கண் இருந்தும்
பார்வை இல்லாதவனாய்..
காதிருந்தும்
கேட்க முடியாதவனாய்..
வாய் இருந்தும்
கதைக்கமுடியாதவனாய்..
நாம் ஊரில்லாதவர்கள்!
பார்வை இல்லாதவனாய்..
காதிருந்தும்
கேட்க முடியாதவனாய்..
வாய் இருந்தும்
கதைக்கமுடியாதவனாய்..
நாம் ஊரில்லாதவர்கள்!
வாடகை வீடுகளிலும்
வஞ்சனைகள் வந்துவிட
உதவிக்கும் உறவில்லை
உற்றாரும் தொலைவூரில்
வந்தவர் போனவரெல்லாம்
வந்தான் வரத்தான் என்று
வசைபாடி செல்கின்றனர்
நாம் ஊரில்லாதவர்கள்!
வருடங்கள் மாறுவதைப்போல்
பெட்டிகளை கட்டிக்கோண்டு
உறையுளையும் மாற்றுகிறோம்
கனவுகள் ஒருபக்கம்
கடன்தொல்லை மறுபக்கம்
சொந்த ஊர்க் கனவோடு
கடந்து செல்கின்றன காலங்கள்....
நாம் ஊரில்லாதவர்கள்!
மயிலையூர் தனு.
வஞ்சனைகள் வந்துவிட
உதவிக்கும் உறவில்லை
உற்றாரும் தொலைவூரில்
வந்தவர் போனவரெல்லாம்
வந்தான் வரத்தான் என்று
வசைபாடி செல்கின்றனர்
நாம் ஊரில்லாதவர்கள்!
வருடங்கள் மாறுவதைப்போல்
பெட்டிகளை கட்டிக்கோண்டு
உறையுளையும் மாற்றுகிறோம்
கனவுகள் ஒருபக்கம்
கடன்தொல்லை மறுபக்கம்
சொந்த ஊர்க் கனவோடு
கடந்து செல்கின்றன காலங்கள்....
நாம் ஊரில்லாதவர்கள்!
மயிலையூர் தனு.
இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.