தூ(து)க்கக் கலக்கத்திலும் சில தூக்கணாங்குருவிகள் கூட்டுக்குள்ளிருக்கும் முட்டையைக்
கண்ணயராமல் காக்கவென்று
காற்றில் பறந்தபடி அல்லாடும் கூடுகளைச் சுத்தித் திரிந்தபடி, கத்திச் சிறகடித்துக்
தங்கள் (இன) கருவைக் காத்தபடி
தலைகீழாய்த் தவமிருக்கின்றன...

கூட்டை நெருங்கி முட்டை குடிக்கக் கருநாகங்கள் காத்திருந்தும்,
வேட்டைப்பல் தெரிய சில
வெறிபிடித்த ஓநாய்கள் பார்த்திருந்தும்
ஆறுதல் சொல்வதாய்ச் சில அண்டங்காக்காக்கள் போலியாய் அலறித்திரிந்திருந்தும், தங்கள் கருவைக் காத்துக்கொள்ள இன்னமும் அவை அங்கேயே தவங்கிடக்கின்றன...
அடிக்கின்ற காற்றிலும் , எறிக்கின்ற வெயிலிலும், தெறிக்கின்ற மழையினிலும்
அந்தரத்தில் தொங்கும் கூடுகளின் நம்பிக்கைதருகின்ற ஆதாரமே அந்த ஒற்றை மரக்கிளைதான்...
நாளை ஒரு நாள்,
கூட்டுக்குள்ளிருக்கும் முட்டைகள் குஞ்சுகளாய் வெளிப்படலாம்...
வெளிவந்த குஞ்சுகள் இறக்கைகளை விரித்து விசாலமாய்
விடுதலைவானில் பறக்கலாம்...
சில வேளைகளில் தம்குஞ்சுகள் கூட்டுக்குள்ளேயே கொடிய கயமையால்
சிதைக்கப்பட்டிருந்தாலும்...,
எது நடக்குமோ அதுவரை
தங்கள் நெஞ்சக்கூடுகளில்
விடுதலையைச் சுமந்தபடி,
அந்தத் தூக்கணாங்குருவிகள் தலைகீழாய் நின்றேனும் தவம்புரியும் நம்பிக்கைகளை இன்னமும் இழந்துவிடாமல் காத்துக் கிடக்கின்றன...
மயிலையூர் தனு

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.