மறக்காதவை!!
பழைய துணியால் தலைப்பாகையிட்டு
எண்ணெய் தோய்த்துத் தீயைப்
பற்ற வைத்துக் கோடியிலும்
பந்தம் ஏற்றினோம் மகிழ்வாக!!
வாழைக் குற்றி வெட்டி
வாசலில் நிறுத்தி வைத்து
சிரட்டையில் எண்ணெயும் துணிகளுமாய்
சிகரமாய்ப் பந்தம் கொழுத்துவோம்.
சிலிர்க்கும் அனுபவங்கள் மறக்காதவை!!
காலமெல்லாம் மாறிப்போச்சு
நினைவெல்லாம் மறந்து
அமைதி காணும் காலம் ஆச்சு
அடுத்த வீட்டு தீபமும் காட்சியாச்சு !!
எல்லாம் கனவாகிப் போன காலமாச்சு!!
எம்நிலத்தில் தீபமேற்றும் ஆசையெல்லாம்
சேர்த்து வைத்த நினைவாகிப்போச்சு
அந்நியனின் காலடியில் தாய்நிலம்
எங்கிருந்தோ வாடுகின்றோம்!!
என்செய்வோம் நாம் அநாதியானவர்!!
ஓலைக்குடிசையிலே ஒற்றை விளக்குடனே
வீட்டுக்கு வெளிச்சமிட சேர்த்துவைத்த
எண்ணை மட்டும் தானே இருக்கிறது
எப்படித்தான் அவன் தீபமேற்றுவான்!!
என்ன செய்வான் ஏழையவன்!!
ஒருமகன் மாவீரன் விடுதலைக்காய்
இன்னொருவன் சிறையினிலே
அன்னையவள் தினம் பட்டியினில்
என்செய்வாள் அவள் தனிஒருத்தி!!
எப்படித்தான் மனம் வரும் தீபமேற்ற?!
தமிழன் வீட்டினிலே தீபமேற்றி
மகிழ்வுடனே வாழ்வு மெய்க்க
காலம்தான் கனிந்திடுமோ
எம்வாழ்வும் மலர்ந்திடுமா
காத்திருப்போம் கனவுடனே.....
- மயிலையூர்தனு -
நினைவெல்லாம் மறந்து
அமைதி காணும் காலம் ஆச்சு
அடுத்த வீட்டு தீபமும் காட்சியாச்சு !!
எல்லாம் கனவாகிப் போன காலமாச்சு!!
எம்நிலத்தில் தீபமேற்றும் ஆசையெல்லாம்
சேர்த்து வைத்த நினைவாகிப்போச்சு
அந்நியனின் காலடியில் தாய்நிலம்
எங்கிருந்தோ வாடுகின்றோம்!!
என்செய்வோம் நாம் அநாதியானவர்!!
ஓலைக்குடிசையிலே ஒற்றை விளக்குடனே
வீட்டுக்கு வெளிச்சமிட சேர்த்துவைத்த
எண்ணை மட்டும் தானே இருக்கிறது
எப்படித்தான் அவன் தீபமேற்றுவான்!!
என்ன செய்வான் ஏழையவன்!!
ஒருமகன் மாவீரன் விடுதலைக்காய்
இன்னொருவன் சிறையினிலே
அன்னையவள் தினம் பட்டியினில்
என்செய்வாள் அவள் தனிஒருத்தி!!
எப்படித்தான் மனம் வரும் தீபமேற்ற?!
தமிழன் வீட்டினிலே தீபமேற்றி
மகிழ்வுடனே வாழ்வு மெய்க்க
காலம்தான் கனிந்திடுமோ
எம்வாழ்வும் மலர்ந்திடுமா
காத்திருப்போம் கனவுடனே.....
- மயிலையூர்தனு -
இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.