அடக்குமுறை ஆட்சியில் எமக்கேது சுதந்திரம்?
எமது நிலத்தில் நாம் வாழ அனுமதியில்லாத தேசத்திலே
வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழர்களுக்கு சுதந்திரம் ஏது?
இல்லாத சுதந்திரத்தை கொண்டாடுவது எப்படி முடியும்?
எமது நிலத்தில் நாம் வாழ அனுமதியில்லாத தேசத்திலே
வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழர்களுக்கு சுதந்திரம் ஏது?
இல்லாத சுதந்திரத்தை கொண்டாடுவது எப்படி முடியும்?
|
உன்மையிலே தமிழர்களை இலங்கையின் குடிமக்களாக நினைத்திருந்தால்
பயங்கரவாதத்தடைச்சட்டம் என்றும் அவசரகாலச்சட்டம் என்றும் கூறி
பல்லாயிரம் அப்பாவித்தமிழ் இளைஞர்கள் யுவதிகள்
சிறைகளிலே அடைக்கப்பட்டிருக்கமாட்டர்கள்,
வெள்ளைக்கொடிகளுடன் சரணடைந்தவர்களை
சுட்டுத்தள்ளும் நாட்டில் சுதந்திரம் என்ற வார்த்தைக்கே இடமில்லை!
காணமாலாக்கப்பட்டவர்களுக்கு இதுவரை எந்தப்பதிலுமில்லை,
அவர்களுக்கு பதிலை வழங்கக்கோரியும்,
காணிகளை விடிவிக்ககோரியும்
வருடக்கணக்கில் வீதியில் இருக்கும் மக்களுக்கு
தீர்வு வழங்காமல் இழுத்தடிக்கும் நாட்டில்
நூற்றுக்கு மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள்
சிறுவர்களது எலும்புக்கூடுகள் என
இன்றுவரை கிடைத்துக்கொண்டிருக்க சுதந்திரதினம் எதற்கு?
மன்னிக்கவோ மறக்கவோ முடியாத அநீதிகளை
தமிழர்களுக்குச் செய்த சிங்களதேசம் இன்று
மறப்போம் மன்னிப்போம் என்று கூறுவதை
உணர்வுள்ள பாதிக்கப்பட்ட எந்த ஒரு தமிழனாலும்
ஏற்றுக்கொள்ள முடியாது.
சுதந்திரம் கேட்டோம் என்பதற்காக
சுட்டுத்தள்ளப்பட்டோம்
விடுதலை கேட்டோம் என்பதற்காக
விறகுகள் போல தறிக்கப்பட்டோம்
உரிமைகளைக் கேட்டோம் என்பதற்காக
விடியாத சிறைகளுக்குள்ளே அடைக்கப்பட்டோம்
சொந்த நிலங்களை கேக்கிறோம் என்பதற்காக
நீதிமன்றுக்கு அழைக்கப்படுகிறோம்
எதைச்சொல்வது? எப்படிச்சொல்வது ?
*
சிங்களதேசத்தால் தமிழினத்திற்கு
இழைக்கப்படும் அநீதிகளை
கூறி முடித்துவிட முடியாது!
மக்கள் அடிமைப்படுத்தப்படாமல்
தடைகளின்றி வாழ்தலே சுதந்திரம்!!
1948இலிருந்து முழுமையான சுதந்திரத்தை
இழந்துள்ள ஈழத்தமிழர்களாகிய நாங்கள்
பெப்ரவரி 04 ம் திகதியை கரிநாளாக அனுஷ்டிப்போம்!
கேப்பாப்பிலவில் நிலம்மீட்க போராடும்
உறவுகளுக்காய் ஒன்றிணைவோம் வாருங்கள்!
04.02.2019 காலை 10 மணியிலிருந்து கேப்பாப்பிலவு.
#wesupportkeppapilavu
- மணிவண்ணன் தனுசன்
- உலகத்தமிழ் மாணவர் ஒன்றியம்

இந்தப் பக்கம்
தடவை பார்வையிடப்பட்டுள்ளது.